மனசுக்குள் நீ – பாகம் 29 – மான்சி தொடர் கதைகள்

கிருபாவின் கண்ணீர் ரஞ்சனாவின் தோளில் வழிய,, ரஞ்சனாவின் கண்ணீர் கிருபாவின் நெஞ்சில் வழிந்து சட்டையை நனைத்தது,,

“ ப்ளீஸ் அழாதீங்க சார்,, தைரியமா இருங்க ” என்று கிருபாவின் முதுகை தடவிக்கொடுத்தாள் ரஞ்சனா

அவளின் ஆறுதலும், இதமான வருடலும் கிருபாவை ஆசுவாசப்படுத்தியது,, மெதுவாக அவளை விலக்கி விட்டு அங்கிருந்த சோபாவில் போய் பொத்தென்று அமர்ந்தான்

ரஞ்சனா முகத்தை முந்தானையால் துடைத்தபடி உள்ளே போய் சிறிது நேரத்தில் ஒரு தண்ணீர் சொம்பும் மறுகையில் ஈரமான ஒரு டர்க்கி டவலும் எடுத்து வந்தாள்

டவலை கிருபாவிடம் நீட்டி “ முகத்தை தொடைச்சிட்டு தண்ணி குடிங்க சார் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்” என்றாள்கிருபா மறுக்காமல் டவலை வாங்கி முகத்தை அழுந்த துடைத்தான்,, பிறகு தண்ணீரை வாங்கி பருகிவிட்டு பாத்திரத்தை அவளிடம் கொடுத்துவிட்டு “ ஸாரி ரஞ்சனா, என் கஷ்டத்தை சொல்லி உன்னையும் அழவச்சிட்டேன்” என்று குரலில் வருத்தத்துடன் கூறினான்

மறுபடியும் உள்ளே போய் கையிலிருந்தவற்றை வைத்துவிட்டு வந்து கிருபாவின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவள் “ என்னதான் ஆச்சு சார் மேடத்துக்கு,, டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க?” என்று ரஞ்சனா கேட்க

“ வசந்திக்கு ரத்தப் புற்றுநோய் வந்திருக்கு ரஞ்சனா,, அதுவும் கிட்டத்தட்ட மூனு நாலு வருஷமா இருந்திருக்கு,, எங்களுக்கு தெரியவேயில்லை,, இப்போ சமீபமா ஒரு நாலு மாசமா தான் ரொம்ப மெலிஞ்சு போன, எப்பவுமே ஒரு சோர்வு இருந்தது,, இப்பக்கூட நான்தான் வற்புறுத்தி ஆஸ்பிட்டல் கூட்டிப்போனேன்,,

இல்லேன்னா இன்னிக்கு வரைக்கும் அவளுக்கு என்னன்னு யாருக்குமே தெரியாம போயிருக்கும்,, புருஷன் பிள்ளைக்காக வாழ வேண்டியதுதான் ஆனா தனக்கு என்னன்னு கூட பார்க்காம எங்க சந்தோஷமே முக்கியம்னு இருந்திருக்கா,, இதை நெனைச்சே எனக்கு வேதனை இன்னும் அதிகமாகுது,, டாக்டர்ஸ் இனிமேல் எதுவும் செய்யமுடியாதுன்னு கையை விரிச்சுட்டாங்க ரஞ்சனா” என்ற கிருபா மறுபடியும் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தான்

ரஞ்சனாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை,, அவனுடன் சேர்ந்து அழுவதை தவிர,, சிறிதுநேரம் கழித்து “ மருந்து மாத்திரைகளின் உதவியால் கொஞ்ச நாட்களை தள்ளி போடமுடியுமே தவிர, வேற எதுவும் செய்ய முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்,, எனக்குள்ள ரொம்ப குற்றவுணர்வா இருக்கு ரஞ்சனா,, அவகிட்ட இத்தனைநாளா ரொம்ப சந்தோஷமா இருந்துட்டு அவ உடல்நிலையை கவனிக்காம இருந்துட்டேன்,, ஒவ்வொரு நிமிஷமும் என்னோட சந்தோஷமே முக்கியமா வாழ்ந்துகிட்டு இருந்தவ,, இப்பவும் இரவுநேரத்தில் என்னை நினைத்துதான் வருத்தப்படுறா ரஞ்சனா” என்று சங்கடமாக கிருபா பேசினான்அவனுடைய ஒவ்வொரு வார்த்தையிலும்,, ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும்,, மனைவியின் மீது அவன் வைத்திருக்கும் அன்பும் காதலும்தான் தெரிந்தது
அவனுக்கு ஆறுதல் சொல்லமுடியாமல் ரஞ்சனா தவிப்புடன் அமர்ந்திருக்க,,..

See also  பொம்மலாட்டம் - பாகம் 13 - மான்சி தொடர் கதைகள்

அவள் முகத்தை பார்த்து “ சரி என் பிரச்சினை இருக்கட்டும் ,, நீ ஏன் வயல் வேலையெல்லாம் செய்ற,, உன்னை யாரு அதையெல்லாம் செய்யச்சொன்னது,, ஏற்க்கனவே ரொம்ப வீக்கா இருக்கேன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க,, இப்போ இந்த மாதிரி வேலையெல்லாம் செய்தால் உடம்பு இன்னும் தான் வீக்காகும்,, இதோபார் ரஞ்சனா இனிமேல் என்னால வசந்தியை கவனிச்சுக்கவே நேரம் சரியாக இருக்கும்,, இங்கே அடிக்கடி வரமுடியாது,,

அதனால டெலிவரி வரைக்கும் நீதான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்,, இந்த மாதிரி வேலையெல்லாம் செய்து உன் பங்குக்கு நீ வேற என்னை வேதனைப் படுத்தாதே சரியா?” என்று குரலில் கடுமையுடன் கிருபா கேட்டதும், சரியென்று மெதுவாக தலையசைத்தாள் ரஞ்சனா

அதன்பிறகு வசந்தியின் ட்ரீட்மெண்ட் பற்றி சிறிதுநேரம் பேசியவன்,, இனிமேல் அவளுடனேயே இருக்கவேண்டும் என்பதால் இங்கே அடிக்கடி வரமுடியாது என்று கூறி , ரஞ்சனாவை ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்அவன் சொன்னது போலவே அடிக்கடி வருவதில்லை.. போன் செய்து ரஞ்சனாவின் நலனைப்பற்றி விசாரிப்பவன்,, வசந்தியின் தற்போதைய நிலையை பற்றி சொல்லுவான்,, அவன் குரலை கேட்பதே தனக்கு போதும் என்று நினைத்தாள் ரஞ்சனா

ஒருமுறை அந்த வழியாக எங்கே போனவன் வந்தான்,, தோட்டத்து வீட்டுக்கு ரஞ்சனாவை பார்க்க வந்தான்,, கிட்டத்தட்ட மூன்று மாதம் கழித்து கிருபாவை பார்த்ததும் ரஞ்சனாவுக்கு கண்ணீரே வந்துவிட்டது,, அவனை பார்த்த சந்தோஷத்தில் தன்நிலையை மறந்து வேகமாக வந்து அவன் கையை பற்றிக் கொண்டு “ எப்படி இருக்கீங்க” என்றவள் பற்றியிருந்த கையை கிருபா உற்று நோக்கவும்,, சுதாரித்துக்கொண்டு சங்கடத்துடன் கையை விடுவித்தாள்

கிருபாவுக்கு அவள் மனசும் எதிர்பார்ப்பும் ஓரளவுக்கு புரிந்தாலும் எதுவுமே செய்யமுடியாத நிலையில் இருந்தான்,, தன்னையறியாமல் ரஞ்சனாவுக்கு தன் மனதின் ஒரு ஓரத்தில் இடமளித்து விட்டதை அவனும் உணர்ந்தான்,, ஆனால் தன் குடும்ப கௌரவமும், வசந்தியின் மேல் உள்ள அன்பும் ,, சத்யன் மேல் உள்ள பாசமும், ரஞ்சனாவின் நினைவுகள் அவன் மனதில் முழுமையாக பரவாமல் அணை போட்டு வைத்திருந்தது

அவளுடைய அமைதியான முகமும்,, தனது பரிதாபமான நிலையை வெளிக்காட்டாமல் தன்மானத்துடன் வாழ நினைக்கும் பாங்கும்,, தன்னுடைய துக்கமறிந்து தனக்கு அவள் கூறும் ஆறுதல்களும்,, இந்து எட்டு மாதங்களாக ஒரு பார்வைகூட தவறாக பார்த்து அவனை தன்வசப்படுத்த முயலாத அவளின் நேர்மையும் கிருபாவை அவள் பக்கமாக சிறுகச்சிறுக ஈர்த்தது

ரஞ்சனா அவனை பற்றியிருந்த கையை சங்கடத்துடன் விட்டதும்,, மறுபடியும் அவள் கையை பற்றி ஆறுதலளிக்க எழுந்த ஆர்வத்தை அடக்கிக்கொண்டு “ நீ எப்படி இருக்க ரஞ்சனா?,, கரெக்டா செக்கப்புக்கு போறியா? குழந்தை நல்லாருக்கா? ,, என்று கேட்டுவிட்டு முன்பைவிட இப்போது இருமடங்காகிவிட்ட அவளின் பெரிய வயிற்றை குனிந்து பார்த்தான்,,கிருபா தனது வயிற்றை பார்த்ததும் ரஞ்சனாவுக்கு இயல்பாக வந்த கூச்சத்துடன் தலைகவிழ்ந்து “ ம் அதெல்லாம் கரெக்டா போறேன்,, குழந்தை நல்லாருக்குன்னு சொன்னாங்க” என்றாள்

See also  மான்சிக்காக - பாகம் 21 - மான்சி கதைகள்

அதன்பிறகு இருவருக்கும் இடையே திடீரென்று ஒரு மவுனம் வந்து அமர்ந்தது,, அவன் அமைதியாக பிரம்பு சோபாவில் அமர்ந்திருக்க,, அவள் முற்றத்து தூணை பிடித்துக்கொண்டு தலைகவிழ்ந்து நின்றிருந்தாள். எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் கிருபாவின் இந்த மவுனம் ரஞ்சனாவுக்கு வியப்பாக இருந்தது,, அவன் முகத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை அடக்கிக்கொண்டு அப்படியே நின்றிருந்தாள்

சிறிதுநேர அமைதிக்கு பிறகு எழுந்துகொண்ட கிருபா “ நான் கிளம்பட்டுமா ரஞ்சனா,, வசந்திக்கு மெடிசன் எடுத்து குடுக்கனும்” என்று கூறிவிட்டு அவளின் பதிலுக்காக நின்றிருந்தான்

அதற்க்கு மேலும் மவுனமாக இருப்பது சரியில்லை என்று உணர்ந்த ரஞ்சனா “ ம் கிளம்புங்க,, வசந்தி மேடத்தை நான் ரொம்ப விசாரித்ததா சொல்லுங்க,, அவங்களை பார்க்க வரனும்னு ஆசையா இருக்கு,, ஆனா நீங்கதான் வேண்டாம்னு சொல்றீங்க” என்றால் சங்கடத்துடன்“ வேண்டாம் ரஞ்சனா நீ இருக்குற நிலையில அங்கே வரவேண்டாம்,, பலரோட பேச்சு பதில் சொல்லவேண்டியிருக்கும்” என்றான் கிருபா

அவன் சொல்வது நூறுசதம் உண்மை என்பதால் மேற்க்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியா அவனை வழியனுப்பு வெளியே வந்தாள்,,

Leave a Comment

error: read more !!