மனசுக்குள் நீ – பாகம் 28 – மான்சி தொடர் கதைகள்

“ என்ன ரஞ்சனா நான் உன்னோட புருஷன் சொன்னதை நினைச்சு அழுகிறாயா?” என்று கேட்டான்

அவள் எதுவும் பேசாமல் இருக்க,, கடந்து சென்ற ஒரு வாகனத்துக்கு வழிவிட்ட படி “ இதோ பார் ரஞ்சனா நான் தப்பான எண்ணத்தில் அப்படி சொல்லலை இதுவும் ஒரு உதவிதான்,,

விபத்து நடந்து ஆபத்தில் இருக்கும் ஒருத்தருக்கு நாம எந்த உறவும் இல்லேன்னா கூட ரத்தம் கொடுத்து உதவுறோமே அதுபோல தான் இதுவும்,, அதனால மனசைப் போட்டு குழப்பிக்காமல் நிம்மதியா இரும்மா” என்றான் அன்பான குரலில்அவன் குரலில் இருந்த அன்பா,, அல்லது அவன் பேச்சில் இருந்த யதார்த்தமோ,, ரஞ்சனாவின் மனதுக்கு உண்மையாகவே நிம்மதியை தந்தது,, முகத்தை புறங்கையால் துடைத்துக்கொண்டு “ நன்றி சார்” என்றாள்

ஆனால் அந்த நன்றியை ஏற்றுக்கொண்ட பாவனை கிருபாவின் முகத்தில் இல்லை,, முகம் கடுமையாக இருக்க, அந்த கடுமையை காரின் ஓட்டத்தில் கான்பித்தான்

‘ இப்போ என்ன சொன்னோம்னு இவர் முகம் இப்படியிருக்கு என்று எண்ணி குழம்பியபடி “ என்னாச்சு சார்” என்றாள் லேசான உதறலோடு

வெடுக்கென்று திரும்பி அவளைப்பார்த்து “ ம் இனிமேல் என்னை சார்னு கூப்பிடாதே,, அங்க உன் புருஷன்னு கையெழுத்து போட்டுட்டு வந்திருக்கேன்,, இப்போ நீ என்னை சார்னு கூப்பிட்டா வெளங்கும்” என்று குரலில் கடுமையை கலந்து பேசினான்

‘ஓ இதுதான் கோபமா’ என்று நினைத்து “ சரி இனிமேல் கூப்பிடலை” என்றவளுக்கு ‘ ஆனா ஏன் கூப்பிடக்கூடாது’ என்று தோன்றினாலும் அவனிடம் கேட்கவில்லை

இப்போது கிருபாவின் முகம் இயல்புக்கு மாற “ ரஞ்சனா நீ ரொம்ப வீக்கா இருக்கியாம் டாக்டர் கொடுத்த மருந்தை ஒழுங்கா சாப்பிடு,, ஏற்கனவே அங்க வசந்திக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடுது,, இதுல நீவேற எதையாவது இழுத்து வச்சிக்காத,, என்னால அடிக்கடி ஓடியார முடியாது,, அன்னம்மாவை கூட்டிக்கிட்டு அப்பப்போ ஆஸ்பிட்டல் போய்ப்பார்” என்று உரிமையோடு கிருபா சொல்லிகொண்டு வர..ஏனோ ரஞ்சனாவுக்கு அந்த உரிமை வரண்ட மனதுக்கு இதமாக இருந்தாலும்,, வசந்திக்கு உடம்பு சரியில்லை என்றதும் “ ஏன் மேடத்துக்கு என்னாச்சு,, டாக்டரை பார்த்தீங்களா?” என்று பதட்டமாக விசாரித்தாள்

உதட்டைப் பிதுக்கிய கிருபா “ என்னாச்சுன்னு தெரியலை,, அடிக்கடி வாந்தி எடுக்குற,, சாப்பாடே எடுத்துக்கலை,, எல்லா டெஸ்ட்டும் எடுத்திருக்காங்க,, நாளை காலையில ரிசல்ட் சொல்லுவாங்க” என்று கிருபா வருத்தமாக கூறினான்

See also  சுவாதி என் காதலி - பாகம் 58 - தமிழ் காமக்கதைகள்

“ ரிசல்ட் வந்ததும் மேடத்துக்கு என்ன ப்ராப்ளம்னு எனக்கு சொல்லுங்க,, ஆனா அவங்களோட நல்ல மனசுக்கு எதுவுமே வராது” என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள்

அதன்பிறகு இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை,, வீடு வந்ததும் ரஞ்சனா இறங்கிக்கொள்ள ,, “ மருந்துகளை மறக்காமல் சாப்பிடு ரஞ்சனா” என்று மறுபடியும் ஒருமுறை ஞாபகப்படுத்திவிட்டு கிளம்பினான் கிருபா
மறுநாள் காலை கிருபாவின் போனுக்காக காத்திருந்தாள் ரஞ்சனா,, மதியம் ஒரு மணியாகியும் அவன் போன் செய்யவில்லை என்றதும் இவளே அவனுக்கு போன் செய்தாள்

ஆனால் கிருபா எடுக்கவில்லை,, ரஞ்சனாவை பதட்டம் வந்து தொற்றிக்கொள்ள,, கடவுளே வசந்தி மேடத்துக்கு எந்த நோயும் இருக்ககூடாது,, அவங்க நூறு வருஷம் கிருபா சார்கூட நல்லபடியா வாழனும் என்று மனதுக்குள் பிராத்தனை செய்தபடி மறுபடியும் கிருபாவுக்கு கால் செய்தாள்

இந்த முறை கிருபா இரண்டாவது ரிங்கிலேயே எடுத்துவிட்டான் “ ம் சொல்லு ரஞ்சனா” என்ற அவன் குரலிலேயே ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று உறுதியாகிவிட,, பயத்துடன் “ மேடத்துக்கு என்ன சார் ஆச்சு,, நல்லாருக்காங்க தானே” என்று கவலையுடன் கேட்டாள்“ மேடம் நம்மளை விட்டுட்டு சீக்கிரமா போய்ச்சேரப்போறா,, அவ்வளவுதான் என் வசந்தியோட வாழ்க்கை முடிஞ்சுபோச்சு ரஞ்சனா” என்று சொல்லிவிட்டு கிருபா ஓவென்று அலறி கலங்கி அழுதான்

ரஞ்சனாவுக்கு ஒன்றுமே புரியவில்லை,, கையில் இருந்த போன் நடுக்கத்தால் விழுந்துவிடும் போலிருக்க, அழுத்தமாக பற்றிக்கொண்டு “ என்ன சார் சொல்றீங்க,, எனக்கு ரொம்ப பயமா இருக்கே,, நான் அங்கே வரவா?” என்று ரஞ்சனா கேட்டாள்

“ வேண்டாம் ரஞ்சனா நீ இருக்கும் நிலையில வரவேண்டாம்.. நான் ரெண்டுநாள் கழிச்சு வர்றேன்,, வந்து என்னன்னு சொல்றேன்” என்று கூறிவிட்டு போன் காலை கட் செய்தான் கிருபா

ரஞ்சனா அந்த இரண்டு நாட்களும் கிருபா வசந்திக்காக கண்ணீரில் கறைந்தாள்,, வசந்திக்கு எதுவும் ஆகக்கூடாது கடவுளே என்று ஜெபம் போல அவள் மனது சொல்லிகொண்டு இருந்தது

அன்று மாலை தனது ஆறுமாத வயிற்றை தூக்கிக்கொண்டு அன்னம்மாவுக்கு வயலில் உதவி செய்துகொண்டு இருந்தாள்,, தூரத்தில் கிருபாவின் கார் வருவது தெரியாமல் அன்னம்மாவின் சிறுவயது கதையை கேட்டபடி வரப்பில் அமர்ந்து உளுந்தங்காய்களை பறித்துக்கொண்டு இருந்தால் ரஞ்சனா

காரை நிறுத்திய கிருபா வீடு பூட்டியிருப்பதை பார்த்துவிட்டு வயலுக்கு வந்தான்,, கொளுத்தும் வெயிலில் தலையில் துணியால் முக்காடிட்டுக் கொண்டு வரப்பில் அமர்ந்து வேலை செய்த ரஞ்சனாவை பார்த்ததும் வேகமாக அருகில் வந்தான்

See also  மனசுக்குள் நீ - பாகம் 11 - மான்சி தொடர் கதைகள்

கிருபா வரும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்த ரஞ்சனா “ வாங்க சார்” என்றாள்“ நான் வர்றது இருக்கட்டும், நீ ஏன் இப்படி வெயில்ல உட்கார்ந்து வேலை செய்ற,, உன்னை யாரு இதெல்லாம் பார்க்கச் சொன்னது” என்று கோபமாய் கத்தியவன் குனிந்து அவள் அக்குளில் கைவிட்டு பலமாக பற்றி ஒரே கையால் அவளை தூக்கி நிறுத்தினான்

அவனின் கோபம் ரஞ்சனா இதுவரை பார்த்தறியாதது,, அதிர்ச்சியுடன் அவனையே பார்த்தாள்,, அப்போதுதான் அவளுக்கு புரிந்தது கிருபா ரொம்பவே மாறியிருந்தான்,, எப்போதும் மழமழவென்று இருக்கும் தாடையில் மூன்றுநாள் ரோம வளர்ச்சி,, பளிச்சென்று சிரிக்கும் கண்கள் ஜீவனற்று சுற்றிலும் கருவளையத்துடன் இருந்தது,, நிறைய சிகரெட் பிடித்ததற்கான அடையாளமாக உதடுகள் கறுத்துப் போயிருந்தது,, அவனுடைய மடிப்பு கலையாத உடை கசங்கி கலைந்து போயிருந்தது,, அவனை அந்த கோலத்தில் பார்க்க பார்க்க ரஞ்சனாவுக்கு அழுகை பீறிட்டது

அவள் அழுவதை பார்த்ததும் கிருபாவிற்கும் கண்கலங்க பற்றியிருந்த அவளை விட்டுவிட்டு வீட்டை நோக்கி நடந்தான்

அவன் பின்னாலேயே போன ரஞ்சனா வீட்டுக்குள் நுழைந்ததும் “ என்னங்க ஆச்சு மேடத்துக்கு” என்று கண்ணீர் குரலில் கேட்க

அவளுக்கு முதுகுகாட்டி நின்ற கிருபா எதுவுமே சொல்லாமல் குலுங்கி அழ,, ரஞ்சனாவால் அவன் அழுகையை தாங்கமுடியாமல் அவன் தோளை பற்றி தன்பக்கம் திருப்பினாள்

இவ்வளவு நாட்களாக கம்பீரம் குறையாமல் ஒரு சமஸ்தானத்து ராஜாவாக பார்த்த கிருபாவை இந்த கோலத்தில் கண்டதும் அவளுக்கு மனமெல்லாம் கசிந்து உருகியது,

அவனை இழுத்து தன் மார்போடு சேர்த்தணைத்து “ வேண்டாம் நீங்க அழாதீங்க,, நீங்க எப்பவுமே அழக்கூடாது,, ஒரு ராஜா அழுதால் அது நாட்டுக்குத்தான் கேடு,, வேணாம் அழாதீங்க” என்று அவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இவள் குலுங்கி அழ…அவளை மேலும் இறுக அணைத்து அவள் தோளில் தன் தாடையை வைத்துக்கொண்டு “ எல்லாமே முடிஞ்சு போச்சு ரஞ்சனா,, என் வசந்தி என்னைவிட்டு போகப்போறா” என்று ரஞ்சனாவை அணைத்துக்கொண்டு கதறினான் கிருபா

” அனாதைகளை நாம் உருவாக்கிவிட்டு..

” அவர்களின் முன்னோடியே நாம்தான்…

” என்பதை மறந்துவிடும் நம்மை…

” மூத்த அனாதைகள் என்று சொன்னால்…

” பொருத்தமாக இருக்கும்!

1 thought on “மனசுக்குள் நீ – பாகம் 28 – மான்சி தொடர் கதைகள்”

Leave a Comment

error: read more !!