பொம்மலாட்டம் – பாகம் 14 – மான்சி தொடர் கதைகள்

“ஓகே,, கணவர் இல்லாததால் மகள் கிட்ட அதிக கண்டிப்பு காட்டி வளர்த்தீங்களா? ஐ மீன், ஸ்கூல் போய்ட்டு கரெக்ட் டைம்க்கு வீட்டுக்கு வரனும்… ஆண்கள் கூட பேசக்கூடாது…. வராண்டாவில் நின்னு வேடிக்கைப் பார்க்காதே…. தலை குனிஞ்சி நடக்கனும்… இதுபோன்ற கண்டிப்புகள் உண்டா?” என்று டாக்டர் கேட்க….

“ஆமாம் டாக்டர்…. அவர் இறந்ததும் சொந்தக்காரங்க எங்க ரெண்டு பேரையும் தவறாப் பேசிடக்கூடாது… தனி மனுஷியா இருந்து மகளை கௌரவமா வளர்க்கனும்ற கட்டாயத்தாலயும் நிறைய கண்டிப்புக் காட்டினேன்… எனக்கு வேற வேலைகள் இல்லாததால் ஸ்கூலுக்கு கூடவே போய்ட்டு கூடவே வருவேன்…. எல்லாத்தையும் சொல்லிச் சொல்லி வளர்த்தேன்” என்றாள் பவானி…. சற்றுநேரம் யோசனையாக அமர்ந்திருந்த டாக்டர்….



மான்சியின் பால்யம் பற்றி இன்னும் சில தகவல்களை பவானி மூலமாக வாங்கிக் கொண்டார்…. “முன்னாடி சரிம்மா… இப்போ உங்க மகள் பெரியவளானப் பிறகும் நீங்க சொன்னால் தான் எதுவும் செய்வான்ற நிலைமையைப் பத்தி நீங்க யோசிக்கவேயில்லையா? தன் புருஷனோட சேர்வது கூட நீங்க சொல்லித்தான் நடக்கிறது என்பது எவ்வளவு பெரிய விபரீதம்னு உங்களுக்குத் தோனலையா?” என்று நேரடியாக் கேட்டார்… கண்ணீருடன் தலையசைத்த பவானி

“கல்யாணம் ஆனதும் சரியாகிடும்னு நினைச்சேன் டாக்டர்…. அதனால தான் இதைப் பத்தி சொல்லாம இந்த கல்யாணத்தை நடத்திட்டேன்” என்றாள்… “நீங்க நினைச்சது பெரிய தவறும்மா…. இந்த பிரச்சனை சத்யனுக்கு எவ்வளவு பெரிய இழப்புன்னு உங்களுக்குத் தெரியுமா? அவரோட கல்யாண வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிட்டதும்மா” என்றார் வருத்தமாக….



அவ்வளவு நேரமாக அமைதியாக இருந்த சத்யன் “மான்சிக்கு என்னதான் பிரச்சனை டாக்டர்?” என்று கேட்க…. ​அவன் பக்கமாகத் திரும்பிய டாக்டர்…. “மான்சிக்கு ஆட்டிசம் என்ற நோயின் ஒருவகைப் பாதிப்பு இருக்கு சத்யன்…. அது மான்சிக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு… மான்சியைப் போல தகப்பன் இல்லாம ஒரு தாயின் கண்டிப்பில் வளரும் பெண்களுக்கு ஆட்டிசத்தின் பாதிப்புடன் தாயின் கண்டிப்பும் பயமும் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுத்தப்பட்டு அந்தச் சிறுப் பெண் தனது சுயத்தையேத் தொலைத்து இறுதியில் ஒரு பொம்மை போல் ஆகிவிடுகிறாள்….

அந்த தாய் இல்லாமல் அவளால் சுயமாக செயல்பட முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுகிறாள்…. இது ஆட்டிசத்தில் தன்முனைப்புக் குறைப்பாடு என வகைப்படும்… அதாவது சுயமாக செயல்பட முடியாமை….” என்று சிறு விளக்கமாகத் தெளிவாகச் சொன்னார்…அதிர்ந்து நிமிர்ந்த சத்யன் “இந்த நிலைமை மாற வாய்ப்பிருக்கா?… இதுக்கு ட்ரீட்மெண்ட் என்ன டாக்டர்?” என்று கேட்க… சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்த டாக்டர்



“ஸாரி சத்யன்… அவங்க இருக்கும் காலம் வரை இப்படியேத்தான் இருப்பாங்க…. ட்ரீட்மெண்ட்?” என்று நிறுத்தியவர் “அப்படி எதுவும் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை சத்யன்…” என்றார்… ஒருவித இறுக்கமான சூழ்நிலையில் அத்தனை பேரிடமும் பெரும் அமைதி…. யோசனையாக சத்யனைப் பார்த்த டாக்டர் ” உங்க மனசுல இருக்கிற கேள்விகளை சந்தேகங்களையெல்லாம் கேட்டுடுங்க சத்யன்…. அதன் பிறகுதான் மான்சியைப் பத்தி உங்களுக்கு ஒரு தெளிவு வரும்” என்றார்… ஒப்புதலாய் தலையசைத்த சத்யன்….

See also  பொம்மலாட்டம் - பாகம் 05 - மான்சி கதைகள்

“நிறைய தெரிஞ்சுக்கனும் டாக்டர்….” என்றவன் “ஆட்டிசம் நோய்,, இதுதான் மான்சிக்கு என்றால்… இதில் எதெல்லாம் சாத்தியப்படும்? அதாவது…. எனக்குத் தெரிஞ்ச வரை எந்த ஒரு வேலையும் அவள் அம்மா சொல்லித்தான் செய்வாள்…

1, குளிப்பது விவரம் சொல்லவில்லைனா ஒரு டேங்க் தண்ணீர் காலியாகும் வரை தொடர்ந்து குளிப்பது

2, இரவு உறங்கும் முன் யூரின் போகனும்னு சொல்லப்படலைன்னா படுக்கையில் சிறுநீர் கழிப்பது..

3, தனக்கு தேவையான உணவு நான்கு இட்லி என்று சொல்லப்படவில்லைனா அதிகமாக உண்டு வாமிட் செய்வது…. இதெல்லாம் நிஜமா? எல்லா விஷயத்திலும் இப்படித்தான் இருப்பாங்காளா? இனி எப்போதும் மாறாதா?” என்று சத்யன் கேட்டதும் புன்னகையுடன் நிமிர்ந்த டாக்டர்



“நிச்சயமா நீங்க தெரிஞ்சிக்கனும் சத்யன்… இந்த மூன்றுமே அவர்களுக்கு இருக்க வாய்ப்பு உண்டு… எதையும் சொன்னால் தான் செய்வார்கள்… நிறுத்தச் சொல்லாவிட்டால் செய்துகொண்டே இருப்பார்கள்… ஆனால் சில ரூட்டீன் விஷயங்களுக்கு அப்படி தேவையில்லை…. இரவு உறங்கும் முன்னர் யூரின் போகணும் என்று சிறுவயது முதலே பழக்கி வந்தால் நிச்சயம் போவார்கள்…. தவறவே மாட்டார்கள்… அதுவும்……….

தினமும் இரவு பத்து மணி என்று பழக்கப்படுத்தியிருந்தால் அந்த நேரம் அவர்களுக்கு பாத்ரூம் பயன்படுத்தியே ஆகணும்… குளியலறை போனால்… ஐந்து தடவை தண்ணீர் அள்ளி உடம்பில் ஊற்று… பின்னர் ஷாம்பூ போடு…அதன் பிறகு ஒருமுறை சோப் போடு இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக்கொடுத்தே பழக்கியிருந்தால் பிரச்சனையில்லை… அல்லது தண்ணீர் காலியாகும்வரை குளிக்கத்தான் செய்வாங்க… உணவும் கூட இப்படித்தான்….

அவங்களுக்குத் தேவையானதை சொல்லிக் கொடுப்பவங்க தான் நிர்ணயிக்கனும்… இல்லேன்னா அதிகமாக உண்டுவிடுவார்கள்” என்று டாக்டர் கூறினார்…வேதனையுடன் டாக்டரை ஏறிட்ட சத்யன் ” இது மாதிரி இருக்கிறவங்களுக்கு உடலுறவு பற்றிய விபரம் சொல்லப்படாவிட்டால் இயற்கையான உணர்வுகள் உண்டா?” என சங்கடமாகக் கேட்டான்



“உணர்வு என்பது சொல்லிக் கொடுக்கப்படாவிட்டாலும் உண்டு தானே சத்யன்?… அதுக்கு இவர்களும் விதி விலக்கு அல்ல…….. ஆனால் அந்த உணர்வை வெளிப்படுத்தத் தெரியாது….. தங்களுக்குள் புதிதாக ஒன்று நிகழ்கையில் அவர்கள் மூர்க்கத்தைக் காட்ட வாய்ப்பு உண்டு… பாதிப்புள்ளப் பெண் உச்சமடைதல் எல்லாம் முதல் உறவில் வாய்ப்பே இல்லை சத்யன்….

அதற்கல்லாம் கணவனை நம்பி ஒன்றி வாழும் புரிதல் மெல்ல மெல்ல அவளுக்குள் புகுத்தப்பட வேண்டும்…. சில சமயங்களில் கணவனை எதிர்த்துப் போராடவே வாய்ப்பு உண்டு… அந்த முதல் உறவில்… அல்லது…. கணவன் இப்படித்தான் நடந்துகொள்வான் என்று விவரமாக சொல்லி அனுப்பப்பட்டால்…. அவள் ஓரளவுக்கு இயந்திரம் போல படுத்திருக்கலாம்…. இது மட்டும் தான் அந்த முதல் உறவில் அவள் காட்டக்கூடிய ஒத்துழைப்பு…

See also  மனசுக்குள் நீ - பாகம் 49

அதாவது உங்களுக்கு இந்த ஐந்து நாட்களில் நடந்தது போல் ஓர் உறவு” என்றார் தெளிவாக குழப்பமாகப் பார்த்த சத்யன் “அப்படின்னா இவர்கள் உடலுறவின் போது உணர்ச்சிவசப்படுவார்களா?” என்று கேட்க… “நிச்சயமா…. இரண்டு மாதிரியும் உணர்ச்சிவசப்படுவார்கள்… எதிர்த்து போராட்டம் ஒருவகை…. சாதாரணமாக பெண்ணுக்குள் நிகழும் மாற்றங்கள் இன்னொன்று… இரண்டு வகையில் வாய்ப்புண்டு…



தனக்குள் நிகழும் மாற்றங்களை கண்டுகொள்ள அவர்களுக்கேத் தெரியாத போது நாம் கண்டுகொள்வது அசாத்தியம் தான் சத்யன்” “இதுபோல் உள்ளவர்களுக்கு இன்னும் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் சார்? அதாவது மன ரீதியாக உடல் ரீதியாக” என்று சத்யன் கேட்க… “மருத்துவ ரீதியாக பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை சத்யன்………. இவர்களும் நம்மைப் போல் சாதாரணமானவர்கள் தான்… இவர்களின் உணவில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்…

அதுவே பல வியாதிகளை அண்ட விடாது….. இவர்களுக்கு உடல் உபாதைகள் வருமா என்ற கேள்வியை விட வராமல் எப்படி பார்த்துக்கொள்வது என்பது தான் முக்கியம்… உதாரணத்திற்கு….. மான்சிக்கு கரு உண்டானால்…. வாந்தி எடுப்பாள்… அதை மற்றவருக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்க மாட்டாள்…

பீரியட்ஸ் வரவில்லையே என்றும் உணரத் தெரியாது…. அல்லது சிறு வயது முதல் காலெண்டரில் குறித்து வைக்கும் பழக்கம் இருந்தால் மட்டுமே கண்டுகொள்ளக் கூடும்…. அப்போதும்…. தனக்கு வரவில்லை என்று சொல்லத் தோன்றாது………! யாராவது ஒருவர் அவளிடம் மாற்றங்கள் கண்டு அதற்கான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே தான் நிலைமை சீரடையும்…..



வேறு வழியில்லை….. இவளிடம் மனம்விட்டுப் பேசுதல் என்ற ஒரு பழக்கமே இருக்காது….” டாக்டர் தெளிவிப்படுத்தியதும் சத்யனின் முகத்தில் மேலும் துயர் கப்பியது… “ஒரு விஷயம் முதல்நாள் சொல்லப்பட்டு இவள் சரியாக செய்துவிட்டால் மறுநாள் அந்த விஷயத்தை சொல்லவேண்டியதில்லையா? அல்லது தினமும் சொல்லனுமா?” என்று தனது அடுத்தக் கேள்வியைக் கேட்டான்

error: read more !!
Enable Notifications OK No thanks