மனசுக்குள் நீ – பாகம் 19 – மான்சி தொடர் கதைகள்

“ ஓ அப்படியா” என்ற மான்சியின் குரலில் மறைக்க முடியாத ஏமாற்றம் இருந்தது,, இனிமேல் கேன்டீனில் கூட சத்யனை பார்க்கமுடியாது போலருக்கே, என்று எண்ணி மனதுக்குள் குமுறியவாறு அவளுடைய வேலைகளை தொடர்ந்தாள்

அடுத்த நான்கு நாட்கள் எந்த மாற்றமும் இன்றி போனது,, நான்கு நாட்களும் சத்யனை மில்லில் எங்கேயும் பார்க்க முடியவில்லை,, ஒருநாள் மட்டும் இவள் இருக்கும் பகுதிக்கு வந்தவன் அவளை பார்க்காமலேயே போய்விட்டான்வேலை செய்யும் பெண்களிடம் சலசலப்பை உணர்ந்து மான்சி திரும்பி பார்ப்பதற்குள் சத்யன் போய்விட்டான்,, மான்சியால் அவன் முதுகை தான் பார்க்க முடிந்தது

இப்போதெல்லாம் மான்சிக்கு பயம் வந்தது,, அனிதா சொன்னது போல்,, சத்யன் தன்னை வெறுத்து ஒதுக்கி விடுவானோ என்ற பயம் வந்தது,,

தான் எடுத்த முடிவு தவறானதோ என்று பயந்தாள்,, இந்த பிரிவு நிரந்தரமாகி விடுமோ என்று கலங்கினாள்

ரஞ்சனா தங்களது வீட்டுக்கு வரச்சொன்னது ஞாபகம் வந்தது,, தனது பிரச்சனைக்கு எல்லாம் தீர்வு ரஞ்சனாவிடம் தான் இருக்கிறது என்று நினைத்த மான்சி,, மனசுக்குள் வைத்து புரியாமல் தவிப்பதைவிட நேரடியாக கேட்டுவிடுவதே நல்லது என்ற முடிவுக்கு வந்தாள்

அன்று மாலை மில்லில் இருந்து நேராக அனிதாவின் வீட்டுக்கு போனாள் மான்சி
வசுவின் விசேஷத்திற்கு வந்திருந்த அனைத்து விருந்தாளிகளும் போய்விட்டிருந்தனர்,, வீட்டினர் அனைவரும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருக்க,, அனிதா மான்சியை பார்த்ததும் எழுந்து வந்து கையைப்பிடித்து அழைத்துச்சென்றாள்

வசு அனிதா இவர்களுக்கு நடுவே மான்சி அமர்ந்துகொண்டாள்,,
“ வாம்மா மான்சி” என்றழைத்த ரஞ்சனா மான்சிக்கு காபி எடுத்துவர உள்ளே போய்விட,, எதிர் சோபாவில் இருந்த கிருபானந்தன் மான்சியை பார்த்து புன்னகையோடு “ அன்னிக்கு வசு விசேஷத்தப்ப நீ இங்கயே தங்கியிருக்கலாம்,, நைட்ல உன்னை அனுப்பவே எங்களுக்கு மனசில்லைம்மா” என்றார்மான்சி எதுவும் பேசாமல் , அவருக்கு பதிலாக ஒரு புன்னகையை மட்டும் தந்தாள் ,, நோயின் தீவிரம் கிருபாவின் முகத்தில் தெரியவேயில்லை,, சத்யனுக்கு வயதானால் எப்படியிருப்பான் என்று இவரைப் பார்த்து யூகிக்கலாம்,, தலையில் இருக்கும் நரையையும், நெற்றியில் இருக்கும் சுருக்கத்தையும் சரி செய்தால் சத்யனின் சகோதரன் என்று சொல்லுமளவுக்கு இருந்தார் கிருபா

காபி எடுத்துவந்த ரஞ்சனா அதை மான்சியிடம் கொடுக்க, அவள் அதை மறுக்காமல் வாங்கிக்கொண்டாள்,, அவளுக்கு இப்போது சூடான காபி தேவையாயிருந்தது,, காபியை ஊதி ஊதி ஒரே மூச்சில் குடித்துவிட்டு டம்ளரை டீபாயில் வைத்தாள்

“ என்னம்மா உடம்பு எதுவும் சரியில்லையா? ரொம்ப டல்லா இருக்க” என்று வசுவை தள்ளி அமரச்சொல்லி விட்டு மான்சியின் அருகில் அமர்ந்தாள் ரஞ்சனா
ரஞ்சனாவின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்ட மான்சி “ காலையிலேர்ந்து கொஞ்சம் தலைவலி ஆன்ட்டி அதான் சோர்வா இருக்கு” என்ற மான்சி ரஞ்சனாவின் முகத்தை நேரடியாக பார்த்து “ ஆன்ட்டி நான் உங்ககூட கொஞ்சம் தனியா பேசனும்” என்றாள் சங்கடமாக…

See also  பொம்மலாட்டம் - பாகம் 13 - மான்சி தொடர் கதைகள்

“ என்னம்மா பேசனும் பேசும்மா,, வா என் ரூமுக்கு போகலாம்” என்று மான்சியை கைப்பற்றி எழுப்பினாள் ரஞ்சனா

மான்சி அருகில் இருந்த அனிதாவை பார்த்தாள்,, அவள் முகத்தில் குழப்பம் தெரிந்தது,, வசு முகத்தில் புரியாத பாவனை இருந்தது ,, மான்சி எதுவும் சொல்லாமல் ரஞ்சனாவின் பின்னால் போனாள்,,ரஞ்சனா தனது அறைக்கு போய் கதவை மூடிக்கொண்டு,, “ இங்கே உட்காரும்மா” என்று அங்கிருந்த சோபாவை காட்டிவிட்டு , தானும் அமர்ந்தாள்
“ சொல்லும்மா என்ன பிரச்சனை,, மறுபடியும் உன் மாமா வீட்டு ஆளுங்க உங்க வீட்டுக்கு வந்து ஏதாவது தகராறு பண்றாங்களா?,, அப்படின்னா உடனே சொல்லு நம்ம அனிதா அப்பாவுக்கு கோயமுத்தூர் ஐஜியை தெரியும், ஒரு வார்த்தை சொல்லி வைக்கலாம்” என்றாள் ரஞ்சனா

“ அய்யோ அதெல்லாம் இல்லை ஆன்ட்டி” என்று அவசரமாக மான்சி கூற ..

“ பின்னே வேரென்ன பிரச்சனை,, எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லு மான்சி” என்று ரஞ்சனா ஊக்குவிக்க…

பெரும் தயக்கத்திற்கு பிறகு “ எனக்கு உங்களைப்பத்தி தெரியனும்,, அதாவது நீங்க எப்படி கிருபா அங்கிள் வாழ்க்கையில் நுழைஞ்சீங்கன்னு தெரியனும்” என பட்டென்று போட்டு உடைத்தாள் மான்சி

இதை சற்றும் எதிர்பார்க்காத ரஞ்சனா அதிர்ச்சியில் திகைத்துப் போய் மான்சியை பார்த்தாள்

“ ஆமாம் ஆன்ட்டி எனக்கு உங்களை பத்தி தெரியனும்,, வசந்தி ஆன்ட்டி உயிரோட இருக்கும்போதே நீங்க எப்படி கிருபா அங்கிள் வாழ்க்கையில் வந்தீங்க,, அதுவும் இரண்டு வயது அனிதாவோட இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கீங்க,, அது எப்படி” என்று மான்சி சரமாரியாக கேள்விகளை வீச….
என்ன சொல்வது என்று புரியாதது மாதிரி ரஞ்சனா அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள்“ ஆன்ட்டி நான் ஒன்னும் உங்களை தவறா நெனைச்சு இதை கேட்கலை,, எனக்கு சத்யனின் பிடிவாதத்தை உடைக்க ஒரு ஆயுதம் வேனும் அது நீங்க சொல்லப்போறதுல தான் இருக்கு ஆன்ட்டி,, நீங்க என்ன சொல்றீங்க என்பதை வச்சுத்தான் சத்யன்கிட்ட என்னால வாதாட முடியும்,, ஏன்னா இது என் வாழ்க்கையும் அடங்கி இருக்கு,, சத்யன் கிட்டே தைரியமா பேசிட்டாலும் உள்ளுக்குள்ளே ரொம்ப தவிப்பா இருக்கு ஆன்ட்டி,, ப்ளீஸ் சொல்லுங்க ” என்று கலங்கிய விழிகளுடன் மான்சி கலக்கமாக பேசினாள்

அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் தனது செவியில் வந்து அறைவது போல் இருக்க,, சற்றுநேரத்தில் சுதாரித்த ரஞ்சனா “ இதை பத்தி பேசனும்னா அங்கிளும் கூட இருக்கனும் மான்சி,, என்று ரஞ்சனா தீர்கமாக கூற

“ அய்யோ ஆன்ட்டி,, அங்கிள் முன்னாடி என்னால இதைப்பத்தி பேசவும் முடியாது,, கேட்கவும் முடியாது,, நான் நீங்க சொல்றதை நம்புறேன் ஆன்ட்டி” என்று மான்சி பிடிவாதமாக கூறினாள்இவ்வளவு நாட்களாக யாரிடமும் சொல்லாமல் இருந்த தனது திருமணவாழ்வின் ஆரம்பத்தை,, தனது வருங்கால மருமகளிடம் சொல்ல ஆரம்பித்தாள் ரஞ்சனா….

See also  மான்சிக்காக - பாகம் 64 - மான்சி கதைகள்

ரஞ்சனா சொல்வதை திகைப்பில் விழிகள் விரிய கேட்டுக்கொண்டிருந்தாள் மான்சி

” நான் உன்னை மட்டும் நேசித்த போது ..

” உன் காதலி என்ற பெயர்தான் கிடைத்தது!

” உன் உறவுகளையும் சேர்த்து நேசிக்கும் போது..

” குணவதி என்ற பெயர் கிடைத்தது!

” ரோஜாவை எந்த பெயர் கொண்டு அழைத்தாலும்..

” அதன் வாசம் மாறாதது போல்..

” என்னை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும்..

” உன் காதலி என்ற பெயர்தான் எனக்கு பிடிக்கும்!

நன்றி:- சத்யன்

error: read more !!