மனசுக்குள் நீ – பாகம் 08 – மான்சி தொடர் கதைகள்

ஆனால் சத்யன் அன்று முழுவதும் “ அம்மா பாப்பா எப்பம்மா வரும்” என்று கேட்கும் மகனை சமாதானம் செய்ய வழியின்றி தவிப்பதை குறும்புடன் பார்த்து சிரிப்பார் கிருபா

யார் கண்பட்டதோ அவர்களின் சந்தோஷம் நாளுக்கு நாள் தேய ஆரம்பித்தது,, அடிக்கடி சோர்ந்து விழும் மனைவியை எண்ணி வருந்தும் கிருபா, ஒருநாள் மயங்கி விழுந்த மனைவியை கதறியபடியே மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார்

அனைத்து பரிசோதனைகளையும் முடித்த மருத்துவர் ‘வசந்திக்கு ரத்தப் புற்றுநோய் வந்திருப்பதாகவும்,, சிகிச்சை செய்து காப்பாற்ற கூடிய கட்டத்தை கடந்துவிட்டதாகவும்’ கவலையான குரலில் சொல்ல, பெரும் இடி தனது தலையில் விழுந்தது போல கதறி துடித்தார் கிருபாஅதன் பிறகு கிருபாவின் வீடே சோகமயமாகியது,, வேலைக்காரர்கள் கூட தங்களின் சிரிப்பை மறந்தார்கள்,, வசந்தி படுத்த படுக்கையானாள்,, வசந்தியின் தாயார் அமிர்தம்மாள் மகளுக்காக வந்து பேரனுக்காக அங்கேயே தங்கிவிட்டார்கள்

இளம் வயது சத்யனுக்கு தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பது மட்டும் புரிந்தது,, அதிகம் சத்யனை வசந்தி அருகில் நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்,, நாளுக்கு நாள் துரும்பான தன் மனைவியை பார்த்து தினமும் கண்ணீர் விடுவதை வாடிக்கையாக கொண்டார் கிருபா

நோயின் தீவிரம் வசந்தியை முழுதாக ஒருநாள் விழுங்கிவிட அந்த வீடு முழுவதும் கதறல் ஒலி பலநாட்கள் கேட்டுக் கொண்டே இருந்தது,, வசந்தியின் பதினாராம் நாள் காரியம் முடிந்தது,,

இப்போதும் சத்யன் தன் அப்பாவின் நெஞ்சில் தான் படுத்து உறங்கினான்,, ஒருநாள் பாதி தூக்கத்தில் கண்விழித்த சத்யன் கிருபானந்தன் தலையில் கைவைத்தபடி அழுவதை கண்டு அவனும் அம்மாவை நினைத்து அந்த இரவில் அழுதது சத்யனுக்கு இன்றும் பசுமையாக நினைவிருந்ததுவசந்தியின் முப்பதாம் நாள் விசேஷம் முடிந்த மறுநாள் கிருபானந்தன் கர்பினியான ஒரு இளம் பெண்ணையும் ஒருகையில் இரண்டு வயது பெண் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தார்,, சத்யனுக்கு சாதம் ஊட்டிக்கொண்டு இருந்த அமிர்தம்மாள் அதிர்ச்சியில் சாதம் இருந்த கிண்ணத்தை கீழே போட.. வந்திருப்பது யார் என்று சத்யனுக்கு புரியவில்லை

கிருபானந்தன் அவர்களை பற்றி கொடுத்த விளக்கத்தில்,, இனிமேல் தனது தாய் இருந்த இடத்தில் அந்த கர்பிணிப் பெண் இருப்பாள் என்று மட்டும் தெளிவாக புரிந்தது,, தனது மகள் உயிருடன் இல்லாத போது என்ன பேசி என்ன பலன் என்று விரக்தியில் அமைதியான அமிர்தம்மாள் தனது பேரனை கவனிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தினார்

அதன்பிறகு சத்யனுக்கு அப்பாவையும் அந்த பெண்ணையும் சுத்தமாக பிடிக்கவில்லை,, தனது அம்மாவின் அறையை உபயோகிக்கும் அந்த பெண்ணைப் பிடிக்கவில்லை,, தனது அம்மாவின் கட்டிலில் உறங்கும் அந்த பெண்ணைப் பிடிக்கவில்லை,, தனது அப்பாவைத் தொட்டு பேசும் அந்த பெண்ணை பிடிக்கவில்லை,, அந்த இளம் வயதில் மனதில் பதிந்த கசப்பு நாளுக்கு நாள் நெஞ்சு முழுவதும் பரவியதுதனது அம்மாவின் உடைமைகளை எல்லாம் மூட்டிகட்டிய சத்யன் தனது பாட்டியிடம் வந்து “ எனக்கு இங்க இருக்க பிடிக்கலை பாட்டி,, இங்கயே இருந்தா நானும் அம்மா மாதிரி செத்துப் போவேன் அதனால வா பாட்டி நாம இந்த வீட்டைவிட்டு போயிடலாம்” என்று கண்ணீருடன் கேட்டான்

See also  மனசுக்குள் நீ - பாகம் 33 - மான்சி தொடர் கதைகள்

‘ அம்மா மாதிரி நானும் செத்துப்போவேன்’ என்ற சத்யனின் வார்த்தை நெஞ்சை கசக்கி பிழிய, மருமகனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு பேரனுடன் உடனே தனிக்குடித்தனம் வந்தார் அமிர்தம்மாள்

சத்யன் வளர வளர அப்பா மீதான கசப்பும் வளர்ந்தது,, மகன் அருகிலேயே இருந்ததும் பார்க்க முடியாதபடி புத்திர சோகத்தை வலிக்கவலிக்க வழங்கினான் தனது அப்பாவுக்கு

அவனுக்கு ஆண் பெண் உறவு பற்றிய அடிப்படை அறிவு வளர்ந்த பிறகு அவனுக்கு புரிந்ததெல்லாம் ,, அனிதாவின் வயதை கணக்கு வைத்தால் தன் அம்மா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தவுடனேயே அப்பா இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்டுள்ளார் என்பதும்,, தனது தாயாரின் உயிர் பிரிய போராடிய நாட்களில் அப்பா அந்த பெண்ணுடன் கொண்ட உறவுதான் வரும் வயிற்றில் இருந்த குழந்தை என்றும் புரிந்தது

அது மட்டுமில்லாமல் சத்யன் வீட்டைவிட்டு வெளியேறிய இரண்டாவது வருடம் இன்னொரு மகளை பெற்று சத்யனின் வெறுப்பை மேலும் சம்பாதித்தார் கிருபானந்தன்,,

மனைவி இறக்கும் தருவாயில் கூட இன்னொரு பெண்ணிடம் சுகம் கண்ட கிருபா சத்யனுக்கு ஒரு புழுவைப்போல் தெரிந்தார்,,மகனை பிரிந்த சோகம் மனதில் இல்லாமல் இன்னொரு மகளைப் பெற்ற கிருபா சத்யனுக்கு பெரும் கொடுமைக்காரனாக தெரிந்தார்

அதன்பிறகு அமிர்தாம்மாள் பேரனுக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை,, பலமுறை கிருபானந்தன் வந்து கெஞ்சியும் சத்யன் போகவில்லை,, கிருபானந்தனின் இரண்டாவது மனைவி ரஞ்சனாவும் பலமுறை வந்த கண்ணீர் விட்டு கதறி கூப்பிட்டும் சத்யன் போகவில்லை

எல்லோரையும் ஒதுக்கிய சத்யனால் அனிதாவை மட்டும் ஒதுக்க வெறுக்க முடியவில்லை,, இரண்டு வயது குழந்தையாக வந்து அவனுடைய முகம் பார்த்து சிரித்த அனிதாவை சத்யனால் வெறுக்கமுடியவில்லை

அதை பயன்படுத்தி தனக்கு தேவையானதை அழுதாவது பெற்றுவிடுவாள் அந்த பாசமுள்ள தங்கை ..

” ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம்..

” சம்பவித்தே தீர வேண்டும்.

” மரண வேதனை என்பது நிச்சயமான ஒன்றுதான் ………

” ஆனால் தேவையான வயதில் தாயை பறித்து…

” பிள்ளையை அனாதையாக்கும்,,

” இறைவன் இருந்தால் என்ன…

” இல்லாவிட்டால் என்ன!error: read more !!