அதையும் மீறி யாரவது என்ன வர வர ரொம்ப குண்டாகி கிட்டே போற என்று கேட்டாள் ஒன்னும் இல்லையே சாப்பாடு கொஞ்சம் நிறைய சாப்பிடறேன் அவளவுதான் என்று சொல்லி சமாளிப்பாள் .சரி இதற்கு மேலும் சமாளிக்க முடியாது .
அது மட்டும் இல்லாம டாக்டர் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண கூடாதுன்னு வேற சொல்லிருக்காங்க அதுனால வேலைய விட்டு நின்னுடுவோம் என்று நினைத்து கொண்டு இருந்த போது சித்தார்த் அவளிடிம் வந்தான் .
சித்தார்த் சுவாதியோடு ஏப் எம் ஸ்டேசெனில் வேலை பார்ப்பவன் .அவனும் தமிழன் .சுவாதி வேலைக்கு சேர்ந்ததில் இருந்து அவளை ஒரு தலையாக காதலிப்பவன் .எப்போதும் சுவாதியிடம் வந்து வழிந்து வழிந்து பேசுவான் .அனால் சுவாதி டேவிட்டை காதலிப்பது தெரிந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தவன் .
எப்போது சுவாதியும் டேவிட்டும் break up ஆனது தெரிந்ததோ அப்போது இருந்து மீண்டும் சுவாதிக்கு ட்ரை பண்ணிக்கொண்டு இருந்தான் .அதுவும் டேவிட்டுக்கு கல்யாணம் ஆனது தெரிந்ததும் அவன் ரொம்பவே நம்பிக்கையோடு சுவாதிக்கு ட்ரை பண்ணான் .
எப்போது பார்த்தாலும் அவளிடிம் வந்து கடலை போட்டு கொண்டே இருந்தான் .ஆனால் சுவாதிக்கு அவனை துளியும் பிடிக்காது .அவனை சமாளிப்பது எப்போதும் அவளுக்கு பெரும்படாகதான் இருந்தது .அன்றும் அப்படி அவன் சிரித்து கொண்டே வருவதை பார்த்து ஐயோ இந்த இம்சைய எப்படிதான் சமாளிக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தாள் .
சித்தார்த் அவள் கிட்ட வந்து hey swathi how do you do ? என்றான் ஜொள்ளு விட்டபடியே .ஸ்வாதி மனதிற்குள்ளே நல்லவே இல்லடா என்று நினைத்து கொண்டாள் பின் வெளியே அவனிடிம் சிரித்து கொண்டே fine என்றாள் .அவனும் பதிலுக்கு பலமாக சிரித்து விட்டு அப்புறம் சுவாதி இந்த ஃப்ரைடே என்ன பிளான் என்றான் .
இம்ச எங்கயோ கூப்பிட்டு போக பிளான் பண்ணுதே இப்ப என்ன பண்ண என்று யோசித்து விட்டு சரி அவன் வழிலேயே போயி அவன விட்டு பிடிப்போம் என்று நினைத்து கொண்டு nothing ஒரு பிளானும் இல்ல என்றாள் அவனிடிம் .
அவன் சிறிது அமைதியாக இருந்து விட்டு அப்ப சுவாதி நம்ம ஆபிஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் ஃப்ரைடே நியூ ரிலிஸ் படம் எதுக்கு ஆச்சும் போயிட்டு அப்படியே எங்கயாச்சும் டின்னர் சாப்பிடுவோமா என்றான் .அட பாவி கரெக்ட்டா கொக்கி போட்ரியாடா என்று நினைத்து கொண்டு சுவாதி ஒன்னும் சொல்லமால் அமைதியாக இருந்தாள் .என்ன சுவாதி ஒன்னும் சொல்லாம இருக்க நான் ஏதும் தப்பா கேட்டுடனா இல்ல நீ இன்னும் டேவிட்டையே நினச்சு கிட்டு இருக்கியா என்றான் .
சரி வேற வழி இல்ல இவன் மூலமா ஆபிஸ்க்கு தெரிய வச்சுட்டு அப்படியே வேலையவும் ரிசைன் பண்ணிடுவோம் .நம்ம என்ன இனி இந்தியா வரவா போறோம் இதுக முன்னாடி அசிங்கபடுரோம்னு நினைச்சுகிட்டு என்று நினைத்து கொண்டு இருந்தாள் .சுவாதி என்ன ஆச்சு என்று அவளை எழுப்பினான் சித்தார்த் .சித்தார்த் நான் ஃப்ரைடே ஆபிசுக்கு வர மாட்டேன் என்றாள் .ஏன் என்ன ஆச்சு வேற எதுவும் ப்ரோக்ராம் இருக்கா என்றான் .
ஐ மீன் உண்மைய சொல்ல போனா நான் இனிமேல் எப்பவுமே ஆபிஸ்க்கு வர மாட்டேன் ரிசைன் பண்ண போறேன் என்றாள் .அதை கேட்டு அதிர்ச்சி ஆன சித்தார்த் வாட் எதுவும் ப்ரபலாமா நான் எதுவும் தப்பா கேட்டுடேனா அப்படி ஏதும் இருந்தா நான் வேணா பேசல ஆனா நீ வேலைய விட்டு போகாத ப்ளிஸ் என்று கெஞ்சினான் .
நோ நோ உன் மேல ஏதும் தப்பு இல்ல நாந்தான் ப்ரக்னட்டா இருக்கேன் என்றாள் .வாட் என்று சொல்லி கொண்டு சித்தார்த் மேலும் அதிர்ச்சி ஆகி வாயை பிளந்தான் .யெஸ் சித்தார்த் ஐ அம் ப்ர்கன்ட் என்றாள் .பட் ஹாவ் உனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே என்றான் .சுவாதி அவனை கோபமாக முறைத்து விட்டு இவனிடிம் என்ன சொல்வது லவ்வர் மூலமான்னு சொன்னா அது யாருன்னு கேப்பான் ம்ம் என்ன சொல்லாலம் என்று யோசித்தாள் .
ஏன் கல்யாணம் முடிக்காட்டி ப்ரக்னட் ஆக முடியாதா என்றாள் ,ஆகலாம் இருந்தாலும் என்று கொஞ்சம் இழுத்து கொண்டே சுவாதி கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத நீ ஏதும் டேவிட் கூட இன்னும் affair ல இருக்கியா என கேட்டான் .நோ யு இடியட் அவன எல்லாம் மறந்து பல நாள் ஆகுது என்றாள் .
அப்ப யாரு என்றான் .ஐயோ இவன் என்ன விட மாட்டின்கிறான் இதுக்கு காரணம் விக்கினு உண்மைய சொல்லலாம் ஆனா அவன் யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லிருக்கனே இப்ப என்ன சொல்றது என்று யோசித்து விட்டு சொன்னாள் .இதுக்கு யாரு காரணம்னு எனக்கே தெரியாது என்றாள் .
என்னது என்று மறுபடியும் அதிர்ச்சி ஆனான் .டேய் சும்மா சும்மா டென்சன் ஆகாத நான் ஒரு ஸ்பர்ம் டோனட்ட்ர் மூலமா ஆஸ்பத்திரி மூலமா கன்சீவ் ஆகிருக்கேன் போதுமா என்றாள் .எனக்கு இன்னும் ஒன்னும் புரியல ஏன் நீ இப்படி எல்லாம் பண்ற நான் உன்னையே விரும்புறேன் என்றான் .
ஐயோ என்ன இந்த இம்ச பிடிச்சவன் என்ன சொன்னாலும் விடவே மாட்டிங்குறான் .என்னதான் சொல்லி இவன கட் பண்ணி விடறது என்று யோசித்தாள் .
பின் எப்போதோ ஒரு முறை விக்கியிடிம் சுவாதி சண்டை போடும் போது விக்கி அவளை கிண்டலடித்து கொண்டே சொன்னது ஞாபகத்துக்கு வர அதை சொல்லுவோம் என்று சொன்னாள் .
சித்தார்த் ஐ அம் லெஸ்பியன் என்றாள் .