அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்றான்…. ஆறு நாட்களாக மான்சியுடன் கிடந்த படுக்கை அவனைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பது போல் இருந்தது…. அந்த படுக்கையில் உணர்வற்ற ஒருத்தியுடன் கொண்ட உறவு இவனை உருக்குழைய வைத்தது…
குழந்தை போல் மனம் கொண்டவளைப் பெண்டாள நினைத்தது எத்தனை சண்டாளத்தனம்? மகா கேவலத்தைச் செய்திருக்கிறேனே? எண்ணும் போதேக் குமுறிக்கொண்டு வந்தது…. அந்தக் கட்டிலில் அமரக் கூட இஷ்டமில்லாதவனாக சோபாவில் அமர்ந்தான்….. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து தனது அக்கா கருவுற்றிருப்பதைக் கூட கொண்டாட முடியாத தனது நிலைமையை நினைத்து வேதனையில் உழன்றான்…..
மான்சியைப் பெண் பார்த்த நாள் முதல் எத்தனை கனவுகளை ஆசைகளை மனதுக்குள் வளர்த்து…. இப்போது எல்லாம் கனவாகவேப் போய்விட்டதில் விரக்தி தான் மிஞ்சிற்று…. சலிப்புடன் சோபாவில் சரிந்துப் படுத்தான்…. ‘மான்சி அப்நார்மல் என்று ஒரு நாளிலேயே ஆதி தெரிஞ்சுக்கிட்டு இருக்கான்…. ஆனா ஆறு நாளா அவ கூடவே இருந்தும் மான்சியின் வித்தியாசங்களைத் தெரிஞ்சுக்கலையே?
அப்போ நான் வெறும் செக்ஸூக்காக மட்டும் தான் அவளைத் தேடினேனா? அதனால் தான் நான் ஏமாற்றப்பட்டது அப்பட்டமாகத் தெரிந்தும் அதை கண்டுகொள்ள முடியாமல் கிடந்தேனா?’ மான்சியின் நிலைமை… பவானியின் துரோகம்… ஆதியின் சாமர்த்தியம்…. அக்கா மாமா இருவரின் கண்ணீர்… குடும்பத்தில் புதிதாக வரப்போகும் வாரிசு….. இவற்றையெல்லாம் விட சத்யன் அதிகமாகப் பாதித்தது உணர்வற்ற ஒருத்தியுடன் கொண்ட உறவு தான்…. ‘என்னவென்றேத் தெரியாமல் அவளுடன் சுகித்திருக்கிறேனே? அத்தனை முட்டாளா நான்? அல்லது செக்ஸ் மட்டுமே போதும் என்று இருந்திருந்தேனா? மான்சி…. மான்சி…. மான்சி…. எவ்வளவு காதல் வச்சிருந்தேன் உன்மேல்… அது அத்தனையும் உன் அழகைக் கண்டு மட்டும் தானா?’ அவனது கேள்விகளுக்கு அவனிடமே பதிலில்லை….. தன் மீதே வெறுப்பு வர நெஞ்சில் பட் பட்டென்று அறைந்து கொண்டான்….
” உன்னுடன் உலாப் போகும்…
” நிலாக் கால நாட்களுக்காக….
” விழாக் கோலம் கொண்டிருந்தேன்…..
” ஊமை கண்ட கனவாக…
” குருடன் வரைந்த ஓவியமாக….
” செவிடன் செவிவழி சங்கீதமாக….
” பகலும் அல்லாது… இரவும் அல்லாது…
” அந்தி காலத்தின் அடையாளமாக…
” வாழ்க்கை பொருளற்று போனதே!!
எப்போது உறங்கினான் என்று தெரியாமல் உறங்கியவனின் நெற்றியை வாசுகியின் விரல்கள் வருடியாது…. இதமான வருடலில் உடனடியாகக் கண் விழித்தான்…. சகோதரியைக் கண்டதும் பதறி எழுந்தவன் “ஏன்க்கா மாடியேறி வந்தீங்க… கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே?” அக்கறையுடன் கேட்டான்….
தம்பியின் வார்த்தைகள் கண்களில் நீரை வரவழைக்க அவனது கைகளைப் பற்றியபடி தம்பியின் அருகே அமர்ந்தாள்…. “மூணு மாசமா மாடியேறி வந்துக்கிட்டு தானே இருக்கேன்? அதெல்லாம் ஒன்னும் ஆகாது” என்றாள்… “ஆனா மூணு மாசம் ஆகியும் ஏன்க்கா வீட்டுல யார்க்கிட்டயும் சொல்லலை?” சங்கடமாகக் கேட்டான்.. “சொல்லக்கூடாதுன்னு எதுவுமில்லை அப்பு….
உன்னோட கல்யாண அலைச்சலில் நானே மொதல்ல கவணிக்கலை…. சரி டாக்டரைப் பார்த்து இதுதான்னு உறுதியானப் பிறகு சொல்லலாம்னு தள்ளிப் போட்டேன்… அவ்வளவு தான் அப்பு…” மெல்லியக் குரலில் கூறினாள்…. “என்னால உங்களுக்கெல்லாம் எத்தனை மனகஷ்டம்… குழந்தை வரப்போறதைக் கூட கொண்டாட முடியலையே” என்று கண்கள் கசிந்த தம்பியின் முகத்தை இழுத்து தனது தோளில் சாய்த்த வாசுகி
“நீ தான்டா அப்பு என் முதல் குழந்தை… உனக்கப்புறம் தான் மற்ற எல்லாருமே” என்றாள்… உணர்வுப்பூர்வமான ஒரு நிலைமையில் இருவரிடமும் சில நிமிடங்கள் மவுனம்… மெதுவாகத் தலை நிமிர்த்தி சத்யனைப் பார்த்த வாசுகி “மான்சி விஷயத்துல இன்னும் கொஞ்சம் நிதானமா முடிவெடுத்திருக்கலாமோனு தோனுது அப்பு….
ரொம்ப அவசரப்பட்டு அனுப்பிட்டோமோனு நினைக்கிறேன் அப்பு” என்றாள் மெல்லியக் குரலில்…. கண்களில் நிறைந்திருந்த நீருடன் நிமிர்ந்தவன் “எனக்கும் அப்படித்தான் தோனுச்சுக்கா… ஆனா அவங்களை வீட்டுல வச்சுக்கிட்டு வெறுப்பைக் காட்டி நம்பிக்கைத் துரோகின்னு சொல்லி ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காம இருந்து,
பிரச்சனை பெருசாகி வீட்டையே நரகமாக்கி நம்முடைய இயல்பையே மாத்திக்கிட்டு விரோதிகளா நிக்கிறதை விட இப்படி உடனடியா அனுப்பினது தான் சரி….” என்றவன் சகோதரியை விட்டு விலகி எழுந்து ஜன்னலருகே சென்று நின்றான்…”என்னால இனி மான்சி முகத்தைப் பார்க்க முடியாதுக்கா…. ஏற்கனவே இந்த ஒரு வார வாழ்க்கை என்னை குற்றவுணர்வில் கொல்லுது… இன்னும் அவ முகத்தைத் தினமும் பார்த்தால்? ஒரு சின்னக் குழந்தையைத் தொட்டுவிட்ட அருவருப்பில் செத்துக் கூடப் போய்டுவேன்க்கா….
அவளுக்கும் நம்ம அம்முவுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? இந்த நினைப்பே என்னை வாட்டுதுக்கா….” என்றான் வேதனையின் உச்சத்தில் நின்று….. வாசுகிக்கு தம்பியின் மனம் புரிந்தது… எழுந்து வந்து அவன் தோளில் கைவைத்தாள்… “நீ சொல்றதும் கரெக்ட் தான்…. அவங்களை வீட்டு வச்சிருந்து விரோதிகளா பார்த்து நம்ம இயல்பையே மாத்திக்கிறதை விட அனுப்பினது நல்லது தான்….
ஆனா இனி உன் லைப் அப்பு?” துக்கம் தொண்டையை அடைக்கக் கேட்டாள்… “நான்?….. என்னோட கல்யாண வாழ்க்கையை மறக்க முயற்சி செய்யனும்…. இனி என் குடும்பம் சந்தோஷம் எல்லாமே என் அக்கா மாமா என் தேவதை அம்மு… இனி வரப்போற என் மருமகனும் தான்… இனி இந்த குடும்பம் மட்டும் தான் வாழ்க்கை” என்றான் முடிவாக….. பதறிப்போனாள் வாசுகி, “அப்படி சொல்லாத அப்பு… நாங்களும் உன் கூடவே இருப்போம் தான்….
ஆனா உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையனும் தங்கம்…. மான்சியை விட நல்லப் பொண்ணா உனக்கு கிடைச்சு நல்லதொரு குடும்ப வாழ்க்கை அமையும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு அப்பு” என்றவளின் வாயை அவசரமாகப் பொத்திய சத்யன்…. “இன்னொரு பொண்ணுக்கு இனி வாய்பேயில்லைக்கா… இந்த ஏமாற்றமே என் வாழ்நாள் முழுமைக்கும் போதும்” என்றான் முடிவாக….
உடனடியாக இந்தப் பேச்சை எடுத்தது தவறுதான் என்று புரிய “சரி சரி நான் எதுவும் பேசலை… நீ வா அப்பு சாப்பிடலாம்” என்று தம்பியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தாள்… “மாமா… அக்கா எங்கப் போய்ட்டா?” என்று மழலையில் கேட்ட அம்மூவை அணைத்துக் கொண்டு கண்கலங்கியவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்ட ஆதி “சத்யா, கன்ட்ரோல் ப்ளீஸ்” என்று எச்சரித்தான்…
துயரம் நெஞ்சை நிரப்பியிருந்தாலும் கர்ப்பிணியாக இருக்கும் தனது சகோதரிக்காகவேனும் தனது துயரத்தை மறைத்து இயல்பாக வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்திலிருந்தான் சத்யன்…. புதியதாக உருவாகியிருந்த குழந்தையைக் கொண்டாட வேண்டியவர்கள்… தனது துன்பத்தால் சந்தோஷத்தை மறந்து வாழ வேண்டாமென்று நினைத்தான் சத்யன்….
அந்த வாரத்தில் ஒருநாள் பவானி அனுப்பியதாக நான்கு பேர் ஆதியுடன் வந்து அவர்களின் உடைமைகளை எடுத்துச் செல்ல…. அன்று முழுவதும் சத்யன் தனது அறையை விட்டு வெளியே வரவேயில்லை…. அவனது அறையிவலிருந்த உடைகளை எடுத்துச் சென்ற வாசுகி தலை தாங்கி அமர்ந்திருந்த தம்பியைப் பார்த்து கண்ணீர் சிந்திவிட்டுச் சென்றாள்…. அடுத்து வந்த நாட்களில் தனது அலுவலில் கவனம் செலுத்தி தன்னை மறக்க… மறைத்து வைக்க முயன்றான்….
அதற்கு மதி பெரிதும் உதவினான்…. முடிந்த வரை முக்கியமான நிறைய அலுவல்களை சத்யனின் மீது சுமத்தினான்… கருவுற்றிருக்கும் அக்காவுடன் மாமா இருந்தால் நல்லது என்றுணர்ந்த சத்யன் மதியை மதியத்தோடு வீட்டிற்கு அனுப்பிவைக்கத் தொடங்கினான்…..