“முதலில் அவள் இனி தன் பிறந்த வீட்டில் வாழமாட்டாள் என்பது முன்னரே அவளுக்கு சொல்லப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டு இருத்தல் வேண்டும்… அங்கு என்னென்ன செய்ய வேண்டும்.. யார் யார் இருக்கிறார்கள் என்று பிறந்த வீட்டிலேயே கூறிப் பழக்கப்படுத்த வேண்டும்…
எதையும் பயிற்றுவித்தால் சரியாகச் செய்வாள்… உதாரணத்திற்குச் சொன்னால்… முதல் நாள் காப்பி எப்படி போடுவது என்று சொல்லிக் கொடுத்தால் எப்படி என்பது அவளுக்குள் பதிந்திருக்கும்…. மறுநாளும் சொல்லிக் கொடுக்க வேண்டும்…. இதையே பழக்கப்படுத்தினால்… தினமும் அதே நேரத்திற்கு அவள் போட்டுக்கொடுப்பாள்.. ஆனால்…
திடீரென்று விருந்தினர் வந்திருக்கிறார்கள் என்று அவளை காப்பி போடச் சொன்னால் அது சிரமமான காரியம்… வழக்கமாகத் தயாரிக்கும் இரண்டு கப்பிற்கு மேல் போடத் தெரியாது…. இதுதான் இவளைப் போன்றவர்களின் நிதர்சனம்” “இவங்களோட வெளி வட்டாரத் தொடர்பு எப்படியிருக்கும்… யாராவது நெருங்க முடியுமா?” என்று ஆதி கேட்க…
“நெவர் ஆதி,, யாருமே நெருங்கி பழக முடியாது… ஆரம்பத்தில் சொல்லிக் கொடுத்தவர்கள் தவிர வேறு யாரின் சொல்படியும் கேட்கமாட்டார்கள்…. ஏன் அறிமுகமில்லாத புதியவர்கள் வருகை… புதியவர்களுடன் பழகுதல் எல்லாமே சிரமமான விஷயம் தான்…” என்று டாக்டர் கூறினார்…
சங்கடமாக நிமிர்ந்த சத்யன் “ஒரு முக்கியமான கேள்வி டாக்டர்,, இவர்களின் ஹோர்மோன்ஸ் சரிவர வேலை செய்யுமா? பழக்கப்படுத்தினால் இயல்பாக இவள் படுக்கையறையில் பயன்படுவாளா? அல்லது இந்த ஐந்து நாட்கள் போல் எப்போதும் ஜடம் தானா?” என்று கேட்க….
“ம் ம் கிட்டத்தட்ட ஜடம் தான் சத்யன்…………. ஆனால் இவள் பெண்… கணவனின் அன்பு இவளை பிற்காலத்தில் இயக்குவிக்கலாம்… இயல்பான உறவுக்கு வழி வகுக்கலாம்… ஆனால் ஒரு ஐந்து சதவிகித வாய்ப்பாகத் தான் இது சாத்தியப்படும் சத்யன்” என்றார்… “அப்படின்னா முதலில் சொல்லிக்கொடுக்கும் நபர்தான் இறுதி வரை சொல்லித் தரனுமா? அல்லது வேறு ஒருவர் சொன்னாலும் கேட்பார்களா? அதாவது நான் சொல்வதையும் கேட்க வாய்ப்பிருக்கா டாக்டர்” என்று பரபரப்பும் ஆர்வமுமாகக் கேட்டான்
“சத்யன்,, ஒரு குழந்தைக்கு அம்மா தான் அப்பாவை அறிமுகப்படுத்துவாள்…! அந்த அறிமுகம் நடக்கவில்லை என்றால் பிள்ளை அப்பா என்று ஒருவரை நம்பிப் பழகுமா…? சொல்ல முடியாது அல்லவா…… அப்படித்தான் இதுவும்…. இவர் நம்பகமானவர்…. இவர் சொன்னாலும் நீ செய்யலாம் என்று அவளது தாய் சொல்லிக்கொடுத்தால்…. கணவன் சொன்னாலும் அவள் செய்யக் கூடும்…! ஆனால் அது ஒரே நாளில் நடந்துவிடாது……… மாதங்கள் அல்ல…
வருடங்கள் கூட ஆகலாம்… எல்லோர் பேச்சையும் கேட்டு நடக்கும் பழக்கம் இருக்காது…. அதுவும் தாய் வளர்த்தப் பெண்… தனியாக வளர்ந்தவள் என்பதால் அப்படியே சொல்லி வளர்த்திருப்பார்கள்…” என்று டாக்டர் விளக்கம் கொடுத்தார்….”இவர்களுக்கு மருத்துவம் கவுன்சிலிங் இவை எப்படி? சாதரண மனநல மருத்துவம் போதுமா?” என்று சத்யன் கேட்க….
“மூர்க்கத்தனமானவர்களுக்கு மட்டும் தான் மருந்து…. அதாவது அவங்களை கட்டுப்படுத்தும் மருந்து மட்டுமே…. மத்தபடி நோய்க்கான மருந்து இதுவரை இல்லை சத்யன்…. கவுன்சிலிங் அப்படின்னா……….. அவளது மனதை அறிய பயன்படலாம்… ஆனால் எந்தளவிற்கு என்று சொல்ல முடியாது….. ஆனால்……… அவள் கணவனுக்கு குடும்பத்திற்கு என்று அவளுடன் பழகுவோர் எல்லோருக்கும் கவுன்சிலிங் நிச்சயம் தேவை…. அவளை எப்படிப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற கவுன்சிலிங் மற்றவர்களுக்குத் தான் வழங்கப்படும் சத்யன்”
“இத்தனை கொடூரமானதா இந்த நோய்?.ஆட்டிசத்தில் மான்சிக்கு வந்திருக்கும் நோய்ப் பற்றிய பெயர் விபரம் எனக்குத் தெரியனும் டாக்டர்?” என்று அவளது கணவனாக அக்கறையுடன் கேட்டான்… “சத்யன்,, ஆட்டிசத்தில் பலவகை உண்டு தான்… ஆனால்…….. ஒவ்வொருவருக்கும் அறிகுறிகளும் செயல்பாடும் வித்தியாசப்படுவதால்….
இன்னது என்று சொல்லாமல் ஆட்டிசம் என்றே பொதுவாக சொல்வார்கள்… மான்சிக்கு இருக்ககூடிய ஆட்டிசம் என நான் கருதுவது…. Asperger’s Syndrome வகையா இருக்கலாம்” என்றவர் “இன்னும் விபரமாகச் சொல்லனும்னா ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல… இது ஒரு மூளை வளர்ச்சிக் குறைபாடு… மூளையின் முக்கிய செயற்பாடுகளாகிய பேச்சுத்திறன்… சமுதாயத் தொடர்பு… புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கப்படுவதால்… நாம் யார்…
எங்கே இருக்கிறோம்… என்ன செய்ய வேண்டும்… என்ற விவரங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது… அல்லது புரிந்துகொள்வதில் தாமதங்கள் இருக்கும்… இவர்களுக்கு நினைவாற்றல் உண்டு தான்… ஏதாவது ஒரு விஷயத்தில் ரொம்பவும் தீவிரமான ஆர்வம் காட்டுவாங்க…. இவர்களால் எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கை வாழ முடியாது…”
“ரெண்டுவயதுக் குழந்தையிடம் ஒரு மாதம் கூட நிரம்பிடாத குட்டிப் பாப்பாவைக் கொடுத்தால் என்னாகும்?…. ரெண்டு வயதுக் குழந்தைக்கு பாப்பாவை எப்படித் தூக்க வேண்டும்… எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் தெரியாது அல்லவா…? பொம்மை தானே என்று எண்ணி கண்டபடி அசைக்கப் பார்க்கும்… இவர்களும் அப்படித்தான்….. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள்…. கடிப்பார்கள்… அடிப்பார்கள்… கிள்ளுவார்கள்…
இதெல்லாம் இவர்களின் ஆசையை அன்பை வெளிப்படுத்தும் விதம்…. அவர்களுக்கு அப்படியொரு செயல்பாடு… தங்களுக்கு ஒருவரைப் பிடித்திருந்தால்… அதை காட்டத் தெரியாமல் கிள்ளிவிடுவார்கள்… இப்படியெல்லாம் உண்டு… ஆட்டிசம் குறைபாடு இருப்பதை மூன்று வயதிற்குள் கண்டுபிடித்துவிட்டால்… சில பயிற்சிகள் தொடர்ச்சியாக கொடுத்து வருவதன் மூலம் அவர்களுக்கு சில அன்றாட விஷயங்களைக் கற்றுக்கொடுக்கலாம்…
வயது கூடக் கூட… பயிற்சிகள் அளிப்பது என்பது மிகக் கடினமானது… ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள்… மற்றவர் முகம் பார்த்து பேச மாட்டாங்க… தனிமை விரும்புவாங்க… காது கேளாதது போல் இருப்பாங்க… காரணமின்றி மற்றவரைத் தாக்குவாங்க…. சாதாரணமாக ஒருவரால் தாங்கிக்கொள்ள முடியாத வலியைக் கூட இவங்க சுலபமாகத் தாங்குவாங்க… அடம்பிடித்தல் இருக்கும்… சிலருக்கு கட்டியணைத்தால் மூர்க்கக் குணம் வரும்.. இப்படி நிறையவே இருக்கு சத்யன்”