பொம்மலாட்டம் – பாகம் 11 – மான்சி தொடர் கதைகள்

0bath3” எழுந்து போய் குளி ” என்று அதட்டலாகக் கூறவும் … மவுனமாக எழுந்து குளியலறைக்குச் சென்றாள் …. வேறு வழியில்லை … வேலைக்காரர்களோ அக்காவோ பார்த்துவிடும் முன்பு நாமே சுத்தம் செய்துவிடலாம் என்ற தோன்ற நனைந்துவிட்டிருந்த மெத்தை விரிப்பு போர்வை என எல்லாவற்றையும் எடுத்துவிட்டு வேற மாற்றினான் …..

அவன் மாற்றி முடிக்கும் வரை மான்சி குளியலறையிலிருந்து வெளியே வரவில்லையென்றதும் குழப்பம் மேலிட குளியலறைக் கதவைத் தட்டி ” மான்சி என்னப் பண்ற ?” என்று கேட்க … ” குளிக்கிறேன்” என்று பதில் வந்தது …. ” இவ்வளவு நேரமாவா ? கதவைத் திற மான்சி ” என்றதும் கதவைத் திறந்தாள் ….உடலில் பொட்டுக் கூட உடையில்லை …. ஆனால் கூச்சமின்றி நின்றிருந்தாள் …. குளியலறை மொத்தமும் சோப்பு நுரையாக இருந்தது …. ” ஏன் இவ்வளவு நுரையா இருக்கு ” என்றபடி உள்ளே வந்தான் … முதல் நாள் தான் வைக்கப்பட்டிருந்த புதிய சோப்பும் … ஒரு பெரிய ஷாம்பு பாட்டிலும் முற்றிலும் காலியாகியிருந்தது …. அதிர்ந்து போனவனாக ” இவ்வளவும் போட்டு குளிச்சியா ?” என்று கேட்க …

ஆமாம் என்று தலையசைத்தாள் …. தலையில் அடித்துக்கொண்டு அவளை வெளியே இழுத்து வந்தவன் அலமாறியிலிருந்து ஒரு நைட்டியை எடுத்து அவள் மீது வீசியவன் ” இதைப் போட்டுக்கிட்டு கீழ உன் அம்மா கிட்ட போ ” என்று கத்தினான் …. இதற்கும் சரியென்றுவிட்டு உடை மாற்றிக் கொண்டு அங்கிருந்து கீழே சென்றாள் ….

தனது மொபைலை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்று தரையில் அமர்ந்து ஆதிக்கு கால் செய்தான் … இரண்டே ரிங்கில் ஆதி எடுக்கவும் ” என் ரூமுக்கு வா ஆதி ” என்று மட்டும் கூறிவிட்டு மொபைலை அணைத்து கீழே போட்டு விட்டு தலையில் கை வைத்துக் கொண்டு சாய்ந்தான் ….இரண்டே நிமிடத்தில் வந்து சேர்ந்தான் ஆதி ….அறைக் கதவு திறந்தே கிடக்க … உள்ளே நுழைந்தவன் படுக்கையைப் பார்த்தபடி பால்கனிக்கு வந்தான் …. தரையில் அமர்ந்திருந்த சத்யனைப் பார்த்ததும் நிமிட நேரம் நின்றுப் பார்த்தவன் அவனும் தரையில் அமர்ந்து ” என்னாச்சுடா ?” என்று தான் கேட்டான் … இதயம் குமுற அத்தனையும் கொட்டிவிட்டான் சத்யன் ….. ” ஏன் இப்புடியிருக்கான்னே தெரியலை ஆதி ? அக்கா மாமாவுக்கு இதெல்லாம் தெரிஞ்சா தாங்க மாட்டாங்கடா ” என்றான் வேதனையுடன் ….

See also  மனசுக்குள் நீ - பாகம் 18 - மான்சி தொடர் கதைகள்

சற்றுநேரம் அமைதியாக இருந்த ஆதி வரும்போது எடுத்து வந்திருந்த இரண்டு புத்தகங்களை சத்யனிடம் கொடுத்து ” உன் மாமியார் ரூம்லருந்து எடுத்துட்டு வந்தேன் … திறந்து பாரு … எல்லாம் புரியும் ” என்றான் .. திகைப்புடன் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்தான்…. ஒன்று டைரி போன்று இருந்தது … அதில் இவன் குடும்பத்தினரின் படங்கள் ஒட்டப்பட்டு அதன் கீழே அவர்களைப் பற்றிய அனைத்து விபரங்களும் எழுதப்பட்டிருந்தது ….

சத்யனின் புகைப்படம் உள்பட … அடுத்தது ஒரு காமசூத்ரா புத்தகம் … உடலுறவின் சகலமும் புகைப்படங்களாகவும் எழுத்துக்களாகவும் விபரமாக எழுதப்பட்டிருந்தது ….. அதிர்ச்சியுடன் தனது நண்பனை ஏறிட்டான் சத்யன்… ” என்னடா இதெல்லாம் ?” என்றான் … சத்யனின் கையைப் பற்றிய ஆதி ….” உன் மனைவி ஒரு ஆட்டிசம் நோயாளி சத்யன் …. ஆட்டிசம் என்று பொதுவாக சொல்வாங்க சத்யா … மான்சிக்கு இருக்ககூடிய ஆட்டிசம் என நான் நினைக்கிறது …. Asperger’s Syndrome என்ற வகையைச் சேர்ந்தாக இருக்கலாம் ” என்றான் தெளிவாக …. ” அப்படின்னா ….?” ” ம் ம் …. குணப்படுத்தவும் முடியாத …. மருந்துகளும் இல்லாத மனநோய் உன் மனைவிக்கு ” என்றான் ஆதி …

” காட்டாறு நீயென எண்ணியிருந்தேன் ….
” வெறும் கானல் நீர் தானா கண்ணே?

” பூ பூத்ததும் வாசம் வருமென காத்திருந்தேன் ….
” வாசமில்லா மலர் நீயென புரியாமல் போனதடி!!

” இசைத்தால் ராகம் வருமென என்றிருந்தேன்….
” தந்திகள் இல்லாது பழுதான வீணையா நீ ?

” நிலவை மேகம் மறைக்கிறதோ பார்த்திருந்தேன்…
” நிலவேயில்லாத அம்மாவாசை இரவா நீ ?

” நீ கிடைத்தது பிறவி பலன் என நினைத்தேன் …
” விதி விளையாடியிருப்பது என் வாழ்வில் தானா?ஆதி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றான் சத்யன்…. “நான் காதலென்று எண்ணியது கானலா? காதல் தேவதை என்று எண்ணியவள் சிறகில்லாத சிலையா? ” என்ற பெரியதொரு கேள்வியுடன் அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்துவிட்டான்…. நண்பனின் தோளில் ஆறுதலாக கைவைத்த ஆதி “சத்யா,, இதெல்லாம் மான்சியையும் அவ அம்மாவையும் டீப்பா நோட் பண்ணி நான் கண்டுப் பிடிச்சது….

இதுதான் அப்படின்னு உறுதியா தெரியனும்னா நாம ஒரு சைக்காயட்றிஸ்ட்டைப் பார்த்தாகனும்…. அவர் இதை உறுதி செய்தப்புறம் தான் நாம எதையும் முடிவு பண்ணனும் சத்யா” என்றான்…. பிரம்மை நீங்காதவன் போல் அமர்ந்திருந்த சத்யன்…. “அப்போ மான்சிக்கு மனநல பாதிப்புன்னு சொல்றயா மச்சி?” என்று கேட்க…

See also  மான்சிக்காக - பாகம் 60 - மான்சி கதைகள்

நண்பனின் கலக்கம் கவலையைக் கொடுக்க அவனது தோள்களைப் பற்றித் தூக்கி சோபாவில் அமர வைத்து விட்டு அருகே அமர்ந்த ஆதி… ” மச்சி,, ஆட்டிசம் அப்படின்றது…. தமிழில் தன்முனைப்புக் குறைப்பாடு அப்படின்னு அர்த்தப்படும்…. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் ஆட்டிசம் என்பது ஒரு நோய் அல்ல… இது ஒரு மூளை வளர்ச்சிக் குறைபாடு…!மூளையின் முக்கிய செயற்பாடுகளாகிய பேச்சுத்திறன்… சமுதாயத் தொடர்பு… புலன் உணர்வு ஆகியவை பாதிக்கப்படுவதால்… நாம் யார்… எங்கே இருக்கிறோம்… என்ன செய்ய வேண்டும்… என்ற விவரங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது… அல்லது புரிந்துகொள்வதில் தாமதங்கள் இருக்கும்…!

இவர்களுக்கு நினைவாற்றல் உண்டு தான்…! ஏதாவது ஒரு விடயத்தில் ரொம்பவும் தீவிரமான ஆர்வம் காட்டுவாங்க…. இவர்களால் எல்லோரையும் போல இயல்பாக வாழ முடியாவிட்டாலும் நிச்சயம் மனநோயாளிகள் கிடையாது மச்சி… இன்னைய காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளில் பலருக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கு…இது ஒவ்வொருத்தருக்கும் வித்தியாசப்படும் சத்யா” என்று தனக்குத் தெரிந்தவற்றை சத்யனுக்குத் தெளிவுப்படுத்தினான்.. அவன் என்ன கூறினாலும் சத்யனின் முகம் மாறவில்லை துன்பமும் துயரமும் ஒருங்கே முகாமிட்ட முகத்தோடு நிமிர்ந்து நண்பனைப் பார்த்தான் “நம்ம அக்காடா? அக்காவுக்கு இதெல்லாம் தெரிஞ்சா?” என்றான் துயரமாக….

நன்றி:- சத்யன் 

error: read more !!