பொம்மலாட்டம் – பாகம் 09 – மான்சி தொடர் கதைகள்

img-20161209-wa0035குளித்துவிட்டு கீழே வரும்போது மாடிப்படியின் இறுதியில் பதட்டமாக நின்றிருந்தாள் பவானி…. மகளைக் கண்டதும் வேகமாகச் சென்று கைகளைப் பற்றியவள் …. ” குளிச்சிட்டியாடா ?” என்று கேட்க …. ஆமாம் என்று தலையசைத்தாள் மான்சி …

” சரி வா… காபி குடிக்க ” என்றவள் அடுத்ததாக வந்த சத்யனைக் கண்டதும் ஏனோ கண்கள் கலங்க சங்கடமாகத் திரும்பிக் கொண்டாள் …. சத்யனுடன் அமர்ந்து தான் காபி அருந்தினாள் …. வாசுகி காலை உணவுக்கான வேலையில் பிஸியாக இருக்க…. மதி கல்யாணத்திற்காக வாங்கிய பொருட்களில் மிச்சமிருந்ததை சரிபார்த்துக் கொண்டிருந்தான் …அரட்டையும் சிரிப்புமாக இருக்கும் ஆதியிடம் கூட அமைதி … அடுத்ததாக காலை உணவின் போது வாசுகியுடன் பவானியும் சேர்ந்து பரிமாற ஆரம்பித்தாள் …. ” நீங்களும் உட்காருங்க அத்தை …. நானே பார்த்துக்கிறேன் ” என்ற வாசுகியிடம் ” இருக்கட்டும்மா … நான் உன் கூட சாப்பிடுறேன் ” என்றாள் பவானி … மான்சி இரண்டு இட்லி சாப்பிட்டு முடித்ததும் ஒரு தோசையை தட்டில் வைத்த பவானி ” இதோட போதும் பாப்பா ….தோசையை சாப்பிட்டு கை கழுவிக்கோ ” என்றதும் அனைவரின் பார்வையும் அவளிடம் திரும்பியது …

” ஏன் அத்தை அப்படி சொல்றீங்க ? அவளுக்கு எவ்வளவு சாப்பிடத் தோனுதோ சாப்பிடட்டுமே ?” என்று வாசுகி கேட்க …. எல்லோரையும் சங்கடமாகப் பார்த்தவிட்டு ” இல்ல….. உடம்பு வெயிட் போட்டுடுவா … அதான் …. ” என்றாள் சமாளிப்பாக …. ஆதி, வேகமாக நிமிர்ந்துப் பார்த்துவிட்டு கவிழ்ந்து கொண்டான் …. சத்யன் புன்னகையுடன் மனைவியைப் பார்த்துவிட்டு ” குண்டானாலும் அழகாத்தான் இருப்பா ” என்றான் ….வாசுகியும் மதியும் சிரித்துவிட …. மான்சி எல்லோரையும் ஒரு முறைப் பார்த்துவிட்டு மீண்டும் உணவில் கவனமானாள் …. அம்மா சொன்னது போல் இரண்டு இட்லி ஒரு தோசைக்கு மேல் துளிகூட உண்ணாமல் எழுந்து கொண்டாள் …. தனது சிரிப்பிற்கும் பேச்சுக்கும் பதில் இல்லாமல் போய்விட சத்யனும் யோசனையுடன் பாதி உணவில் எழுந்து கொண்டான் ….

சாப்பிட்டு முடித்தவுடனேயே தனது அம்மாவுடன் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றுவிட்டாள் …. நண்பனுடன் ஹாலுக்கு வந்து அமர்ந்தான் சத்யன் …. ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த ஆதி ” என்ன சத்யா ? நைட் எல்லாம் ஓகே தானே?” என்று இயல்பாகக் கேட்பது போல் கேட்டான். நிமிர்ந்து அவனது முகம் பார்த்துவிட்டு மீண்டும் தலைகவிழ்ந்த சத்யன் ” ம் ம் ஓகேதான்டா ….

See also  பொம்மலாட்டம் - பாகம் 07 - மான்சி தொடர் கதைகள்ஆனா மான்சிக்கிட்ட எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத மாதிரி தோனுது ” என்றான் …. ” ம் ம் … ” என்ற ஆதி …. சில பெண்கள் அப்படித்தான் மச்சி … செக்ஸ் அறிவு குறைவால் இதுபோல இருக்கலாம் …. போகப் போக சரியாகிடும் ” என்றவன் குரலை சற்றுத் தனித்து ” மான்சியோட அம்மா காலைல கால் பண்ணாங்களா ?” என்று கேட்டான் ….

ஆச்சர்யமாக நண்பனைப் பார்த்தவன் ” ஆமாடா …ஆறு மணிக்கே கால் பண்ணி அவசரமா மான்சிக்கிட்ட பேசனும்னு சொன்னாங்க …. ஆமா… உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்க…. ” சும்மா ஒரு கெஸ் தான்…. இத்தனை வருஷமா மகளை பிரியாம இருந்தவங்க … ஒரு நைட் பிரிஞ்சிருந்ததும் ரொம்ப பதட்டமாகிட்டாங்க போலருக்கு … காலைல ஐஞ்சு மணிக்கே எழுந்து மாடிப்படிக் கிட்ட நடந்துக்கிட்டே இருந்தாங்க …

அதான் கேட்டேன் ” என்றான் ஆதி …. “ஆமாம் ஆதி … பாவம் அவங்க …” என்றான் சத்யன் …. “ஏன் மச்சி … இனி அந்தம்மா எப்புடி தனியா இருப்பாங்க ?” என்று ஆதி கேட்க … ” இல்ல மச்சி நாங்க கல்யாணம் பேசப் போனப்ப அவங்களோட முதல் கண்டிஷனே ஒன்னு மாப்பிள்ளை அவங்க வீட்டோட வரனும் …. இல்லேன்னா இவங்க தன் மகள் கூடவே வந்து தங்கனும்றது தான் ….நான் வீட்டோட போக முடியாதுனு தெரிஞ்சதால அக்கா அவங்களை இங்கயே தங்க வச்சுக்க முடிவு பண்ணாங்க … இப்போ அவங்க இருந்த வீட்டை யாருக்காவது லீசுக்கு விடனும்னு முடிவு பண்ணிருக்கோம் ” என்று தெளிவுப்படுத்தினான் சத்யன் …. சற்றுநேரம் அமைதியாக இருந்த ஆதி … ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து ” அதுவும் நல்லது தான் மச்சி … ” என்றுவிட்டு …

” அப்புறம் ஒரு விஷயம் சொல்லனும் மச்சி … அப்பாவும் அம்மாவும் கிராமத்துக்குப் போயிருக்காங்கன்னு உனக்குத் தெரியும் … நான் எங்க வீட்டுல தனியா இருக்கிறதை விட அவங்க வர்ற வரைக்கும் இங்கயே இருக்கிறதுன்னு முடிவு பண்ணிருக்கேன் … அக்கா மாமாகிட்டயும் சொல்லிட்டேன் ” என்றான் …

” இதென்னடா பேச்சு ? இதுவும் உன் வீடு தான் மச்சி …. அனுமதி தேவையில்லை ” என்று சத்யன் கூறியதும் நண்பனை அணைத்துக் கொண்டான் ஆதி …. ஆதியின் அப்பா மெடிக்கல் புக் சென்டர் வைத்து நடத்தியவர் …அப்பாவின் பிஸினஸை ஆதி பொருப்பேற்றதும் மருத்துவம் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் மட்டுமின்றி மருத்துவ உபகரணங்களும் விற்பனை செய்ய ஆரம்பித்தான் …

See also  பொம்மலாட்டம் - பாகம் 34 இறுதி - மான்சி தொடர் கதைகள்கோவை மருத்துவத்துறையின் மிக பிரபலமான புத்தகநிறுவனம் இவர்களுடையது தான் …. ” நான் கடைக்கு கிளம்புறேன் சத்யா … ஏதாவது பேசனும்னு நினைச்சா கால் பண்ணுடா ” என்று கூறிவிட்டு ஆதிப் புறப்பட்டான் … அம்மாவுடன் அறைக்குள் சென்ற மனைவி திரும்பி வருவாள் என்று ஹாலிலேயே காத்திருந்தவன் அவள் வரவேயில்லை என்றதும் ” ஒருவேளை தூங்குறோளோ என்னவோ ?’ என்று தனக்குத் தானேக் கூறிக்கொண்டு தனது அறைக்குச் சென்றான் ….

அலுப்புத் தீர உறங்கியவன் அன்று மதிய உணவிற்காக கீழே வந்த போது மான்சி ஹாலில் அமர்ந்திருந்தாள் … கூடவே அவளது அம்மாவும் …. அம்ருதாவிற்கு சோறூட்டிக் கொண்டிருந்த வாசுகி … ” உனக்காகத்தான் எல்லாரும் வெயிட்டிங் சத்யா ….. வா சாப்பிடலாம் ” என்று அழைத்தாள் … ” ம் இதோ வர்றேன்க்கா ” என்றவன் இயல்பாக மான்சியின் அருகே வந்து அமர்ந்தான் …. திரும்பிப் பார்த்து சிரித்தாள் ….

” உன் அம்மா கூட ரூமுக்குள்ள போனவ திரும்ப வெளிய வரவேயில்லையே? நல்லா தூங்குனியா மான்சி? ” என்று கேட்க … பதிலாக தலையை மட்டும் அசைத்தாள் … சிரிப்புடன் மான்சியின் கைகளைப் பற்றிய சத்யன் பவானியிடம் திரும்பி ” அத்தை … மான்சி விஷயத்துல நீங்க ரொம்ப பயப்படுறீங்கன்னு நினைக்கிறேன்?…. நீங்க கவலையேப்படாதீங்க நான் பத்திரமாப் பார்த்துக்குவேன் ” என்று ஆறுதலாகக் கூறினான் …” அப்படிலாம் இல்லை தம்பி …. உலகம் தெரியாம என்னை சார்ந்தே வளர்த்துட்டேன் …. எல்லாம் தெரிஞ்சுக்கிற வரைக்கும் எனக்கு கொஞ்சம் பதட்டம் தான் ” என்றாள் மகளை கீழே இறக்கிவிட்டு வந்த வாசுகி ” அதெல்லாம் ஒரு பதட்டமும் வேண்டாம் அத்தை …. சரியாகிடுவா ” என்று ஆறுதலாக …. சத்யன் அம்ருதாவை தூக்கிக் கொள்ள … எல்லோரும் சாப்பிட சென்றனர் …. காலை போலவே இப்போதும் சாம்பார் சாதம் முடிந்ததும் ரசம் ஊற்றிய பவானி ” போதும் பாப்பா ” என்று கூறவும் சரியென்று தலையசைத்து விட்டு எழுந்து கொண்டாள் மான்சி ….

அன்றைய இரவும் முன்தினம் போலவேதான் கடந்து சென்றது …. அவனுக்குத் திருப்தியாக அவள் இருந்தாள் … ஆனால் அவளது உணர்வுகள் துளிகூட வெளிகாட்டப் படவில்லை …. இன்றும் சத்யனது தாழ்வுணர்வானது அதிக வேகத்தைக் காட்ட வைத்தது …. இப்படியே கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கடந்து சென்றது ….சத்யனுக்கு அந்த ஐந்து நாட்களிலேயே மண வாழ்க்கையில் ஒருவித வெறுமை தோன்ற ஆரம்பித்தது …. இந்த நாட்களில் கொண்ட உறவில் ஒருமுறை கூட மான்சிக்கு உச்சமோ உணர்வுகளின் வெளிப்பாடோ ஏற்படவில்லை என்பதும் பெரும் கேள்விக் குறியாக இருந்தது …. மகள் யார் வீட்டுக்கும் விருந்துக்கு செல்ல பவானி அனுமதிக்கவில்லை …. கோவில்களுக்கு சென்றால் கூட பவானியும் உடன் சென்றாள் …..

See also  மான்சிக்காக - பாகம் 22 - மான்சி கதைகள்

நன்றி :- சத்யன்

error: read more !!