பொம்மலாட்டம் – பாகம் 03 – மான்சி கதைகள்

IMG-20160624-WA0028-1இருவரும் தங்களின் பெற்றோர் ஞாபகத்தில் கண்ணீருடன் நிற்க… அதைக் கண்ட சத்யனின் நண்பர்களுக்கும் கண்கள் கலங்கியது …. ஆதி முன்னால் வந்து இருவரின் தோளிலும் கை வைத்து

” இன்னைக்கு அழவேண்டாம்க்கா …. அம்மா அப்பா ஆசிர்வாதம் உங்க ரெண்டு பேருக்கும் எப்பவுமே உண்டு …. நாம இப்போ மண்டபத்துக்குப் போகனும் … மாமா நாலாவது முறையா கால் பண்ணிட்டார் ” என்று ஞாபகப்படுத்தினான் …. இருவரும் கண்களைத் துடைத்துக் கொண்டு வாசலுக்கு வந்து காரில் ஏற … ஓடி வந்த அம்ருதா ” நான் பர்ஸ்ட் ” என்று முதலாவதாக ஏறிக் கொண்டாள் …..



கார் திருமண மண்டபம் சென்றடைந்தது …மதி இவர்களுக்காக வாசலிலேயே காத்திருந்தான் …. ” எவ்வளவு நேரமா வெயிட் பண்றது ? ” என்று மனைவியிடம் கேட்டவன் பக்கத்திலிருந்தவரிடம் ஏதோ கூற …. அவர் சென்றதும் தயாராக இருந்த சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுத்து வந்து சத்யனுக்குச் சுற்றினர் …

” இந்த ரூல்ஸ் யார் மாமா போட்டது ? சின்ன பொண்ணுங்க வந்து ஆரத்தி சுத்தினா எவ்வளவு கில்மாவா இருக்கும் …. எல்லாம் கிழவிக ” என்று ஆதி மதியின் காதில் கிசுகிசுக்க…. ” டேய் நான் முறைக்குதான் மாமா … நிஜமாவே மாமாவாக்கிடாதீங்கடா ” என்றான் மதி …. ” ஆத்திர அவசரத்துக்கு மாத்திக்கிட்டாத் தப்பில்லை மாமா ” என்ற ஆதி … மதி அடிக்கும் முன் வாசுகியின் பின்னால் மறைந்தான் …..

சத்யனின் நெற்றியில் செந்நீர் திலகமிடப்பட்டு உள்ளே அழைத்துவரப் பட்டான் ….. குறும்பும் சிரிப்பும் கெட்டிமேளச் சத்தத்தையும் மிஞ்சியது …. மேளச் சத்தம் அதிகமாக இரைச்சலுக்கு நடுவே … காதோடு பேசுவதும் .. எல்லோரும் உரக்க உரக்கப் பேசுவதும் கல்யாண வீட்டில் தனி அழகு தான் …. ரிசப்ஷன் மேடையில் இருந்த அலங்காரம் செய்யப்பட்ட இருக்கைகள் இரண்டில் ஒன்றில் அமர்ந்த சத்யன்



” மான்சியை எப்பக் கூட்டி வருவாங்கன்னு கேளுடா ஆதி ” என்று ரகசியமாகக் கூற …. அவனோ மேடைக்கு நடுவே வந்து ” பொண்ணை எப்ப கூட்டி வந்து பக்கத்துல உட்கார வைப்பீங்கன்னு மாப்ளை கேட்க்குறாருங்கோவ் …….” என்று உரக்கக் கூவி ஊருக்கே அறிவித்தான்… கூட்டத்தினரோடு வாசுகியும் மதியும் சிரித்து விட சத்யன் சங்கடமாக தலையை கவிழ்ந்து பக்கத்திலிருந்தவனிடம்

” இந்த பரதேசியை பெத்தாங்களா இல்ல வாந்தியெடுத்தாங்களா மச்சான் ? பயபுள்ள மானத்தை வாங்கிட்டான்யா ” என்றான் … சத்யனை வெகுநேரம் வரை தவிக்கவிடாமல் பூலோக ரம்பையாக புதுமணப்பெண் வந்தாள் … வந்தாளா மிதந்தாளா என்று கூட தெரிந்துகொள்ள முடியாத மென்நடையாக அழைத்துவரப்பட்டு சத்யனின் அருகே அமர்த்தப்பட்டாள் ….

See also  பொம்மலாட்டம் - பாகம் 25 - மான்சி தொடர் கதைகள்



ஏழாம்பிறை நெற்றியைத் தொடும் சுட்டியாக நானிருக்க மாட்டேனோ என்று ஏராளமானோர் ஏங்கியிருப்பார்களோ?….. விழிக்கு விசிறியாக நிற்கும் இமை மயிர்களில் ஒன்றாக நானிருந்து உதிரத் தயார் என்று சபதமெடுத்தவர்கள் எத்தனைப் பேரோ? அந்த கூர் நாசியின் நுனியின் என் மூச்சுக்காற்றாவதுத் தொட்டுப் பார்க்கட்டுமே என்று பெருமூச்செரிந்தோர் எத்தனைப் பேரோ?

இரு இதழ்களின் கடைக்கோடியில் நிறமாறித் தெரிந்த அந்த ஒற்றை மச்சமாக எனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துவிட்டுப் போகிறேனே என்று மன்றாடியவர்கள் எவ்வளவு பேரோ? அகில் புகைப் போட்டு அழகாக்கப்பட்ட அந்தக் கூந்தல் முடிப்பில் கொள்ளை போகாதவர்களும் உண்டோ? தனங்களைத் தாங்கும் கழுத்து …. அதைக் குருத்தோலையால் செய்திருப்பானோ பிரம்மன் ? கனம் கொண்ட தனங்களை உயர்த்தி நீ மூச்சிரைக்கும் போதெல்லாம் நான் மூர்ச்சையாகும்படி சாபமிட்டது யாரடிக் கண்ணே ….



உனது இடைவெட்டின் அடைப்பட்டுப் போன எனது இதயத்தை மீட்டெடுக்க எந்த போர்க்கருவியும் பயன்படாது போலிருக்கே ? இருந்துவிட்டுப் போகட்டும் என்று உன் இடையிலேயே விட்டுவிட்டுச் செல்ல அது என்ன இரவல் பொருளா? இதயமடிப் பெண்ணே இதயம் …. சுகமாக இருக்கிறது என்பதற்காக அமிர்த கடைசலை அள்ளிக் கொட்டிய உன் தேகத்தை அள்ளிக் குடிக்க முடியுமா … கிள்ளியெடுக்க முடியுமா? வேண்டாம் இந்த வேதனை தரும் சுக சோதனை …

உன் அழகைக் கண்டு கர்வப்பட்டு கர்வப்பட்டே என் காலம் முடிந்து போனால் பிற்காலத்தில் நீ என்ன செய்வாய் ? அதனால் விட்டுவிட்டு இப்படியொரு அழகு சோதனையை …. பிழைத்துக் கிடக்கட்டும் எனது இன்னுயிர் …. இந்தப் பட்டாடை என்ன பாவம் செய்தது? உனது மதிப்பு மிக்க உனது மதி வதனத்தில் பட்டதாலேயே பட்டாடையை குறைத்து மதிப்பிடப்படுகிறதே ?



பிரம்மன் ஏட்டில் செதுக்கி பட்டில் இழைத்த இந்த பாவைக்காக நாங்க பழியைத் தாங்குவோம் என்கின்றனவோ பட்டுப்பூச்சிகள் தங்கச்சிலைக்கு தங்க நகைகளைப் பூட்டி வைத்தவர்கள் மூடர்கள் என்று தங்கநகைகளே கூறுகின்றனவாம் …. பிறகென்ன … அவற்றின் ஜொலிப்பும் மதிப்பும் குறைந்து விட்டனவே ? இவள் பாதக் கொலுசாகப் பயன்பட்டதால் தான் நான் பவித்திரமடைந்தேன் என்று பெருமை பேசுமா உன் கொலுசு ? பேசிவிட்டுப் போகட்டும் ….

அந்த செவ்வாழைக் கால்களையாவது கண்டுவிடும் நோக்கில் காலமெல்லாம் காத்துக்கிடக்கும் காளையர்களில் காணக் கிட்டப்போவது எனக்கு மட்டும் தானே என்று கர்வம் கொள்கிறேனடி அழகே … அய்யகோ …. ஏடு தாங்கவில்லையடி உன்னைப் பற்றி எழுதினால்…… எத்தனைச் சொன்னாலும் ஈடேறவில்லை எனது ஆசைகள் …. அடிப் பெண்ணே … அகராதியில் உள்ள அத்தனை வார்த்தைகளிலும் தேடிக் களைத்துவிட்டேன் …

See also  பொம்மலாட்டம் - பாகம் 01 - மான்சி கதைகள்



உன் அழகுக்கு ஈடாக எவ்வார்த்தையும் புலனாகவில்லையேப் பெண்ணே ? புதியக் கண்டுப்பிடிப்புக்காக புலவர்களை எங்கு சென்றுத் தேடுவேன் கண்ணே ? தனக்கானவளைக் கண்டு மூச்சு தாறுமாறாகத் துடிக்க சத்யன் திரும்பிப் பார்த்ததும் பளிச்சென்று புன்னகைத்தாள் மான்சி ….உடனடியாக சத்யனின் தலைக்குப் பின்னே ஓர் ஒளிவட்டம் தோன்றியது ….

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks