மான்சிக்காக – பாகம் 43 – மான்சி கதைகள்

FB_IMG_1466873137340வீரேன் சங்கடமாக அங்கேயே நிற்க்க…. மான்சி அண்ணனைப் பார்த்து “ எல்லாம் மாமா பேசுவாரு… இப்ப நீ போ போ.. மாமா என்னை தூங்க வச்சிட்டு வரும் “ என்றவளின் குரலில் சோர்வு மறைந்து புதிய உற்சாகம் வீரேன் சத்யனைப் பார்க்க ….

சத்யன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் எழுந்து வீரேன் அருகில் வந்து அவன் தோளில் கைவைத்து “ வீரா உங்க மூனுபேர் மேலயும் எனக்கு எப்பவுமே கோபம் வராதுடா… இந்த கையால உங்களை எல்லாம் வளர்த்துட்டு அதே கையால என்னால அடிக்க முடியாது… ஏன்னா நீங்க எல்லாம் என் அக்கா பிள்ளைகள்..என் அக்கா எனக்கு இன்னொரு தாய் மாதிரி… அவங்க வயித்துல பிறந்த உங்களையெல்லாம் நீங்க என்ன செய்தாலும் என்னால வெறுக்க முடியாதுடா வீரா” என்று சத்யன் சொல்ல… “ அதான் மாமா சொல்லிட்டாருல்ல போண்ணா” என்று மான்சி வீரேனை விரட்டினாள் ..

“ தங்கச்சி விரட்டுது மாமா.. நான் போய் வெளிய இருக்கேன்” என்ற வீரேன் சத்யனைப் பார்த்து அசடு வழிய சிரித்துவிட்டு அங்கிருந்து அகன்றான்… வீரேன் வெளியே செல்வதற்கு முன்பு டாக்டருக்கு நன்றி சொல்ல ஜோயலின் அறையை எட்டிப்பார்க்க… ஒரு நோயாளியின் சாட்டை வாசித்துக் கொண்டிருந்த ஜோயல் அவனை நிமிர்ந்துப் பார்த்து

“ என்னங்க சார் தங்கச்சி கிட்ட சமாதானம் ஆயிட்டீங்களா?” என்று புன்னகையுடன் கேட்க… முகத்தில் சந்தோஷம் பளிச்சிட “ ஆமாங்க மேடம்.. என்னை அனுமதிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க… நைட்டு மறுபடியும் பார்க்க வந்தா அனுமதிப்பீங்களா?” என்று கேட்டான்… ஜோயலுக்கும் மான்சிப் பற்றிய சில விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் வந்துவிட்டது…சற்றுமுன் பேசிய சத்யனின் வார்த்தைகள் அவளை ஏகமாய் குழப்பியிருந்தது… யோசனையுடன் வீரேனைப் பார்த்து “ நீங்கபோய் கேன்டீன்ல ஏதாவது சாப்பிட்டு வாங்க… நானும் உங்ககூட பேசனும்” என்றாள்.. “ ம் சரிங்க சாப்பிட்டு வர்றேன்.. காலையிலேர்ந்து ஒன்னுமே சாப்பிடலை..

இப்பதான் தங்கச்சியும் மாமாவும் பேசிட்டாங்களே.. அதனால ந்லா வயிறு நிறைய சாப்பிடப் போறேன்” என்று உற்சாகமாக சொல்லிவிட்டு வெளியேப் போனான்… இவ்வளவு நேரம் பேசியதில் சோர்வுற்ற மான்சி அயர்வாய் கண்களை மூடிக்கொண்டாள் “ மாமா கொஞ்சநேரம் என்னைவிட்டு எங்கயும் போகாதேயேன்?” என்று அவள் குரல் தீனமாக ஒலிக்க..

சத்யன் சேரை இழுத்து கட்டில் அருகேப் போட்டுக்கொண்டு முடிந்தவரை எட்டி அவள் முகத்தருகே தன் முகத்தை வைத்து கொண்டான் விரல்களால் அவள் கூந்தலை வருடி “ தூங்குடா கண்ணம்மா” என்றான்.. “ இல்ல மாமா என்னை சீக்கிரமா வேற ரூமுக்கு மாத்தச் சொல்லு… நீ என்கூடவே இரு மாமா” என்றாள் அவனை பிரியமுடியாத வேதனையில் … சத்யனுக்கு அவள் மனசு புரிந்தது

See also  மான்சிக்காக - பாகம் 26 - மான்சி கதைகள்

“ சரி காலையில டாக்டரைப் பார்த்து பேசுறேன்.. இப்ப தூங்குடா” என்று சத்யன் அன்புடன் கூறி அவளை உறங்க வைக்க முயன்றான்.. “ மாமா இன்னும் கிட்ட வாயேன்” என்று மான்சி அழைக்க… அவள் முகத்தருகே இன்னும் நெருங்கினான் சத்யன்.. அவன் கன்னத்தை தன் தளிர் விரலால் வருடி “ ரொம்ப அழுதியா மாமா?” என்று மான்சி கேட்க…“ பின்ன… ஒவ்வொரு நிமிஷமும் செத்துப் பிழைச்சேன்டி” சத்யனின் விரல்கள் அவள் காய்ந்த உதடுகளை வருடியது… “ என்மேல உனக்கு அவ்வளவு லவ்வா மாமா?” “ இந்த லவ்வு மசுரெல்லாம் எனக்குத் தெரியாது.. ஆனா நீ இல்லேன்னா அடுத்த நிமிஷம் நானும் இல்லை இதை மட்டும் உறுதியா சொல்வேன் ” சத்யனின் விரல்கள் ஒருக்களித்துப் படுத்திருந்த அவள் தோளில் இருந்த காயத்தை வருடியது

“ மாமா நேத்து நைட் எவ்வளவு ஜாலியா இருந்தோம் … ஆனா இன்னிக்கு நைட்டு இப்படி ஆயிடுச்சே” மான்சியின் குரலில் ஏக்கம்.. “ ஏய் ச்சீ … இதுக்குப் போய் வருத்தப்படலாமா? நமக்கு என்ன வயசாயிடுச்சா என்ன.. இன்னும் ரெண்டு பேருக்கும் இளமையிருக்கு… உனக்கு உடம்பு நல்லானதும் நம்ம இழந்ததை மீட்கலாம்” என்று சத்யன் அவளுக்கு ஆறுதல் சொல்ல…

“ மாமா ஒரு ரகசியம் சொல்லவா?” தன் காதுகளை அவள் அருகில் கொண்டு சென்று “ என்ன மான்சி சொல்லு?” என்றான்..“ அது வந்து ,…. என் டிரஸ் எல்லாத்தையும் அவுத்துட்டாங்கன்னு நினைக்கிறேன் மாமா” என்று ரகசியமாய் கிசுகிசுத்தவளை பார்த்து முறைத்த சத்யன் “ அடங்கமாட்டியாடி நீ” என்று செல்லமாய் கடிந்துகொண்டான்.. தன் கணவனிடம் பேசவேண்டும் என்பதற்காகவே மான்சி பெரு முயற்ச்சி செய்து விழித்திருப்பது போல் இருந்தது… அதை யூகித்த சத்யன் மெல்ல எட்டி அவள் நெற்றியில் முத்தமிட்டு..

பிறகு காய்ந்து கிடந்த இதழ்களை நெருங்கி தனது எச்சிலால் அவற்றை ஈரப்படுத்துவது போல் மென்மையாக கவ்வி சப்பிவிட்டு பிறகு எழுந்து “ தூங்குடா கண்ணம்மா” என்று காதலாய் சொல்ல.. அவனிடம் முத்தம் பெற்றப் பிறகு மான்சியின் கண்கள் தானாக மூடிக்கொண்டது..

சற்றுநேரத்தில் மான்சி உறங்கிவிட மீண்டும் நெற்றியில் முத்தமிட்டு விட்டு.. அங்கிருந்து வெளியே வந்து எதிரே வந்த ஜோயலிடம் “ தூங்கிட்டா டாக்டர்” என்று சொல்லிவிட்டுப் போனான்..

“ பெண்மை என்பது ஆண்மையை நசுக்கும்…
“ அவசியப்பட்டால் உசுப்பி எழுப்பும்.!

“ ஆண்களின் கண்களுக்கும்…
“ இமைகளுக்கும் நடுவே ஓடும்…
“ லட்சக்கணக்கான கனவுகளுக்கு…
“ பெண்ணால் மட்டுமே உயிர் தர முடியும்!

“ ஆண் வியூகம் என்றால்…
“ பெண் யுத்தக்களம்…
“ நிச்சயம் வெற்றி முளைக்கும்!

“ ஆண் திட்டம் என்றால்…
“ பெண் செயலாக்கம் சக்தி…
“ கனவுகள் ஜெயிக்கும்!

“ ஆண் ஒரு புயல் என்றால் …
“ அவன் தகர்க்க வேண்டிய..
“ பகுதிகளை பெண் காட்டுவாள்!

“ ஆண் ஒரு நெருப்பு என்றால்…
“ அவன் பரவ வேண்டிய பாகங்களை…
“ பெண் தேடிக் கொடுப்பாள்!“ ஆண் உலக வரைபடம் என்றால்…

“ பெண் அவற்றின் எல்லை கோடுகள்!

“ ஆணின்றி அணுவும் அசையாது என்றால் ..
“ பெண்ணின்றி எந்த ஆணும் அசையமாட்டான்!

நன்றி :- சத்யன்

Leave a Comment

error: read more !!