மான்சிக்காக – பாகம் 40 – மான்சி கதைகள்

FB_IMG_1466872884575ஐசியூ என்ற வார்த்தையே வீரேனுக்கு கிலியை ஏற்ப்படுத்த… என்ன செய்கிறோம் என்று புரியாமல் டாக்டரின் கையை இருக்கமாகப் பற்றிக்கொண்டு “ அய்யோ ஐசியூவுக்கு கொண்டு போற அளவுக்கு என் தங்கச்சி நிலைமை ரொம்ப மோசமா இருக்கா? தயவுசெஞ்சு அவளை பழைய மாதிரி ஆக்கிடுங்க மேடம்” என்று அவள் கையில் முகத்தைப் பதித்துக்கொண்டு அழுதான்..

டாக்டர் வாழ்க்கையில் அன்றாடம் இதுபோல் உணர்ச்சிவசப்படுபவர்களை நிறைய சந்தித்திருந்தாலும்… இவ்வளவு கம்பீரமான ஒருவனிடம் கையைக் கொடுத்துவிட்டு நிற்க சங்கடமாக இருந்தது.. “ இதோ பாருங்க சார் அவங்க நல்லாருக்காங்க.. வயித்துல இருக்குற குழந்தையை காப்பாற்றதான் இப்போ ஐசியூல இருக்கப் போறாங்க..நீங்க கவலைப்படாதீங்க” என்றபடி மெதுவாக அவனிடமிருந்து தனது கையை விடுவித்துக்கொண்டாள் .. குழந்தைக்கு ஆபத்து என்றதும் வீரேனின் முகம் மேலும் கலவரமானதும் “ ஹலோ ஹலோ சார் குழந்தையும் இப்போ நல்லாருக்கு.. சும்மா ஒரு பாதுகாப்புக்காக தான் ஐசியூ ” என்று மறுபடியும் சொல்லிவிட்டு தனது ரெஸ்ட் ரூம் நோக்கி போனாள்.. ரெஸ்ட் ரூமுக்குள் போனவள் மனதில் ஒரேயொரு கேள்வி “ இவன் மட்டும் ஏன் தனியா உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கான்?”….

ஆப்ரேஷன் தியேட்டரில் இருந்து வந்த ஒரு ஊழியர் மான்சி கட்டியிருந்த பட்டுப்புடவை மற்ற உடைகளையும் சுருட்டி எடுத்து வந்து தர… அதை கையில் வாங்கியதும் அவ்வளவு நேரம் சத்யனுக்காக தன்னை அடக்கிக்கொண்டிருந்த மீனா முற்றிலும் உடைந்து போனாள்…. அந்த பச்சைப் பட்டுப்புடவை முழுவதும் மான்சியின் ரத்தத்தில் தன்னை நனைத்துக்கொண்டிருந்தது…

“ அய்யோ என் மகளே… நான் குடுத்த பாலெல்லாம் உதிரமா போயிருச்சேடி மகளே” என்ற நீண்ட ஓலத்துடன் மயங்கி சரிந்தவளை தர்மன் தாங்கி தரையில் கிடத்தினார் சத்யன் அக்காவின் கையிலிருந்த புடவையை வாங்கி தன் முகத்தை மூடிக்கொண்டு தரையில் கவிழ்ந்து விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் தன் கதறலை தொடர்ந்தான் சத்யன்…தர்மன் ஒன்றுமே புரியாமல் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்துவிட… ராமைய்யா மட்டும் சத்யனை சமாதானம் செய்ய தனி ஆளாக போராடிக்கொண்டிருந்தார்… ஆப்ரேஷன் தியேட்டர் வெளி அறைக்கு மான்சியை ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு வந்து நிறுத்திவிட்டு.. பச்சை உடையணிந்த பெண் ஊழியர் ஒருவர் கதவைத்திறந்து

“ ஒரு ஒருத்தரா உள்ள வந்து பேஷன்ட்டைப் பார்த்துட்டுப் போங்க” என்று அழைத்துவிட்டு நகர்ந்து வழிவிட்டு நின்றார்…. மான்சியைப் பார்க்கலாம் என்றதும் சத்யன் முகத்தில் பயங்கர கலவரம்… எழுந்து கால்களை சுவற்றில் சாய்ந்துகொண்டு அவள் புடவையை நெஞ்சில் அழுத்தியபடி “ ம்ஹூம் நான் பார்க்க மாட்டேன்… இந்த கோலத்துல நான் அவளைப்பார்க்க மாட்டேன்” என்று கூறிவிட்டு பிடிவாதமாக கண்களை மூடிக்கொண்டான்…

See also  பொம்மலாட்டம் - பாகம் 26 - மான்சி தொடர் கதைகள்

தன் அப்பாவின் மரணம்… தன் முதல் மனைவி சொர்ணாவின் மரணம்… அதுமட்டுமல்லாது எத்தனையோ குடும்ப பிரச்சனைகளை தாங்கி நிமிர்ந்த சத்யன் … இன்று மான்சிக்காக ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து பிழைத்தான்… சிறு குழந்தைபோல் பயந்து நடுங்கினான்… தோளில் விழுந்த காயம் ஆழமில்லை என்று அறிவு சொன்னாலும் அவன் மனது அதை ஏற்க்கவில்லை.. ரத்தம் வழிய வழிய தன் காதல் மனைவியை கையில் ஏந்தியது மட்டுமே ஞாபகத்தில் வந்து அவனை பயமுறுத்தியது…மான்சியை மறுபடியும் பார்க்கவே பயந்தான்… ரத்தம் கொடுத்துவிட்டு வந்த தேவன்… சோர்வுடன் சத்யன் அருகில் அமர்ந்து “ மாமா மான்சிக்கு ஒரு ஆபத்தும் இல்லை… அப்படி மோசமான நிலைமையாக இருந்திருந்தா இன்னேரம் மதுரைக்கு கொண்டு போக சொல்லிருப்பாங்க… அதனால பயப்படாம வந்து அவளைப் பாருங்க மாமா.. உங்க குரல் கேட்டு அவ மயக்கம் தெளியட்டும் ” என்று கெஞ்சி அவனை எழுப்பி மான்சி இந்த ஸ்ட்ரெச்சர் அருகே அழைத்துச்சென்றான்..

மான்சி பச்சைநிற துணியால் கழுத்துவரை மூடப்பட்டிருநதாள்… தலைமுடியை பிரித்து பச்சைத் துணியால் சுற்றியிருந்தார்கள்.. வலது தோளில் காயம் என்பதால். இடது பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வைத்திருந்தார்கள்… அவள் மீதும் பக்கத்திலும் நிறைய மருத்துவ உபகரணங்கள்… மூக்கோடு வாயையும் சேர்த்து கவ்வியிருந்த நைலான் கப் சுருங்கி விரிந்து அவள் சுவாசத்தை உறுதி செய்தது… இரண்டு கைகளிலும் ப்ளட்டும் சலைனும் ஏறிக்கொண்டு இருந்தது…தேவனின் தோளில் சாய்ந்தபடி வந்த சத்யன் மெல்ல திரும்பி மான்சியைப் பார்த்தான்… பின்னர் தேவினிடமிருந்து நகர்ந்து மான்சி அருகில் வந்து அவள் முகத்தையே உற்றுப்பார்த்தான்… “ மான்சி நான் மாமா வந்திருக்கேன் பாருடி? ” என்று மெல்லிய குரலில் உருக்கமாக வேண்டினான்… குனிந்து சலைன் ஏறிய கைவிரல்களில் முத்தமிட்டான்… மறுபடியும் தலைப்பக்கம் வந்து

“ என்னைப் பாறேன் மான்சி?… நீ ஏன் வந்து விழுந்த மான்சி.. நீ எப்படி இந்த வலியெல்லாம் தாங்குவ மான்சி?.. உனக்கு ஒன்னுன்னா என்னால கூடத்தான் தாங்கமுடியுமான்னு யோசிச்சியாடி நீ? நான் அப்புறம் உயிரோட இருப்பேனான்னு உனக்கு தோனவே இல்லையா மான்சி? நீ தானடி என் உலகமே? உனக்குப் பிறகு எனக்கு எதுவுமே இல்லேன்னு உனக்கு ஏன்டி தெரியாமப் போச்சு? ” என்று அவள் காதருகே சத்யன் உருக்கமாக பேச….அவன் கேள்விகள் ஒன்றுக்கு கூட பதில் சொல்லமுடியாத ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் மான்சி தேவன் சுவர்ப் பக்கமாக திரும்பி நின்று முகத்தை மூடிக்கொண்டு இதயம் வெடித்து குமுறினான்… சத்யனின் துயரத்தை அவனால் பார்க்கமுடியவில்லை… அப்போது உள்ளிருந்து வந்த குடும்ப டாக்டர் சத்யனை அணைத்தார்ப் போல் சற்றுத்தள்ளி நகர்த்தி வந்து

See also  மான்சிக்காக - பாகம் 30 - மான்சி கதைகள்

“ சத்யன்…. மான்சிக்கு எதுவும் இல்லை… நீங்க தைரியமா இருந்தாத்தான் மத்தவங்க தைரியமா இருப்பாங்க.. நீங்க மான்சிகிட்ட தைரியமான வார்த்தைகளை யூஸ் பண்ணுங்க சத்யன்.. அதுதான் அவங்க மயக்கத்தை தெளியவைக்கும் மருந்து ” என்றவர் தேவனைப் பார்த்து ஜாடை செய்து சத்யனை வெளியே அழைத்துப் போகச்சொன்னார் தேவன் சத்யனை தன் தோளோடு அணைத்துக்கொண்டு வெளியே வந்தான்…

மற்றவர்கள் ஒவ்வொருவராக உள்ளேபோய் மான்சி பார்த்துவிட்டு குமுறிய இதயத்தை அடக்கியபடி வெளியே வந்தனர்… தர்மன் மீனாவை தூக்கி கையைப்பிடித்துக் கொண்டு அழைத்துப்போய் மான்சியை காட்டிவிட்டு அழைத்து வந்தார்..

மான்சி ஐசியூ நோக்கி ஸ்ட்ரெச்சரில் எடுத்துச்செல்லப்பட்டாள்.. வெளியே வந்த மீனா தன் தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு… “ என்னால என் மவளை இப்படி பார்க்க முடியலைடா தம்பி?” என்று குலுங்க.. விரக்த்தியுடன் சுவற்றில் சாய்ந்த சத்யன்“ அவ பைத்தியம் அக்கா…. பெரிசா எனக்காக உயிரைக்கொடுத்து காப்பாத்துற மாதிரி வந்து விழுந்தாளே? அவ நகத்துல ஒரு கீரல் விழுந்தா கூட என்னால தாங்க முடியாதுன்னு அவளுக்குப் புரியாமப் போச்சே அக்கா?.. அவளை நான் புரிஞ்சிகிட்ட அளவுக்கு அவ என்னை புரிஞ்சுக்கலைப் பாருக்கா?” என்று கண்ணில் வழியும் நீரை துடைக்க மனமின்றி கண்மூடி பேசிக்கொண்டே போனான்…

அப்போது அவன் கால்களை யாரோ பற்றுவது போல் இருக்க கண்ணை திறந்து பார்த்தான்.. வீரேன் தான் சத்யன் கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தான் … சத்யன் கால்களைப் பற்றிக்கொண்டு அவன் கால் பெருவிரலை தன் தலையில் தாங்கி

“ மாமா என் தங்கச்சி மேல நீங்க வச்சிருக்கிற அன்பை புரிஞ்சுக்காம.. அவ வாழ்க்கையை கெடுத்துட்டீங்கன்னு தப்பா நெனைச்சு இந்த மாதிரிப் பண்ணிட்டேன் மாமா.. தயவுசெஞ்சு இந்த பாவியை மன்னிச்சிடுங்க மாமா” என்று தன் கண்ணீரால் சத்யன் கால்களை கழுவினான் வீரேன் …சத்யன் எதுவுமே பேசவில்லை அமைதியாக கண்களை மூடிக்கொண்டான்.. அவன் உயிரையே வதை செய்தவனை மன்னிக்கும் மனபக்குவம் சத்யனுக்கு இன்னும் வரவில்லை..

அதேசமயத்தில் சொந்த அக்கா மகனை தண்டிக்கவும் சத்யனுக்கு மனம் வரவில்லை.. அதனால் எதுவும் பதில் கூறாமல் கண்களை மூடிக்கொண்டான் சத்யன் வீரேனை ஏதாவது சொல்வான் என்று எதிர்ப் பார்த்த தர்மன்… அவன் அமைதியாக கண்மூடியதும்… சத்யன் பொறுப்பை தனதாக்கிக் கொண்டு தன் மகனின் சட்டையை கொத்தாகப் பற்றி தூக்கி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து“ செய்றதையெல்லாம் செய்துட்டு இப்போ மன்னிப்புன்னு ஒரே வார்த்தையில பூசி மொழுகப் பார்க்கிறயா… உன்னை இனிமே இந்த ஆஸ்பத்திரி பக்கமே நான் பார்க்கக்கூடாது.. பார்த்தான் சத்யனுக்கு குடுக்கலைன்னாலும் நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்து காலத்துக்கும் வெளியே வரமுடியாதபடி பண்ணிருவேன்.. நாயே போடா வெளியே” என்று வீரேனை இழுத்து வெளியேத் தள்ள…

error: read more !!