மான்சிக்காக – பாகம் 25 – மான்சி கதைகள்

rens-park-entrance-1மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் வழக்கம் போல விழிப்பு வந்தது சத்யனுக்கு… ஆனால் எழுந்திருக்கத்தான் முடியவில்லை.. மான்சி எப்போதும் எக்ஸ்ட்ராவாக பயன்படுத்தும் இரு தலையணைகள் காணாமல் போயிருக்க… அவை இருந்த இடத்தில் பதிலாக சத்யன்

இருந்தான் சத்யன் மல்லாந்து படுத்திருக்க.. ஒருக்களித்துப் படுத்து அவன் நெஞ்சில் முகத்தை வைத்து, பாதி உடல் அவன் மீது படர்ந்திருக்க… ஒரு காலை நீட்டி.. மறுகாலை மடக்கி அவன் கால் மீது போட்டிருந்தாள் மான்சி சத்யனுக்கு புதிதாக அனுபவிக்கும் ஏசியின் குளிரும்… மான்சியின் அணைப்பும் சேர்ந்து உடலை பக்கென்று பத்திக்கொள்ள வைத்தது,அவன்மீது கிடந்த மான்சியின் மடக்கியிருந்த காலை இன்னும் சற்று மேலேற்றினாலும் சத்யன் கதை கந்தலாகிவிடும்… ரொம்ப சிரமப்படுத்தியது அவனது ஆண்மை…எப்படியாவது எழுந்துவிடவேண்டும் என்று முயன்று தன் நெஞ்சில் இருந்த அவள் தலையை எடுத்து தலையணையில் வைக்க.. அது மீண்டும் நகன்று அவன் நெஞ்சில் வந்து ஓட்டிக்கொண்டது.. என்னடா இது சோதனை ? என்று நினைத்தபடி சத்யன் மெதுவாக தன் உடலை நகர்த்தி அவளிடமிருந்து விடுபட முயன்றான்…

அப்போது “ இப்ப ஏன் எழுந்திருக்கிற?” என்ற மான்சியின் தெளிவான குரல் கேட்டு திகைத்துப்போய் “ நீ முழிச்சு தான் இருக்கியா மான்சி?” என்றான்.. “ ஆமா…. பின்ன இப்படியொரு மாமனை வச்சிகிட்டு தூங்கவா முடியும்?” என்று மான்சி சொன்னதும்… சத்யன் குழப்பமாகிப் போனான்… இவ்வளவு அழகான பொண்டாட்டியை பக்கத்துல வச்சிகிட்டு நானே தூங்கும் போது… என்னேரமும் சண்டைக்கு தயாரா இருக்குற இவ ஏன் தூங்கலை?

அதை அவளிடமே கேட்டான் “ ஏன்டா தூங்கலை?” அவன் நெஞ்சில் இருந்து தலையைத் தூக்கி அவன் முகத்தைப் பார்த்து “ உன்னைப் பத்தி தெரியாத வரைக்கும் என் மாமா நல்லவருன்னு நெனைச்சேன்… இப்போதான் நீ எப்படிப்பட்ட ஆளுன்னுதான் எனக்கு தெரிஞ்சுபோச்சே, இனிமே உன்னை கண்கானிச்சு கிட்டே இருந்தாதானே நல்லது? அதான் தூங்கலை… தூங்குனதும் நீ எந்திருச்சு போய்ட்டா என்னப் பண்றது?” காலையிலேயே சத்யன் நெஞ்சில் முள்ளாக தைத்தது அவள் வார்த்தைகள்,, தனது அந்த ஒருநாள் நடத்தையால் இவள் தன்னை நம்பவில்லை என்று உள்ளம் வருந்தினான்.. இவ மட்டுமே என் வாழ்க்கை என்பதை இவ ஏன் புரிஞ்சுக்கவே இல்லை? ஆனால் மான்சியோ… ‘ செய்வதை எல்லாம் செய்துவிட்டு மான்சியை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று ஒரு வார்த்தைகூட சொல்லாத சத்யனை விட்டு கொஞ்சநேரம் விலகினால் கூட அவன் தன்னை மறந்துவிடுவானோ என்ற பயம்தான் இருந்தது.

இருவர் மனதிலும் காதல் தழும்பிக்கொண்டு இருந்தாலும்… அவர்களின் சிந்தனை வேறு வேறாக இருந்தது… அவர்களுக்கு நடுவே இருப்பது இரும்புத்திரை என்று இருவரும் நினைத்தார்கள்.. ஆனால் அது பூக்கலாம் நெய்யப்பட்ட பூவேலி என்று இருவருமே கண்டுகொள்ள மறுத்தனர்… சத்யன் அமைதியாக அப்படியேப் படுத்துக்கிடந்தான்.. அவன் மனநிலை அவனது ஆண்மை எழுச்சியை துவள வைத்திருந்தது…

See also  மான்சிக்காக - பாகம் 23 - மான்சி கதைகள்

மான்சி தன் அணைப்பை விடவில்லை,, இருவருமே நெஞ்சு நிறைய காதலை நிரப்பிக்கொண்டு விழித்துக்கிடந்தனர.. சற்றுநேரம் கழித்து சத்யன் லேசாக புரண்டு படுத்து மூடியிருந்த அவள் கண்களைப் பார்த்தபடி “ மான்சி எனக்கு ஒரு கேள்விக்கு பதில் வேனும்?’ என்றான்.. கண்களைத் திறக்காமலேயே “ கேளு” என்றாள்..

“ என்மேல குடுத்த போலீஸ் கம்ப்ளைண்ட்ல நீயா முழு மனசோட கையெழுத்துப் போட்டியா? அல்லது உன் அண்ணனுங்க வற்புறுத்தி கையெழுத்துப் போட வச்சாங்களா?” இத்தனை நெஞ்சை செல்லாக அரித்துக்கொண்டிரிக்கும் விஷயத்தை கேட்டே விட்டான் சத்யன்.. போலீஸ் கம்ப்ளைண்ட் விஷயத்தில் வீரேனின் வற்புறுத்தல் தான் அதிகம் என்றாலும், மான்சியின் வீம்பு பிடித்த மனது அதை ஒத்துக்கொள்ளாமல்..“ ஆமா நான்தான் என் முழு சம்மதத்தோட கையெழுத்துப் போட்டேன்,, பின்ன நீ பண்ணதுக்கு சும்மாவா விடமுடியும்? பஞ்சாயத்துல பனிஷ் பண்ணலைனாலும் சட்டம் மூலமா உன்னை பனிஷ் பண்ணனும் நெனைச்சேன் அதான் நல்லா ஸ்ட்ராங்கா எழுதி குடுத்தேன் ” என்று மான்சி குரலில் எந்தவித வருத்தமும் இல்லாமல் சொல்ல…. சத்யன் கண்களை மூடித்திறந்தான்.. மூடும்போது நிர்மலமாய் இருந்த கண்கள் திறக்கும்போது சிவப்பை பூசிக்கொண்டு இருந்தது…

இவ்வளவு நேரம் அவளை நோகடிக்கக்கூடாது என்று அணைத்திருந்தவன்… அவளை முரட்டுத்தனமாக உதறிவிட்டு எழுந்தான். அவன் உதறித்தள்ளிய வேகத்தில் கட்டிலின் மறு ஓரம்போய் விழுந்த மான்சி, திகைப்புடன் எழுந்து அமர… கட்டிலில் இருந்து இறங்கி நின்ற சத்யன் அவளைத் திரும்பிப் பார்த்து

“ நெஞ்சுல இவ்வளவு வஞ்சத்தை வச்சிருக்குறவ அப்புறம் ஏன்டி என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச? இன்னும் ஸ்ட்ராங்கா கம்ப்ளைண்ட் குடுத்துட்டு என்னை நிரந்தரமா ஜெயில்ல வச்சிட்டு, நீ வெளிநாட்டுக்கு போகவேண்டியதுதானே, ஏன் என்னை கல்யாணம் பண்ணி என் உயிரை எடுக்குற?” எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல் வார்த்தைகளை கொட்டிய சத்யன் கதவைத்திறந்து கொண்டு அறையிலிருந்து வெளியேறினான்‘ஏன் என்னை கல்யாணம் பண்ணி என் உயிரை எடுக்குற?’ இந்த வார்த்தை மான்சியின் காதுகளில் மறுபடியும் மறுபடியும் ஒலித்தது.. அப்போ நெசமாவே மாமாவுக்கு என்னை பிடிக்கலையா? அப்புறமா ஏன் அன்னிக்கு ‘நீதான் வேனும்னு’ சொல்லி அவ்வளவு ஆசை ஆசையா பண்ணாரு?.. நான் நல்லாத்தானே இருக்கேன்? என்னை ஏன் மாமாவுக்கு பிடிக்கலை?

மான்சியின் பிள்ளை மனம் தன் வார்த்தைகள் அவனை காயப்படுத்தியதை அறியாமல் அவன் சொன்ன ஒரு வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தங்களை தேடியது.. வெளியேப் போன சத்யன் பல் தேய்த்து தோட்டத்து குளியலறையில் குளித்துவிட்டு வரும்போது, எதிரே வந்த பஞ்சவர்ணம்“ ராசு நம்ம சிவா போன் பண்ணுச்சுப்பா… கோயில்ல கல்யாணம் நடந்ததால நேத்து அது வரக்கூடாதாம்,, இன்னிக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கு அவ வூட்டுக்காரரு கூட வர்றேன்னு சொல்லிருக்கு, மாமியாருக்கு மேலுக்கு சொகமில்லையாம். அதனால இன்னிக்கு ராவே கிளம்பிடுவேன்னு சொன்னா… நீ எங்கயும் போகாம வீட்டுக்கு வந்துடு ராசு” என்று சொல்ல…..

Leave a Comment

error: read more !!