மான்சிக்காக – பாகம் 20 – மான்சி கதைகள்

othaஅன்று மதிய உணவு முடிந்ததும்,, தர்மனும் மீனாவும் தங்கள் பண்ணைக்குப் போய்ட்டு அப்புறமா வீட்டுக்கு போகவேண்டும் கிளம்பும்போது வெறும் கூடையுடன் வந்த செல்வி கூடையை கீழே வைத்துவிட்டு இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றியபடி. அவர்களின் எதிரே நின்றுகொண்டு “ ஏங்கம்மா நீங்க செய்றது உங்களுக்கே நியாயமா ?” என்று கோபமாய் கேட்க…

அவளை குழப்பமாக பார்த்த மீனா.. பதிலுக்கு தானும் இடுப்பில் கைவைத்துக்கொண்டு “ வாடி என் அண்ணன் மவளே? அங்க தொட்டு இங்க தொட்டு கடைசில என்னையவே அதட்ட வந்துட்டியா? என்னாடி நியாயத்த கண்டுபுட்ட?” என்று கேட்டதும்…

செல்வி அசரவேயில்லை “ ஆமா நியாயமில்ல தான், நீங்க ரெண்டு பேரும் ஜோடியா ஆத்தா வீட்டுக்கு வர்ற ஜோருல,, வீட்டு ஆம்பிளைகளுக்கு சோறு கூடவா பொங்கி வைக்காம வர்றது? ” என்ற செல்வியின் குரலில் சூடு அதிகமாக இருந்தது



இது எப்புடி இவளுக்கு தெரியும் என்ற யோசனையுடன் “ நாங்க காலையில இங்க வர்ம்னு சொன்னதும் ரெண்டுபேரும் போகக்கூடாதுன்னு குதிச்சானுங்க……. அந்த கோபத்துல எதுவும் ஆக்கி வைக்காம வந்துட்டேன்… ஆம்பளை புள்ளைக தானா.. ஏதாவது ஓட்டல்ல சாப்பிட்டுருப்பானுங்க” என்று அலட்சியமாக சொன்னாள் மீனா…

“ எங்க சாப்டாக? இம்புட்டு நேரம் வரைக்கும் கொலப் பட்டினியா இருந்தாக” மறுபடியும் கோபப்பட்டாள் செல்வி..

“ அதெப்புடிடி ஒனக்கு தெரியும்?”

“ ஆங்ங்ங்………. ஒங்க புள்ளைக பட்டினியா கெடக்குறாகன்னு கிளி சோசியக்காரன் வந்து சொல்லிட்டுப் போனான்” என்று தன் தாடையை தோளில் இடித்தவள் “ உங்க பெரிய மவன் பட்டினியா இல்ல மூக்கப்பிடிக்க தின்னாறான்னு எனக்குத் தெரியாது.. ஆனா உங்க சின்ன மவன் பட்டினி தான்….. அப்புறம் பசின்னு சொன்னதும் மனசு தாங்காம எங்கப்பாருக்கு எடுத்துட்டுப் சோத்தை அவுகளுக்கு சாப்பிடக் குடுத்துப்புட்டு வந்தான்.. எம்மாம் பசி தெரியுமா? அது சாப்புட்டதப் பார்த்து எனக்கு அழுகையே வந்துருச்சு” என்ற செல்வி சொன்னதும்…

“ ஆங் அப்புறம்?” என்று மீனா ஆர்வமாக கேட்க…

வெடுக்கென்று நிமிர்ந்த செல்வி “ நான் என்ன கதையா சொல்றேன்? அப்புறம் விழுப்புரம்னு கிட்டு,, இனிமே வெளியப் போனா சோத்த ஆக்கிவச்சுப்புட்டு போங்க” என்றவள் விடுவிடுவென வீட்டுக்குள் போக…



தர்மனும் மீனாவும்..அவளை ஆச்சர்யமாகப் பார்த்துவிட்டு வாசலில் இறங்கி காரில் ஏறி கிளம்பினார்கள்..

காரில் கணவன் அருகில் அமர்ந்த மீனா “ என்னாங்க இந்த பொண்ணு இம்புட்டு வாயாடியா இருக்கு? பயமே இல்லாம நம்மலையே எதுத்து கேள்வி கேட்குது?’ என்றாள்

See also  மான்சிக்காக - பாகம் 47 - மான்சி கதைகள்

தர்மன் காரை தெரு வளைவில் திருப்பியபடி “ ம்ம்… வாயாடியா இருந்தாலும் நல்லவ மீனா… யாருக்கும் கெடுதல் நினைக்காத வெகுளி குணம்… எனக்கென்னமோ இவளை மாதிரி ஒருத்திதான் நம்ம வீட்டுக்கு லாயக்குன்னு தோனுது மீனா?” என்றார்

“ அய்யோ என்னாங்க நீங்கவேற? நம்மளுக்கும் அவங்களுக்கும் தோதுபடுமா.. ராமைய்யா கிட்ட இருக்குற வீட்டைத் தவிர எதுவுமில்லீங்க?” மீனா சொன்னதும்… திரும்பி மனைவியை கூர்ந்தவர்

“ஏன் மீனா அன்னைக்கு உங்கப்பா அந்தஸ்து கௌரவம் சொத்துக்களைப் பார்த்திருந்தா இன்னேரம் நான் கார்ல உன் பக்கத்துல உட்கார்ந்து வரமுடியுமா?” என்று ஒரெயொரு கேள்வியை கேட்டு மனைவியின் வாயை அடைத்தார்…



மவுனமாக தலைகுனிந்த மீனா அவர் கையில் தன் கையை வைத்து.. “ யோசிக்காம பேசிட்டேன் மன்னிச்சிடுங்க” என்றாள்..

மனைவின் கையை வருடியவர் “ சரி விடு நீயும் இப்ப ஒரு மாமியார்ல அதான் இப்படி பேசுற” என்று சொல்லிவிட்டு சிரித்தார்..

“ கிண்டல் பண்ணாதீங்க” என்று அழகாக சினுங்கிய மீனா “ நாம வேனும்னு ராமைய்யா அண்ணன் கிட்ட பேசுவோமா?” என்று ஆர்வமாக கேட்டாள்

“ இரு இரு அவசரப்படாத… மொதல்ல மான்சி சத்யன் கல்யாணம் முடியட்டும்… அப்புறமா வீரேனை கொஞ்சம் சமாதானப்படுத்தி அவன் அபிப்ராயத்தை கேட்டுகிட்டு அப்புறமா ராமைய்யாகிட்ட பேசலாம்.. ஏன்னா வாழப்போறவன் வீரேன் தான… இந்த வாயாடிக்கும் அவனுக்கும் ஒத்துவருமான்னு பார்க்கனும் மொதல்ல” என்று கூறினார்

ஒத்தே வராத வீரேனுக்கும் செல்விக்கும் மணமுடிக்க நினைத்தனர் இருவரும்

“ நீங்க சொல்றதும் சரிதாங்க” என்ற மீனா சற்றுநேர யோசனைக்குப் பிறகு “ தப்பு நம்மமேலயும் நிறைய இருக்குங்க” என்றாள் சீரியசாக…

என்ன என்பதுபோல் திரும்பிப்பார்த்தார் தர்மன்… “ சொர்ணா இறந்ததுமே சத்யனோட வயச உத்தேசிச்சு உடனே மறுகல்யாணம் பண்ணியிருக்கனும்,, அவன் மறுத்தான்னு சொல்லி நாம பண்ணாம விட்டது தப்பு… நம்ம புள்ளையா இருந்தா பண்ணிருப்போம்ல? அவனுக்கும் என்னங்க வயசாச்சு? ஏதாவது நல்லப் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணியிருந்தா அவன் ஏன் இப்படிப் பண்ணப்போறான்?” என்றாள் கவலையுடன் ..

மனைவியைப் பார்த்து “ அப்பக்கூட உன் மகளை குடுக்கனும்னு உனக்கு தோனலை பாரு,, வேற அங்கயாவதுதானே பொண்ணுப் பார்க்கனும்னு சொல்ற?” என்று ஏளனமாக சொல்ல….

“ அது எப்புடிங்க மான்சிதான் சின்னப் புள்ளையாச்சேங்கே?”

“ ம்ம் சின்னப் புள்ளைதான்…. ஆனா எனக்கென்னவோ இனிமே உன் மகதான் சத்யன் கிட்ட விழுந்துகிடப்பான்னு தோனுது”

“ எப்புடி சொல்றீங்க?”



“ ம் இன்னிக்கு அவ குளிக்கிறதுக்கு சொன்ன காரணத்தை வச்சுதான் சொல்றேன்.. அவ பேசுனதுல பொறாமைதான் தெரிஞ்சுது, அப்புறம் ரூமுக்குள்ள கூப்பிட்டு துணியை அடுக்க சொன்னது…. அவகூடவே சத்யனை வச்சுக்கனும்னு நெனைக்கிறான்னு தெளிவாப் புரியுது… எப்படியோ ரெண்டுபேரும் ஒத்துமையா நல்லாருந்தா சரி” என்றார்

See also  மனசுக்குள் நீ - பாகம் 11 - மான்சி தொடர் கதைகள்

“ எனக்குக்கூட ரெண்டுபேரையும் பக்கத்து பக்கத்துல பார்த்தா வயசு வித்தியாசமே தெரியலைங்க… பொருத்தமாதான் தெரியுது,, இதுதான்னு விதின்னு அவங்க தலையில எழுதிட்டான் கடவுள்.. அதான் அப்படியெல்லாம் நடந்துபோச்சு”

“ ஆமா ஆமா கடவுள் எழுதிட்டாரு? அடிப்போடி மனுஷன் பண்ற தப்புக்கு கடவுள் மேல பழி சொல்லிகிட்டு…..

இந்த வயசுக்கு மேல என்னாலயே ஒரு ராவு தனியா படுக்கமுடியலை,, இளந்தாரிப் பய சத்யன்… அவன் எப்படி இருப்பான்… அதான் கட்டுப்படுத்திப் பார்த்து பார்த்து முடியாம உரிமையுள்ள இடத்துலயே கையை வச்சுட்டான்,, என்று நிதர்சனத்தை சொன்னார் தர்மன்

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks