மான்சிக்காக – பாகம் 18 – மான்சி கதைகள்

swabஅவனிடம் தனது வீரம் பலிக்கவில்லை என்றதும்,, கொஞ்சம் பயந்த குரலில் “ இதோபாரு என் கையை விட்டுடு…இல்லேன்னா கத்தி யாரையாவது கூப்பிடுவேன்” என்றாள்

அவள் பயந்துவிட்டாள் என்றதும் தனது பிடியை கொஞ்சம் தளர்த்தியவன் “ என் கேள்விக்கு பதில் சொல்லு உன்னை விட்டுர்றேன்?” என்று குனிந்து அவள் காதருகில் சொன்னான்..

“ நீ என் கையை விடு கை வலிக்குது” என்று கெஞ்சினாள் செல்வி…
தனது பிடியை தளர்த்தி அவளை தன்பக்கமாக திருப்பியவன்,, கையை மட்டும் விடாமல் “ பதில் சொன்னாதான் விடுவேன்” என்றான்..“ நீ இன்னும் கேள்வியே கேட்கலை?, அப்புறம் என்னத்த பதில் சொல்றது.” என்று சலித்துக்கொண்டவளை ரசித்தவாறு “ ஏன் நீ ஒன்னறை மாசமா கயிறு ஆலைக்கு வேலைக்கு வரலை?” என்று கேட்க…

அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொள்ள முயன்றபடி “ இதென்ன கேள்வி? அங்க வேலை செய்ய எனக்குப் பிடிக்கலை அதனால வரலை” பட்டென்று பதில் சொன்னாள்

“ அதான் ஏன் பிடிக்கலை? ஒரு வருஷமா அங்க தான வேலை செய்துகிட்டு இருந்த இப்ப மட்டும் என்னாச்சு?” என்றவனின் குரலில் ஏதோவொன்று அவளை நிமிர்ந்து பார்க்க வைத்தது..

அவன் என்ன இருக்கு என்று கண்டுபிடிக்க முயன்றபடி “ நீங்க எங்கய்யாவுக்கு சண்டைக்காரவுக… அதனால் உங்க ஆலைக்கு வேலைக்கு வரமாட்டேன்” என்று தீர்மானமாக சொன்னவளை பரிதாபமாக பார்த்தவன்…

“ எங்களுக்கு உங்கய்யாவுக்கும் தான சண்டை… உனக்கும் எனக்கும் இல்லையே? மரியாதையா நாளையிலேருந்து வேலைக்கு வா” என்று அதிகாரம் செய்தவனை முறைத்தாள் செல்வி..

“ இந்த அதிகாரமெல்லாம் வேற எங்கயாவது வச்சுக்க… நான் சொன்னா சொன்னதுதான்” என்றவள் அவனை உதறிவிட்டு வேகமாக முன்னால் நடக்க…
அவள் பின்னாலேயே ஓடி வந்த தேவன் “ இதோபார் செல்வி இப்பதான் உன் அய்யாவுக்கும் என் தங்கச்சிக்கும் தான் கல்யாணம் பண்ணப் போறாங்களே.. அப்புறம் என்ன? நீ ஆலைக்கு வா ” என்று சமாதானமாக பேசினான்..“ கல்யாணம் பண்ணிட்டா நீயும் உன் அண்ணனும் பண்ணதெல்லாம் இல்லைன்னு ஆயிடுமா? மாடு திங்கிற தீனிக்கு நெருப்பு வச்சீங்களே ச்சே” என்றவளை மறுபடியும் பிடித்து நிறுத்தி..

“அது அப்போ ஏதோ கோபத்துல பண்ணது.. இப்பல்லாம் நான் எதுவுமே செய்றதுல்ல… அது உனக்கே தெரியும் செல்வி” என்ற நயந்து வந்தான்

“ ஏன் பொய் சொல்ற,, முந்தாநேத்து உன் வீட்டு வாசப்படியில வச்சு என் முடிய பிடிச்சு இழுத்து தள்ளுனியே மறந்து போச்சா? ” நக்கலாக கேட்டாள்

See also  மனசுக்குள் நீ - பாகம் 23 - மான்சி தொடர் கதைகள்

“ அது …. நீ ஆலைக்கு வரலையேன்னு கோவத்துல அது மாதிரி பண்ணேன்… ஏன் எனக்கு உன்னை தொட உரிமையில்லையா?” என்று அவளை கூர்மையுடன் பார்த்து கேட்டவனை நேராகப் பார்த்து…

“ உனக்கென்ன உரிமையிருக்கு… ரெண்டு மாசத்துக்கு முந்தியாவது நீ எனக்கு சம்பளம் குடுக்குற முதலாளி இப்ப அந்த சம்மந்தம் கூட நமக்கு இல்லை… இங்கபாரு நான் இனிமே உன்னோட ஆலைக்கு வரமாட்டேன்…உங்க சகவாசமே வேனாம்… அங்க வேலை செய்றதைவிட எங்கய்யா வீட்டுல பாத்திரம் கழுவலாம்… அதனால என் வழியவிட்டு உன் வேலையைப் போய் பாரு நான் எங்கப்பாருக்கு சோறு எடுத்துக்கிட்டு போகனும்” என்றவளை அவ்வளவுதானா என்பதுபோல் பார்த்தவன் வழியைவிட்டு ஒதுங்கி நிற்க்க…

அவன் மேலும் தகராறு செய்யாமல் சட்டென்று நகன்றதும் செல்வி அவன் முகத்தைப் பார்த்துவிட்டு தன் வழியேப் போனாள்…

செல்வி நாலடி நடந்திருக்கமாட்டாள் “ செல்வி நான்கூட காலையிலேர்ந்து சாப்பிடலை,, வீட்டு எங்கப்பா கூட சண்டைப் போட்டுட்டு எங்கண்ணன் போயிட்டான், அம்மாவும் அப்பாவும் அம்மாச்சி வீட்டுக்கு போயிட்டாங்க, நான் மட்டும் சாப்பிடாம சுத்திக்கிட்டு இருக்கேன்” என்று தேவன் பரிதாபமாக சொன்னதும்.. போனதவிாட இரண்டு மடங்கு வேகத்தில் திரும்பியவள்..“ அய்யோ ஏன்யா இன்னும் சாப்பிடலை?… தம்பியை பாத்ததும் பெத்த புள்ளைய மறந்துட்டாங்க பாத்தியா?… ச்சே வீட்டுல எதுவுமேவா செய்து வைக்காமயா ஆத்தா வீட்டுக்கு போறது… உன்னைய பட்டினிப் போட்டுட்டு அங்கபோய் உங்கப்பாவும் அம்மாவும் கறி மீனுன்னு தின்றாங்க” என்ற படபடவென்று பொரிந்து தள்ளியவள் அவனை நெருங்கி “ நீ கொஞ்சநேரம் இங்கயே இருக்கியா? நான் எங்கவீட்டுக்குப் போய் இருக்குறத போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று கேட்க…

இவ்வளவு நேரமாக வீராப்பாக பேசியவள் பசி என்றதும் ஒரு தாயாய் கருணை காட்டியதைப் பார்த்ததும் ‘ ம்ஹ்ம் இதுதான் என் செல்வி’ என்று மனதுக்குள் கர்வப்பட்டவன் “ ஏன் நீ கையில வச்சிருக்குற கேரியர்ல சாப்பாடு தான இருக்கு அதைப் போடேன் செல்வி?” என்றான்

“ம்க்கும் இது எங்கய்யா வீட்டு சாப்பாடு நீதான் அவுகளுக்கு சண்டைக்காரனாச்சே.. அப்புறம் எப்புடி சாப்பிடுவ?” என்று கவலையாக கேட்டவளைப் பார்த்து … “ நீ குடுத்தா சாப்பிடுவேன் செல்வி” என்றான் தேவன்..

அவன் குரலில் இருந்த வித்தியாசம் செல்வியை தலைகுனிய வைத்தது கால் கட்டைவிரலால் தரையை துளையிட்டப் படி “ சரி வா சாப்பிடு” என்றவள் ஒரு மர நிழலில் கூடையை வைத்துவிட்டு இலையை எடுத்து வைத்துவிட்டு கேரியரை எடுத்தாள்…

See also  மான்சிக்காக - பாகம் 10 - மான்சி கதைகள்

“ அய்யோ குடிக்க தண்ணி இல்லையே?” என்றவளிடம் “ இரு என் பைக்ல ஒரு தண்ணிக்கேன் இருக்கு எடுத்துட்டு வர்றேன்” என்ற தேவன் பைக் இருந்த இடத்தை நோக்கி ஓடினான்…என்கிட்ட மட்டும் ஏன் இவ்வளவு உரிமையெடுத்துக்கிறான?’ என்ற குழப்பத்தோடு கேரியரைப் பிரித்து தயாராக எடுத்து வைத்தாள்…

தண்ணீர் கேனுடன் வந்து அமர்ந்தவன் “ உங்கப்பாக்கு சாப்பாடு செல்வி?” என்றான்.. “ அது டான்னு பனிரெண்டு மணிக்கெல்லாம் எங்காத்தா எடுத்துக்கிட்டு போயிரும்,, இன்னேரம் எங்கப்பாரு சாப்ட்டிருக்கும்,, இது நைட்டுக்கு வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்தான் சாப்ட்டுருப்போம்” என்றபடி இலையில் சோற்றை பரிமாறினாள்

தேவன் அகோர பசியில் அவசர அவசரமாக சாப்பிட்டான் … அவன் பாட்டியின் கைவண்ணத்தில் உணவு அமிர்தமாய் இறங்கியது “ மீனை பதமா பொரிக்க எங்க அம்மாச்சிய அடிச்சிக்க ஆளே கிடையாது” என்று பெருமைபேசியபடி சாப்பிட்டவனைப் பார்த்து களுக் என்று சிரித்த செல்வி….

“ அய்ய மீனு நான் பொரிச்சது” என்றதும்… “ என்னது நீயா செய்த?” என்று ஆச்சர்யப்பட்டவன், அதற்கு மேல் பேசநேரமில்லாது சாப்பிடுவதில் இறங்கினான்..

அவன் அரக்கப்பரக்க சாப்பிடுவதைப் பார்த்ததும் கண்கலங்கிப் போன செல்வி “ இம்பூட்டு பசியை வச்சுகிட்டு.. வந்ததுலருந்து ஏன் வாக்குவாதம் பண்ணிகிட்டு இருந்த?.. சாப்பாடு வேனும்னு சொல்ல வேண்டியது தான?” என்று அக்கரையாக கேட்டவளை நிமிர்ந்து பார்த்த தேவன்…

“ இந்த பசியை இன்னும் கூட என்னால தாங்கமுடியும் செல்வி.. ஆனா என் ஆலையில உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியலை செல்வி,, இப்பல்லாம் நான் சரியாவே ஆலை பக்கம் போறதில்லை தெரியுமா? என்னை உனக்கு புரியவேயில்லையா? ” என்று தேவன் வருத்தமா சொல்ல….

செல்வி தன் முழங்காலில் முகத்தை அழுத்திக்கொண்டு “ உங்களுக்கும் அய்யாவுக்கும் சண்டை வந்ததும் எவ்வளவோ பேர் உங்க ஆலை வேலைக்கு வராம நின்னுட்டாங்க.. இதுல நான் மட்டும் என்ன ஒஸ்தி?’ என்று சன்னமாக கேட்டாள்சாப்பிட்டு முடித்து எழுந்து கைகழுவியவன் “ மறுபடியும் வந்து அவள் அருகில் அமர்ந்து “ எனக்கு நீ யாருன்னு உனக்குத் தெரியலையா செல்வி?” என்று கிசுகிசுப்பாக கேட்க…

செல்வி பதிலே சொல்லாமல் பாத்திரங்களை கூடையில் அடுக்கிக்கொண்டு எழுந்தாள்..

தேவன் எழுந்திருக்காமல் அவள் கையைப்பிடித்து அவளை நகரவிடாமல் “ பதில் சொல்லிட்டுப் போ? செல்வி ” என்றான்..

இம்முறை கையை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்யாமல் “ உனக்கு நான் யாருன்னு எனக்கெப்படி தெரியும்? ” என்று பதில் கேள்வி கேட்டாள்…

See also  மான்சிக்காக - பாகம் 62 - மான்சி கதைகள்

“ அது எனக்குத் தெரியும்… நான் கேட்டது மொதல்ல கேட்ட கேள்விக்கு பதில் … ஆலைக்கு வருவியா? மாட்டியா?”

செல்வி அவன் முகத்தைப் பார்க்காமலேயே “ ம்ஹூம் வரமாட்டேன்” என்று கூந்தல் சிலும்பி முன்நெற்றியில் விழ தலையசைத்தாள்

“ அப்ப இவ்வளவு நேரம் எனக்கு சாப்பாடு போட்டது என்கூட பேசினது எல்லாம் சும்மா தானா?” தேவனின் குரலில் நிராகரிக்கப்பட்ட கோபம்

“ அது நீ பசிக்குதுன்னு சொன்ன அதனால போட்டேன்”

“ அப்போ அவ்வளவு தான்? ” என்றவன் சற்றுநேரம் கழித்து “ சரி போ இனிமே நான் உன் வழியில வரவே மாட்டேன்” சொல்லிவிட்டு தனது பைக் நிறுத்தியிருந்த இடத்துக்கு விறுவிறுவென போனான் ..

கொஞ்சதூரம் வரை சென்ற செல்வி மறுபடியும் திரும்பி ஓடிவந்து அவன் பைக்கை ஸ்டார்ட் செய்யுமுன் சாவியை எடுத்துக்கொண்டு “ இப்ப நான் இன்னா சொல்லிட்டேன்னு இம்புட்டு கோவப்படுற? .. இத்தனை நாளா வேலைக்கு வராம இருந்துட்டு இப்போ திடீர்னு நான் வேலைக்கு வந்தா பாக்குறவக தப்பா நெனைக்க மாட்டாகளா?” என்று மெல்லிய குரலில் அவனிடமே திருப்பி கேட்டாள்..பைக்கில் இருந்து இறங்கிய தேவன்.. “ அப்ப நான் உன்ன எப்புடி பார்க்குறது? நீயே அதுக்கு ஒரு வழி சொல்லு?” என்றான்..

குறும்புடன் அவனை நிமிர்ந்துப் பார்த்த செல்வி “ அய்யா என்னமோ இத்தனை நாளா என்னைய பார்க்காதது மாதிரி சொல்றியே? அதான் எங்கபோனாலும் எதாவது ஒரு சாக்குல என் பின்னாடியே வர்றியே? அதே மாதிரி பார்த்துட்டு போகவேண்டியது தானே? இப்ப மட்டும் என்னமோ புதுசா என்கிட்ட கேட்குற?” என்று அவன் கண்களைப் பார்த்து கேட்க…

மாட்டிக்கொண்டு அவஸ்தையில் நெளிந்த தேவன் “ அது……… உன்னை ஆலையில பார்க்க முடியாம அந்த மாதிரி வந்தேன்.. ஆனா எனக்கு அது போதாதே?” என்று கெஞ்சினான்

“ போதாதுன்னா இன்னும் என்ன வேனும்?” செல்வியின் குரல் அவளுக்கே கேட்கவில்லை..“ எனக்கு நெதமும் உன்கூட பேசனும், இப்படி கொஞ்சநேரமாவது உன் முகத்தைப் பக்கத்துல இருந்து பார்க்கனும்” என்று காதலோடு பிதற்றினான் தேவன் ..

Leave a Comment

error: read more !!