பொம்மலாட்டம் – பாகம் 21 – மான்சி தொடர் கதைகள்

கம்பெனிக்குச் சென்றால் அலுவல்கள்… வீட்டிற்கு வந்தால் அம்மூ…. என்று சத்யனின் வட்டம் சுருங்கிப் போனது….. ஆனால் மான்சி? அவளது அந்தப் புன்னகை? எத்தனை சுமைகள் வந்தாலும் அதை மட்டும் அவனால் மறக்கவே முடியவில்லை…. அதிலும் அவளது அந்தப் புன்னகைக்கு யாதொரு அர்த்தமும் இல்லை என்றதும் இன்னும் வலிதான் அதிகரித்தது….

அவளிடம் உறவு கொண்ட நாட்களை நினைத்துக்கொண்டு அதன் தாக்கத்திலும் அவனால் உறங்க முடியவில்லை… அந்த நிமிடங்களை நினைத்தாலே உடல் கூசிப் போனது…. எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவன் போல் வாழ ஆரம்பித்தான்…. உடனிருந்த ஆதியும் தனது வீட்டிற்கு சென்று விட…. மான்சி பவானி பற்றி எந்த தகவலும் தெரியவில்லை…. அவர்களின் சொந்த ஊரான பல்லடத்திற்கே சென்று விட்டதாக ஆதி ஒருமுறை கூறியது மட்டும் ஞாபகமிருந்தது…எப்படியோ…. எங்கேயோ தாயும் மகளும் நன்றாக இருந்தால் சரி என்ற எண்ணத்துடன் அவர்களின் நினைவை ஒதுக்கினான்…. வாசுகிக்கும் மாதங்கள் கடந்து வயிறு முட்டி நின்றது…. அம்மூ தனது அம்மாவின் மீது ஏறி விளையாடும் பழக்கம் உள்ளவள் என்பதால் அது ஆபத்தானது என்று புரிய சத்யனுக்கு அம்மூவைப் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது….

வாசுகியின் ஒன்பதாவது மாதம் செக்கப்பிற்காக மருத்துவமனைக்குச் சென்று வந்தார்கள் மதியும் வாசுகியும்…. அலுவலகத்திலிருந்து வரும் போதே அம்மூவை ஸ்கூலில் இருந்து அழைத்து வந்த சத்யன்…. “பேபி எப்படியிருக்காம் அக்கா? ரிப்போர்ட்ஸ் எல்லாம் எங்கே?” என்று கேட்க…. தனது பெரிய வயிற்றை சுமந்தபடி தம்பிக்கு உணவெடுத்து வைத்த வாசுகி “ம் குழந்தை நல்லாருக்காம் அப்பு… ஆனா ரிப்போர்ட்ஸ் எதுவும் கைக்கு வரலை….

நாளைக்குத் தான் தரமுடியும்னு சொல்லிட்டாங்க” என்றாள்…. உணவு பரிமாறியவளை அழைத்து தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்ட சத்யன் “தயவுசெஞ்சு இனி இந்த வேலைலாம் செய்யாதீங்கக்கா…. நானே போட்டு சாப்ட்டுக்கிறேன்… இல்லேன்னா வேலைக்காரங்க இருக்காங்க…. அவங்கப் பரிமாறுவாங்க… நீங்க ரெஸ்ட் எடுங்கக்கா” என்று அதட்டலாகக் கூறினான்…“எனக்கு ஒன்னுமில்லை அப்பு…. நல்லாதான் இருக்கேன்…. அடுத்த பிள்ளை வருதுன்னு மூத்தப் பிள்ளையைக் கவனிக்காம இருக்க முடியுமா? உனக்குன்னு ஒருத்தி வர்ற வரைக்கும் என் கடமை இதுதான்” என்றாள் வாசுகி… “இன்னொருத்தி அப்படின்ற பேச்சே வேணாம்னு சொல்லிருக்கேன் அக்கா” என்று கண்டிப்புடன் சத்யன் கூற….. “இல்ல அப்பு பேசித்தான் ஆகனும்…. மதியோட ஒன்றுவிட்ட சித்தப்பா மகள் ஒரு பொண்ணு சொல்லிருக்காங்க அப்பு…. பெயர் ப்ரியா….

சி ஏ படிச்சிட்டு ஒரு கம்பெனில அட்வைஸரா இருக்கா… மதி எல்லாம் பேசிட்டார்… நீ ஓகேன்னு சொன்னா சிம்பிளா மேரேஜ் முடிச்சிடலாம் அப்பு…. ப்ளீஸ் எங்களுக்காக அப்பு” என்று கெஞ்சுதலாகக் கேட்டாள்….திகைப்புடன் திரும்பி மதியைப் பார்த்தான் சத்யன்….. ‘ஆமாம்’ என்பது போல்த் தலையசைத்த மதி “எல்லாம் பேசிட்டேன் சத்யா… உன் சம்மதம் மட்டும் தான் வேணும்” என்றான்…

See also  பூவும் புண்டையையும் - பாகம் 288

“மாமா…. என்ன இதெல்லாம்? நான்தான் எதுவும் வேணாம்னு சொன்னேனே? இன்னும் மான்சிக்கிட்டருந்து டைவேர்ஸ் கூட வாங்கலை மாமா?” என்று சத்யன் ஆற்றாமையுடன் கூற….. “மான்சி கிட்டருந்து டைவேர்ஸ் அவசியமில்லை சத்யா…. நம்ம லாயர் கிட்ட பேசிட்டேன்… இப்படி மன வளர்ச்சி இல்லாத பெண்ணுடன் நடந்த திருமணமே செல்லாதுனு சொல்லிட்டார்… ஒரு டாக்டர் சர்டிபிகேட் இருந்தா போதும்……நீ முதல்ல சம்மதம் சொல்லு… மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்றான் மதி…. “எனக்கு இதில் சம்மதமில்லை மாமா… என்னைப் பொருத்தவரை என் கல்யாண வாழ்க்கை முடிஞ்சுப் போச்சு” என்றவன் பாதி உணவில் கைகழுவி விட்டு எழுந்து தனது அறைக்குச் சென்றான்….. கண்கலங்கிய தனது மனைவியை அணைத்து ஆறுதல் படுத்திய மதி “இதுக்குத்தான் அவன் நல்ல மூடுல இருக்கும் போது பேசனும்னு சொன்னேன்” என்றான்…

“ஆமா இவன் எங்க இப்பல்லாம் சிரிக்கிறான்? எப்பப் பாரு முகத்தை உர்னு தான் வச்சிக்கிட்டு இருக்கான்….” சலிப்புடன் கூறிவிட்டுத் தனது அறைக்குச் சென்று விட்டாள்…. மறுநாள் காலை கம்பெனிக்குப் புறப்பட்டுத் தயாராகி கீழ்த்தளம் வந்தான் சத்யன்…. மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த மதி “சத்யா நானும் வாசுவும் அம்மூவோட ஸ்கூல் பங்ஷனுக்குப் போறோம்….

நீ மதியம் லஞ்ச் டைம்ல வாசுவுக்குப் பார்க்கிற ஆஸ்பிட்டல் போய் ரிப்போர்ட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துடு” என்றான்…. “ம் சரி மாமா… நீங்க ரிசப்ஷனுக்கு கால் பண்ணி சொல்லிடுங்க… நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்” என்றவாறு சாப்பிட அமர்ந்தான் சத்யன்…. வாசுகியும் மதியும் அம்மூவுடன் அவளது பள்ளி விழாவுக்குப் புறப்பட… சத்யன் கம்பெனிக்குக் கிளம்பினான்….மதியம், அலுவலகத்திலிருந்து கிளம்பி வாசுகி வைத்தியம் பார்க்கும் மருத்துவமனைக்கு வந்தான்…. ரிசப்ஷனுக்குச் சென்று தனது பெயரைச் சொல்லவும் “யெஸ் சார்… வாசுகியோட ரிப்போர்ட்ஸ் தானே? டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க…” என்றாள் அங்கிருந்தப் பெண்…. தலையசைத்து விட்டு வந்து இருக்கையில் அமர்ந்து காத்திருந்தான்….

பத்து நிமிடம் கழித்து மருத்துவரின் அறைக்கு அழைக்கப்பட்டான்…. இவன் உள்ளே வந்ததும் வாசுகியின் ரிப்போர்ட்ஸ் அடங்கிய கவரை கொடுத்து விட்டு “ரொம்ப வீக்கா இருக்கா சத்யன்… கவனமா பார்த்துக்கங்க” என்று புன்னகையுடன் கூறியவரிடம் அக்காவின் உடல் நலம் பற்றி தீர விசாரித்து விட்டு நன்றி கூறி வெளியே வந்தான்…

Leave a Comment

error: read more !!