மான்சிக்காக – பாகம் 08 – மான்சி கதைகள்

indவீட்டுக்குள் நுழைந்த சத்யனின் கோலத்தைப் பார்த்து மனம் குழம்பிய பஞ்சவர்ணம் தனது அறைக்குள் போனவனின் பின்னால் போக முயன்றார், ஆனால் உள்ளே நுழைந்ததுமே சத்யன் கதவை அடைத்துவிட… கலவரத்துடன் ராமையாவைப் பார்த்தார் …

அறைக்குள் நுழைந்த சத்யன் குளியலறையின் கதவை திறந்து உள்ளேபோய் வாளியில் இருந்த தண்ணீரை மொண்டு தலையில் கொட்டினான், எவ்வளவு குளித்தும் அவனது படபடப்பு அடங்கவேயில்லை ,, குழாயில் தண்ணீர் வருவது நின்றதும் வேறுவழியின்றி டவலை இடுப்பில் கட்டிக்கொண்டு வெளியே வந்து கட்டிலில் அமர்ந்தான்..



அவன் நடந்துகொண்டதை அவனாலேயே ஜீரணிக்க முடியவில்லை,, அவனுக்குள் இருந்த மிருகத்தின் சுயரூபம் கண்டு அவனே அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தான்,, அடுத்து என்ன நடக்கும் என்று அவனுக்கே புரியவில்லை… இனிமேல் மான்சியின் கதியென்ன?.. ஊர் மக்கள் அத்தனை பேருக்கும் தெரிந்துவிட்டதே?… கைகளால் முகத்தில் அறைந்துகொண்டான் அப்போது வெளியே கூடத்தில் “ அய்யய்யோ ஏஞ்சாமி என் குடி கெட்டதே” என்ற பஞ்சவர்ணத்தின் அலறல் சத்யனின் நெஞ்சை பிளந்தது…

ராமைய்யா விஷயத்தை சொல்லிவிட்டார் என்று நிமிடத்தில் யூகித்தான் .. “ சின்னய்யா கதவை தொறங்க… தொறங்கய்யா?” என்ற ராமைய்யாவின் குரலைக்கேட்டு எழுந்துபோய் கதவை திறந்துவிட்டு மறுபடியும் கட்டிலில் வந்து அமர்ந்து தலையை கையால் தாங்கிக்கொண்டான்… அவசரமாய் நுழைந்த ராமைய்யா “ ஆளுக எல்லாரும் நம்ம வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்காகளாம் முனியன் வந்து சொன்னான்,,

கொஞ்சநேரத்துக்கு நான் சொல்றத கேளுங்க சாமி ” என்றவர் சத்யனின் துணிகள் இருக்கும் அலமாரியை திறந்து ஒரு பையில் சத்யனின் உடைகளை வைத்து எடுத்துவந்து சத்யன் பக்கத்தில் வைத்துவிட்டு “ தம்பி நீங்க கொஞ்சநாளைக்கு எங்கயாவது இருந்துட்டு வாங்க, நிலவரம் சரியானதும் நான் தகவல் சொல்றேன், பொறகு வாங்கய்யா” என்று கொஞ்சினார்…



வெடுக்கென்று நிமிர்ந்த சத்யன் “ அண்ணே அதுவும் என் குடும்பம் தாண்ணே… இப்படி நான் பயந்து ஓடுனா அதைவிட கேவலம் வேற எதுவும் இல்லை… என்ன நடந்தாலும் என் ஊரைவிட்டு போகமாட்டேன்,, என் அக்காவும் மாமாவும் எனக்கு என்ன தண்டை கொடுத்தாலும் சரிதான் .. ஏத்துக்கப் போறேன்” என்று சத்யன் உறுதியாக கூற..

ராமைய்யா தடாலென சத்யனின் காலில் விழுந்து “ சாமி நான் சொல்றதை கேளுங்க,, அக்கா மாமா மட்டும் அங்க இல்ல… ரெண்டு இளவட்ட பயலுகளும் இருக்காங்களே.. நீங்க போயிடுங்கய்யா” என்று கலக்கத்துடன் சொன்னார்.. பதட்டத்துடன் அவரை தூக்கிய சத்யன், அவரின் தூய்மையான அன்பை எண்ணி குமுறலுடன் அவர் கைகளில் தன் முகத்தை புதைத்து “ அண்ணே நான் ஏன் இப்படி பண்ணேன்னு எனக்கே தெரியலையே..

See also  மனசுக்குள் நீ - பாகம் 43

எனக்குள்ள இப்படி ஒரு மிருகம் இருக்கிறது எனக்குத் தெரியாம போச்சே” என்று குமுறி வெடிக்க.. வெளியே கூச்சலும் குழப்பமுமாக சத்தம் கேட்டது… பட்டென்று தலைநிமிர்ந்த சத்யன் சிறிதுநேரம் கண்மூடி அமர்ந்திருந்தான் பிறகு தனது உடைகளை போட்டுக்கொண்டு.. ராமைய்யா தடுக்க தடுக்க கதவை திறந்து வெளியே வந்தான், கூடத்து தூணில் சாய்ந்து கட்டுக்கடங்காமல் வழியும் கண்ணீரை துடைக்க வழியின்றி அமர்ந்திருந்த தாயைப் பார்ர்த்து துடித்த இதயத்தை அடக்கியவாறு வாசலுக்கு வந்தான்..



ஊர் பெரியவர் நான்கு பேருடன் கிராமத்து மக்கள் சிலரும் நின்றிருந்தார்கள்.. சத்யனை கண்டதும் மணியக்காரர் அவன் பக்கத்தில் வந்து குனிந்து சின்ன குரலில் “ என்ன அப்பு இப்படி பண்ணிட்டீங்க?” என்று கேட்க .. சத்யன் எதுவும் சொல்லாமல் மவுனமாக தலைகுனிந்தான்… “ சரி விடுங்க அப்பு… அவனுக ரெண்டுபேரும் வெட்டனும் குத்தனும்னு குதிக்கிறானுக.. உம்ம கொண்டுவந்து பஞ்சாயத்துல நிறுத்த சொல்றானுக.. நாங்க ,,

இது குடும்ப விஷயம் வீட்டுக்குள்ளயே வச்சு பேசிக்கலாமுன்னு சொன்னா முடியாதுன்னு சொல்லிப்புட்டு கோயில் மேடையில உக்காந்திருக்கானுங்க, நீங்க என்ன சொல்றீக” என்று கேட்டார்.. சத்யன் யோசிக்கவேயில்லை “ நீங்க போங்க நான் வர்றேன்” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் போக… “ போகவேணாம் சின்னய்யா, சின்னப் பயலுக ஏதாவது தாருமாறா பேசிட்டா என்னப் பண்றது, வேனாம்யா” என்ற ராமையாவின் கெஞ்சலை பொருட்படுத்தாமல் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்…

சத்யன் கோயிலின் வெளியே இருக்கும் பஞ்சாயத்து மேடையருகே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியபோது ஊர் மக்கள் மொத்தமும் அங்கேதான் இருந்தார்கள், தர்மலிங்கத்தின் குடும்பத்தார் மேடையின் வலது பக்கமாக நின்றனர். ஆனால் மான்சி அங்கே இல்லை.. சத்யனைப் பார்த்ததும் வீரேனும் தேவாவும் “ டேய் உன்னைய வெட்டாம விடமாட்டோம்டா “ என்ற கூச்சலுடன் அவனை நோக்கி ஓடி வர.. ஊர் மக்கள் அவர்களை மடக்கி பிடித்தார்கள்,,



ஒரு பெரியவர் மேடையில் இருந்து இறங்கி தர்மனின் அருகே வந்து “ தர்மா பஞ்சாயத்துன்னு வந்துட்டு.. இப்படி வெட்டுறேன் குத்துறேன்னு ஓடுறது சரியில்லை, உன் மகனுங்களை அடக்கு.. இல்லேன்னா உங்களுக்குள்ள பேசிக்கங்கன்னு நாங்க விலகிப்போயிர்றோம்,, என்று கடுமையாக எச்சரிக்கை செய்ய.. தர்மன் மகன்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்தார்..

மகன்கள் இருவரும் பின்வாங்கினார்கள்.. சத்யன் அவர்களுக்கு எதிர்பக்கம் வந்து நிற்க.. ராமைய்யா எங்கிருந்தோ வந்து அவன் பக்கத்தில் நின்றுகொண்டார்,, மறுபக்கம் செவலமுத்து வந்து நின்றான்.. கூட்டத்தில் இருந்தவர்களில் சத்யனுக்கு ஆகாதவர்கள் சத்யன் மீது துப்புவதாக நினைத்துக்கொண்டு எச்சிலை காறித் தரையில் துப்ப…. சத்யனுக்கு ஆனவர்கள்,, அவன் நிலையை எண்ணி வேதனையுடன் உச்சுக் கொட்டினார்கள்…

See also  மான்சிக்காக - பாகம் 19 - மான்சி கதைகள்



மேடையில் அமர்ந்திருந்த பெரியவர் செம்பில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு பேச்சை ஆரம்பித்தார் “ நடந்ததைப் பத்தி விளக்கமா மறுபடியும் பேசி பிரயோசனம் இல்ல.. ஏன்னா நடந்தது என்னான்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு…அதனால அடுத்து என்ன செய்றதுன்னு மட்டும் யோசிப்போம்” என்றவர் தர்மனின் பக்கம் திரும்பி

“ தர்மா. இந்த பக்கம் உன் மக… அந்தபக்கம் உன் மச்சான்.. தப்பு நடந்தது நடந்துபோச்சு,, அடுத்து என்ன பண்ணனும்னு நீ நெனைக்கிற அதை சொல்லு மொதல்ல” என்றார்

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks