மான்சிக்காக – பாகம் 02 – மான்சி கதைகள்

ti_725_5513-2252074341-1கண்களில் தேங்கிய அளவற்ற சோகத்துடன் அவரை நிமிர்ந்துப் பார்த்த சத்யன் “ என்னன்னு விசாரிக்கிறது சித்தப்பு.. தப்பு செஞ்சவன் அனுபவிச்சே ஆகனும்… இப்போ அனுபவிக்கிறேன்.. என்னோட ஒரு நிமிஷ சபலத்துக்கு நான் இன்னும் நிறைய அனுபவிக்கனும் சித்தப்பு ” என்று கூறிவிட்டு தலையை கவிழ்ந்துகொண்டான்

“ என்னலே சத்தி திரும்ப திரும்ப இதையே சொல்லிகிட்டு?… என்னமோ ஊரு உலகத்துல நடக்காதது மாதிரி?…. அடுத்தவேளை கஞ்சிக்கு வழியில்லாத பய எல்லாம் அஞ்சாறு கூத்தியா வச்சிக்கிட்டு அலையறான்,, நீ பெரிய மிராசு மகன்டா” என்று அவர் முடிக்கும்முன்..அவரை தீயாய் விழித்த சத்யன் “ சித்தப்பு எத்தனை கூத்தியா வச்சிருந்தாலும் அவனெல்லாம் வெளியதான் வச்சுருப்பான்,, சொந்த வீட்டுலயே கைவைக்க மாட்டான் சித்தப்பு,, நான் அழியனும் சித்தப்பு.. இருந்த இடம் தெரியாம பூண்டோட அழியனும் ” என்று கர்ஜித்தவனைக் கண்டு எதுவும் பேசமுடியாமல் தலைகுனிந்தார் பெரியவர்… ராமையா கக்கத்தில் இடுக்கிய துண்டோடு அவனெதிரே வந்து அமைதியாய் நின்றார்,, சத்யனுக்கு அவர் அமைதியின் பொருள் விளங்கியது…

கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் எரிந்துபோனது,, நாற்பது மாடுகளுக்கு அடுத்தவேளை உணவுக்கு தேடவேண்டும்.. அமைதியாய் நான்குநாள் தாடியுடன் இருந்த தாடையை சொரிந்த சத்யன் “ அண்ணே நம்ம ரத்தினச்செட்டியார் வயலு நேத்துதான் அறுவடையாச்சு… நான் சொன்னேன்னு பத்து தரை வைக்கோல் செமை உருட்டச் சொல்லுங்க, நாமா அறுவடை முடிச்சதும் குடுத்துரலாம், நான் அவருக்கு போன் பண்ணி தகவல் சொல்றேன்,, நீங்க ஆளுகளை கூட்டிக்கிட்டு சின்ன டிராக்டர எடுத்துக்கிட்டு போங்க” என்று கூறிவிட்டு எழுந்தவன்..

“ சித்தப்பு வாங்க உங்களை வீட்டுல விட்டுட்டு போறேன்” என்று முன்னால் போனான் .. எரிந்துபோன போரின் அருகில் அமர்ந்து இன்னும் அழுதுகொண்டிருந்தார பஞ்சவர்ணம்… ஆனால் சாபமிடவில்லை.. நெருப்பை மூட்டியது பேரன்கள் ஆச்சே.. சத்யன் தாயருகே தயங்கி நின்றான்… எப்போதும் அவனுக்கு அம்மாவிடம் எதையாவது பேசவேண்டும்.. அல்லது கேட்கவேண்டும்… அப்படிப்பட்டவன் இந்த நான்கு நாட்களும் தாயின் முகத்தைப் பார்க்க கூசி பேச்சற்று நிற்கிறான்..அவனை நிமிர்ந்துப் பார்த்த தாயின் கண்களில் இருந்த குற்றச்சாட்டு சத்யனின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியது.. வேண்டாம்மா என்பதுபோல் கண்களால் யாசித்தான் சத்யன் .. எழுந்த பஞ்சவர்ணம் தனது கண்டாங்கிச் சேலையின் முந்தானையை உதறி தனது வலது தோளில் போட்டுக்கொண்டு வரப்பில் விடுவிடுவென நடந்தார்.. அந்த முதிய வயதிலும் தனது கம்பீரத்தை தொலைக்காமல் அந்த ஊரின் மகாராணியாக வலம் வந்தவர் இன்று மகனுக்காக தனது மானம் மரியாதை அத்தனையையும் இழந்து தலைகுனிந்து நடக்கிறார்..

See also  பொம்மலாட்டம் - பாகம் 03 - மான்சி கதைகள்

சத்யன் தனது பைக்கை உதைத்து கிளப்ப.. பின்னால் வந்து அமர்ந்தார் பெரியவர்.. “ சத்தி பஞ்சாயத்து குடுத்த கெடு நாளையோட முடியுது, பொழுதுசாய அஞ்சு மணிக்கு பஞ்சாயத்தை கூட்டனும்னு தலைவரு சொல்லிகிட்டு இருந்தாரு,, இந்த பயலுக பஞ்சாயத்துல இன்னும் என்ன கலாட்டா பண்ணப் போறாங்களோ தெரியலையே…

ஆனாக்க அவனுக எத சொன்னாலும் நீ வாய தொறக்காத சத்தி.. ஊர் பெரியவக நாங்கப் பார்த்துக்கிறோம்.. இன்னிக்கு காலையில மணியம் கூட டீக்கடையில இதத்தான் சொன்னாரு.. அவனுக அப்படி என்னாதான் பண்றானுகன்னு பார்த்துப்புடலாம்டா சத்தி” என்று பின்னால் அமர்ந்து அவர்பாட்டுக்கு பேசிக்கொண்டே வர..பாதி வார்த்தைகள் காற்றில் கரைந்தாலும் மீதி வார்த்தைகள் சத்யனின் நெஞ்சில் நஞ்சாய் இறங்கியது. பெரியவரை அவர் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டுக்குப் போன சத்யன் கூடத்தில் இருந்த தூணில் சாய்ந்து கால்நீட்டி அமர்ந்திருந்த அம்மாவின் காலடியில் போய் அமர்ந்தான் .. ‘ என்னடா பாவி?’ என்பதுபோல் அவனைப்பார்த்த அம்மாவின் கால்களை கண்ணீருடன்ப் பற்றிய சத்யன்

“ குடும்ப மானத்தையே கொலைச்சுப்புட்டேன், அப்பாருக்கு இருந்த மரியாதை கௌரவம் எல்லாம் என்னால போச்சு,, திங்கிற சோத்துல வெசத்த வச்சு என்னை கொன்னுடு ஆத்தா… நாளைக்கு பஞ்சாயத்துல நின்னுட்டு நான் உயிரோட இருக்குறதவிட உன் கையால செத்துப் போறேன்” என்ற தாயின் கால்களை தன் கண்ணீரால் கழுவியபடி சத்யன் கதறியதும்…

பஞ்சவர்ணத்தின் சர்வாங்கமும் ஒடுங்கிப் போனது.. அய்யோ இவனைப் பெற எத்தனை கோயில் ஏறி எறங்குனேன், எம் மவனைப் போல சத்தியவான் உலகத்துலயே இல்லேன்னு இறுமாப்புல இருந்தேனே.. என் நெனப்புல மண்ணை அள்ளிப் போட்டுட்டானே, என்று நெஞ்சு கொதித்தாலும்… அய்யோ தவமா தவமிருந்து பெத்த என் மகனை நானே கொல்லனுமா என்று பெற்ற வயிறு குலுங்கியது

“ ஏலேய் என் மவனே” என்று மகனின் கையை எடுத்து தன் முகத்தில் வைத்துக்கொண்டு “ வேனாம்டா மவனே சாவுறேன்னு சொல்லாத அப்பு.. என் ஈரக்குலை நடுங்குதே” என்று கதறிவிட்டாள் சமையலறையில் இருந்து இவர்களை கவனித்த சின்னம்மா.. முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டு வேகமாக இவர்களை நெருங்கி “ தம்பி நீங்க சொல்றது கொஞ்சங்கூட சரியில்ல…இப்ப என்ன நடந்துபோச்சுன்னு இந்த வார்த்தை சொல்றீக… முறையிருக்கு கைய வச்சிட்டீக.. இப்ப அதையே பேசுனா எப்புடி தம்பி.. இத்தனை காலமா நீங்க எப்படியிருந்தவருன்னு இந்த ஊருக்கே தெரியும்.. பஞ்சாயத்துல எவனும் உங்களை ஒரு வார்த்தை சொல்லமுடியாது, இப்புடி நீங்களும் அழுது, ஆத்தாலையும் அழ வச்சு ஊட்டையே எலவு ஊடு மாதிரி ஆக்கிப்புட்டீகளே,..தப்பே பண்ணாம இருக்க நீங்க

See also  மான்சிக்காக - பாகம் 18 - மான்சி கதைகள்

என்ன சாமியா? மனுசன் தானய்யா? நான் தப்பு பண்ணிட்டேனேன்னு கலங்கி நிக்காம பழைய தைரியத்தோட பஞ்சாயத்துல போய் நெஞ்சை நிமித்திக்கிட்டு நில்லுங்க தம்பி என்னதான் நடக்குதுன்னு பாப்போம்” என்று குரலை உயர்த்தி சத்யனை அதட்டியவள்… பஞ்சவர்ணத்தின் பக்கம் திரும்பி

“ ஆத்தா உனக்கும் இப்ப சொல்றது தான்…. சின்னய்யா அப்படியென்ன கொல குத்தம் பண்ணிட்டாரு… அவருபோல கட்டுப்பாடா வாழ்ந்தவன் இந்த ஊருல இருக்கானா? ஏதோ சபலத்துல பண்ணிப்புட்டாரு, விட்டுத்தள்ளுடா மவனே ஆத்தா நான் உன்கூட இருக்கேன்னு தைரியம் சொல்லாம… ஊருக்கே ராசாவாட்டம் இருந்த புள்ளைய இப்புடி அழ வக்கிறீகளே ஆத்தா,, நானாருந்தா என் மவன் கொலையேப் பண்ணிட்டு வந்தாலும் மறைச்சு வக்கைத்தான் பாப்பேன்…உம் மவன மட்டும் மனசுல வச்சு யோசனை பண்ணிப்பாருங்க ஆத்தா, இந்த உலகமே தூசியாத் தெரியும் ” என்று சூடாக சொன்னவள் “ இப்ப நீங்க ரெண்டுபேரும் எந்துருச்சு சாப்பிட வர்றீகளா இல்லையா?” என்று அதட்டிவிட்டு போனாள்… அவள் வார்த்தையில் சத்யன் தெளிவடைந்தானோ இல்லையோ, பஞ்சவர்ணம் மனதில் நிறைய தெளிவு வந்தது, தவமிருந்து பெத்த புள்ளைய கலங்க வச்சுட்டு அப்படியென்ன கவுரவமும் மரியாதையும் வேண்டிக்கெடக்கு,எனக்கு என் புள்ளைதான் முக்கியம் என்று நெஞ்சுறுதி வந்தது.. ஆனாலும் இவன் உன் புள்ளை சரிதான்,, இவனுக்கு எதிராக போர்க்களத்தில் நிற்கும் எதிராளி யார்? என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் கலங்கித்தான் போனது பஞ்சவர்ணத்தின் நெஞ்சம்.. மனதைத் தேற்றிக்கொண்டு மகனை எழுப்பியவர் “ வா ராசு சாப்புடலாம்” என்று சத்யனை சிறு குழந்தைபோல் அழைத்துக்கொண்டு சமையலறையை நோக்கி போனார்..

error: read more !!