”குட்நைட்… சாப்பிட்டு படு..!!” என்றான் சசி..!!
அடுத்த நாள்.. குமுதா வீட்டுக்குப் போனான் சசி. அவளது பெண் மது.. இப்போது ஃப்ரீ கேஜி போய்க்கொண்டிருந்தாள்.
அதனால் வீட்டில் அவள் மட்டும்தான் இருந்தாள்.!
அவனுக்கு காபி வைத்துக் கொண்டு வந்து.. அவன் கையில் கொடுத்தவாறு கேட்டாள்.
”கவிக்கும்.. உனக்கும் நடூல என்னடா..?”
காபியை வாங்கிக்கொண்டு அவள் முகத்தைப் பார்த்தான்.
”நடூலன்னா..?”
அவனருகில் உட்கார்ந்தாள்.
”நடூலன்னா.. அவளுக்கும் உனக்கும்.. லவ்.. கிவ்.. ஏதாவது..?”
”சீ.. அதெல்லாம் இல்ல.. ஆமா.. ஏன் இப்படி கேக்கற..?”
”அவ.. உன்கூட வெளில எல்லாம்.. சுத்தறாளாம்..?”
புன்னகைத்தான்.
”அதானே பாத்தேன்..! யாரு சொன்னா உனக்கு..?”
”நெறைய பேரு சொல்லிட்டாங்க.. நேத்துகூட நீயும் அவளும் ஐஸ்க்ரீம் பார்லர்ல ஒன்னா உக்காந்து.. சாப்பிட்டு இருந்தீங்களாம்..?”
”அவ்வளவுதான் சொன்னாங்களா..? உனக்கு சொன்னவங்க..?”
”டபாய்க்காம.. கேட்டதுக்கு.. ஒழுக்கமா பதில் சொல்லு..”
”ஏய்.. அவதான் ஷாப்பிங் போலாம்ன்னா.. அதான் கூட்டிட்டு போனேன்..! அவ்வளவுதான்..!!”
”அவ நிச்சயமான பொண்ணுடா..”
”இன்னும் நிச்சயம் பண்ணல..”
”ஆன மாதிரிதான்..! முடிவாகிருச்சு..! அவ உன்னோட சேர்ந்து ஊர் சுத்தறாளே.. பாக்கற நாலு பேர்.. என்ன பேசுவாங்க..?”
”ஏய்.. இப்ப நீ என்னதான் சொல்ல வரே.?” என லேசான எரிச்சலுடன் அவளை முறைத்தான்.
” ஒன்னும் சொல்லலடா.. அவள நல்லா கூட்டிட்டு சுத்து..” என்றாள் அவளும் சிறிது எரிச்சலுடன்.
”அவ்வளவுதானே.. சரி விடு..!” என டிவி பக்கம் திரும்பிக்கொண்டு காபியை உறிஞ்சினான்.
அவளால் அப்படி இருக்க முடியவில்லை. அவன் தோளில் கை வைத்தாள்.
”ஏழரை கழுதை வயசாச்சே.. நீ எப்ப கல்யாணம் பண்ணப்போறே..?”
”ம்ம்.. நீ பாட்டி ஆனப்பறம்..”
”அப்ப.. கெழவியைத்தான் பாக்கனும்..”
”ஸோ வாட்..? யாரும் பண்ணாத புதுமையா.. ஒரு கல்யாணம் நடக்கட்டுமே..?”
”ஆஹா.. இப்படி சொல்லிட்டு.. இப்பவே நீ.. என்னென்ன பிராடு வேலை பண்றயோ.. யாரு கண்டது..?” என்று சிரித்தாள்.
அவளை முறைத்தான்.
”யாரோ உன்ன நல்லா ஏத்திவிட்றுக்காங்க..”
”யாரும் ஏத்தியும் விடல.. எறக்கியும் விடல..! நான் சீரியஸா கேக்கறேன்..! எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறேனு ஒழுக்கமா சொல்லு..”
”இப்ப வேண்டாம்..”
”அப்றம்.. எப்ப. .?”
”கொஞ்ச நாள்.. போகட்டும் சொல்றேன்..”
”அம்மாவோட நெலமையை கொஞ்சம் யோசிச்சுப்பாருடா.. வயசாகிருச்சு..! அப்பா போனதுல இருந்து.. அம்மாவும் ரொம்ப டல்லாகிட்டா.. நீ கல்யாணம் பண்ணிட்டா.. அம்மாவுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கெடைக்கும் இல்ல..?”
”ஏய்.. இப்ப மட்டும்.. யாரு கஷ்டப்படுத்தறாங்க.?”
”டெய்லி சமையல் பண்ணி.. துணி தொவைச்சு.. அயர்ன் பண்ணி.. அப்பறம் வீட்டு வேலை.. இதெல்லாம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா.? உனக்கென்ன.. வேளா வேளைக்கு சோறு போட்டா திண்ணுட்டு.. நீட்டா ட்ரஸ் பண்ணிட்டு. வண்டிய எடுத்துட்டு.. புர்ருனு போய்ருவ..?” என்றாள்.
”ஏய்.. உன் கோபம் யாருமேல..? என்மேலயா.. இல்ல உன் புருஷன்மேலயா..?” எனச் சிரித்துக் கொண்டே கேட்டான்.
”வீட்ல இருக்கற கஷ்டத்தை சொல்லிட்டிருக்கேன்டா..”
”உனக்கு கஷ்டமா இருந்தா.. உன் புருஷன செய்யச் சொல்லு..”
”அத நான் பாத்துக்கறேன்.! அம்மாக்கு என்ன தீர்வு..? நீ கல்யாணம் பண்ணாத்தான்..!!”
”வாய மூடு..” என்றான்.
”ஆ.. இப்படி ஏதாவது சொல்லி என் வாயை அடைச்சுரு..” என்றாள்.
”ஏய்.. இப்ப உன் பிரச்சினைதான் என்ன..?” என கொஞ்சம் குரலைத் தழைத்துப் பொருமையாகக் கேட்டான்.
”ஆமாடா.. இப்ப எனக்குத்தான் பிரச்சினை.”
”காலைல உன் புருஷன்கூட சண்டையா.?” என அவன் கூலாகக கேட்க… சிரித்துவிட்டாள்.
”பேச்ச மாத்தாத..”
”நானு..?”
”சரி.. அதவிடு..! இருதயா பத்தி பேசலாமா..?”
”ஏன்.. அவளுக்கு என்ன..?”
”அவ உன்ன லவ் பண்றவதான..?”
” இந்த வெட்டிப் பேச்செல்லாம் ஒன்னும் வேண்டாம்.!” என எழுந்தான் ”போய் ஆகற வேலை ஏதாவது இருந்தா பாரு..! நான் போறேன்.!”
”இருடா…”என்றாள்.
”இருந்து.. உன்கூட தொங்கிட்டிருக்க சொல்றியா..?” என லேசான புன்னகையுடன் கேட்டான் ”இருதயா இருக்கறவர.. அவள வெச்சு பேசிட்டு இருந்த.. இப்ப கவிய புடிச்சிட்ட.. உன்னெல்லாம்.. மாத்தவே முடியாது..”
”சரி.. சாப்பிட்டு போ..” எனச் சிரித்தாள்.
”இல்ல.. பரவால்ல..! வேண்டாம்..! நா போறேன்.. பை..!!” என அவளுக்கு டாடா கட்டிவிட்டு.. அவள் வீட்டில் இருந்து வெளியேறினான் சசி….!!!!!
கவிதாயினியின் நிச்சய தினம்..!!
மிகவும் அமைதியாக.. நல்ல விதமாக நடந்து முடிநதது. அவளுடைய திருமண நாளும் குறிக்கப்பட்டது.
ஒரு மாத இடைவெளியில்.. அவள் திருமணம் முடிவாகியது.
கவியிடம் சொன்னான் சசி.
”எப்படியோ.. ஒரு வழியா.. உன்ன மார்க்கெட்ல.. ரேட் பேசியாச்சு..”
”யாரு.. என்னைவா..?” என உதட்டில் லேசான குறுநகை படர.. சசியைக் கேட்டாள் கவி.
”ம்..ம்ம்..! உன்னதான்..!!”
”ஹ்ஹா.. போடா.. ஃபூல்..!” என சிரித்தாள் கவி ”எனக்கு ஒரு அடிமைய விலை பேசி.. வாங்கி தராங்க..!!”
”ஓ..!!” வியந்தான் சசி ”நீ சொல்றதும்.. ஒரு வகைல கரெக்ட்தான்..!!”
தன் அலங்காரங்களை அகற்றினாள் கவி.
”மாம்மு.. பொண்ண விலை பேசி வித்ததெல்லாம்.. அந்த காலம்..!! இது டூ தவுஸன்.. ஃபிப்டீன்..!! இப்பல்லாம்.. பொண்ணுங்கதான்.. பசங்கள விலை பேசி வாங்கறோம்.. ஓகே..?”
”ம்..ம்ம்..! ஓகே.. ஓகே..!!” என்றான்.
இன்னொரு பக்கத்தில்.. புவியாழினி சேரில் உட்கார்ந்தவாறு.. தன் அக்காளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
”இன்னும் ஒரு மாசம்தான்..” என்றான் சசி.
”ஆ.. அப்றம்..?”
”அப்றமென்ன.. நீ வேற.. கவி..”
”ஹேய்.. யார்ரா சொன்னது அப்படி..? நான்.. நான்தான்..! நான்லாம் மாறிட மாட்டேன்.. ஓகே..?” என்றாள்.