கீரிபிள்ளையை காப்பாற்றிய நந்தினி
சொன்னது போலவே முரளியிடம் அனுமதி வாங்கி நந்தினியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கம் உறவினர்களிடம் நந்தினி மலை கிராமங்களில் அரசு மூலமாக ஏற்படுத்தப்பட்ட கேம்பில் தற்காலிக அதிகாரியாக செல்கிறாள் ஒருவாரம் என்று சொல்லி முருகேசன் உடன் நந்தினியை அனுப்பி வைக்கிறார் முரளி 130 கிலோமீட்டர் தூரம் காரில் பயணம் செய்துவிட்டு ஏழு கிலோமீட்டர் தூரம் ஜீபில் பயணம் செய்துவிட்டு அடுத்த ஏழு கிலோமீட்டர் முருகேசன் ஊரை நோக்கி காட்டு வழியாக முருகேசன் உடன் நடக்க ஆரம்பிக்கிறாள் நந்தினி
நடக்கும் பொழுது வேலை முடித்து ஊருக்கு செல்லும் தன் ஊர்காரர்கள் இடம் நந்தினியை அறிமுகப்படுத்தி வைக்கிறார் முருகேசன் நந்தினியும் அவர்களோடு அன்பாக பேசி காட்டுப்பாதை வழியாக முருகேசன் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறார் அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு கீரிப்பிள்ளையை ஊர் மக்கள் கல் மட்டும் கம்பால் அடித்துக் கொல்ல முற்படுகின்றனர் அப்போது ஓடி சென்ற நந்தினி வேண்டாம் வேண்டாம் நீங்க அடிக்காதீங்க
அது அது பேசாம போகட்டும் நம்ம பேசாம போவோம் நம்மள ஒன்னும் செய்யாது நம்மளும் ஒன்னும் செய்யக்கூடாது ஒரு உயிரை எடுப்பதற்கு நாம் யாருக்கும் உரிமை கிடையாது நீங்க போங்க அது பாட்டுல போய்விடும் எந்த ஒரு உயிரையும் அன்பு காட்டுங்க கொள்ள நினைக்காதீங்க என்று சொல்ல நந்தினி அதிகம் படித்திருந்தால் அவன் சொன்னால் சரிதான் என்று ஊர் காரர்களும் அந்த கீரிப்பிள்ளையை விட்டுவிட்டு செல்ல துவங்கினர்
அன்பில் தன்னை மறந்த நந்தினி
இரவு ஒன்பது மணிக்கு ஊரை அடைந்தனர் முருகேசன் மற்றும் நந்தினி நந்தினியை பார்த்ததும் முருகேசன் பெற்றோர் உற்றார் உறவினர் அனைவரும் நந்தினியிடம் பேரன்பு காட்ட அவர்களின் அன்பு மழையில் நனைந்து நெகிழ்ந்து போனார் நந்தினி
அவள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் தற்போது அவள் இருக்கும் இடத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை மாடி பங்களாவில் ஏசி ரூமில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நந்தினி இந்த ஒரு மலைக்காட்டு ஊரில் மண் சுவற்றில் ஓடுகளால் ஆன ஊரில் உள்ள வீடுகளை பார்த்து அவளுக்கு ஒரு சில சின்ன சின்ன தயக்கங்கள் இருந்தாலும் அங்கு உள்ளவர்கள் அவள் மீது காட்டிய உண்மையான அன்பால் நெகிழ்ந்து தன்னையே மறந்து போனால் நந்தினி
கிராமமாக இருந்தாலும் மண் சுவற்றால் கட்டப்பட்ட ஓட்டு வீடுகளாக இருந்தாலும் இயற்கையின் மீது அதிக ஆசையும் ஆர்வமும் கொண்ட நந்தினிக்கு இயற்கையின் அழகு நிரம்பி வலியும் மலை கிராமத்தின் ரம்மியத்யின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது அந்த இடம் அவளுக்கு இயற்கையாகவே பிடித்துப் போன இடமாக மாறிவிட்டது இன்னொரு பக்கம் அங்கு உள்ளவர்கள் அவள் மீது காட்டிய மிகப்பெரிய பேரன்பாலும் தன்னையே மறந்தால் நந்தினி ஒரு திருமண பெண்ணை நடத்துவது போல் நந்தினியை நடத்த தனக்கு உண்மையிலேயே திருமணம் என்பது போல் உணர்ந்து தான் வந்தது ஒரு நாடகத் திருமணத்திற்காக என்பதையே மறந்து போனால் நந்தினி
அங்கு அவர்கள் ஊர் வழக்கப்படி திருமணத்திற்கு முதல் நாள் செய்யும் ஒரு சில சடங்குகள் செய்ய அதில் மிகவும் நெகிழ்ந்து போனால் நந்தினி முருகேசனிடம் முருகேசன் இது ஒரு நாடகத் திருமணம் என்பது மறந்து விட்டேன் தற்பொழுது இங்கு எனக்கு செய்யப்படும் ஒவ்வொன்றையும் நான் என்ஜாய் பண்ணி ஏற்றுக்கொள்கிறேன் உண்மையில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நிஜ திருமனம் என்றே நான் நினைக்கிறேன் என்று சொன்னார் அவருக்கு முருகேசன் ரொம்ப நன்றி என்று சொன்னார் இதன் மூலம் அந்த ஊர் மற்றும் ஊர் காரர்கள் அன்பால் தன்னையே மறந்தால் நந்தினி நாடக திருமணத்தை மறந்து உண்மை திருமணம் செய்யும் மணப்பெண் ஆக மாறினால் நந்தினி
மேலதாளங்கள் முழங்க மலைவாழ் முறைப்படி வெகுவிமர்சையாக நடந்து முடிந்த திருமணம்
அன்று இரவு முருகேசன் தனி வீட்டிலும் நந்தினி முருகேசனின் பெற்றோர் வீட்டிலும் உறங்க அன்றைய நாள் கழிந்தது அடுத்த நாள் திருமண நாளன்று காலை விடிந்தது அவர்கள் முறைப்படி சரியாக காலை 4:30 மணிக்கு மணப்பெண்(நந்தினி) எழுப்பி விட்டு அலங்காரம் செய்ய தொடங்கினர் மறுபக்கம் அவர்கள் ஊரில் பாரம்பரிய முறைப்படி ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர் பழைய கோவிலில் அங்கு திருமண ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன மறுபக்கம் மணப்பெண்ணான முருகேசனுக்கு ஊர் வழக்க படி ஒரு சில சடங்குகள் செய்து அவரும் மணமேடைக்கு தயாராக இருந்தார்
அவர்கள் ஊர் வழக்கப்படி காலையில் அவர்கள் அவர்கள் ஊரில் ஓடும் ஒரு சிறிய காட்டு ஆற்றில் மணப்பெண்ணான நந்தினியை குளிக்க வைத்து அதன் பின் அவளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு அவளும் மணமேடைக்கு தயார் செய்யப்பட்டால் காலை உணவு வழங்கப்பட்டது
ஊர் பாரம்பரியம் இயற்கை நிரம்பிய கலாச்சாரம் என்று அங்கு நடந்த திருமண சடங்குகள் அனைத்தையும் அனுபவித்து தன்னை ஒரு புதுமண பெண்ணாகவே சிலாகித்துக் கொண்டால் நந்தினி
ஊரில் உள்ள அனைத்து ஊர் பெரியவர்கள் மற்றும் மொத்த ஊர்காரர்கள் சொந்த பந்தங்கள் என அனைவரும் சரியாக திருமணம் நடைபெறவிருக்கும் அந்த ஊர் பழைய கோவிலுக்கு வந்தனர் அவர்கள் வருகை தந்ததை அடுத்து முருகேசனை முதலாவதாக அழைத்து வந்து மணமேடையில்( மண் தரை தான் மணமேடை) அமர வைத்தனர் பின்பு நந்தினியும் மண மேடைக்கு அழைத்து வரப்பட்டார்
அவர்கள் பாரம்பரிய முறைப்படி சரியாக காலை 11.34 மணி அளவில் ஊர் மக்கள் அனைவரின் முன்னிலையில் அவர்களின் பாரம்பரிய இசைவாத்தியங்கள் முழங்க ஊர் பெண்களின் குலவை சத்தம் முழங்க ஊர் ஆண்கள் சங்கு சத்தத்திற்கு மத்தியில் நந்தினியை தங்கள் மலைவாழ் மக்கள் பாரம்பரியபடி திருமணம் செய்தார் முருகேசன் அனைவரின் உற்சாக கோசத்தில் அந்த பகுதியே அதிர்ந்து போனது
முரளிக்கு தெரியாமல் நந்தினியை தன் ஊரில் தன் ஊர் வழக்க படி திருமணம் செய்து கொண்டார் முருகேசன்