முருகேசனை திருமணம் செய்து கொள்ள சொன்ன அவரின் பெற்றோர்
மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த முருகேசன் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று இருந்த காரணத்தினால்
( முருகேசனின் முன்னாள் வாழ்க்கை பற்றிய விவரம் கட்டிலின் ஓசை – 1ல் பகுதி 2 மற்றும் 3ல் இடம் பெற்றுள்ளது) அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் இந்நிலையில் அங்கு இருந்து புறப்பட்டு வேறு ஊர்களுக்கு வந்து இப்படித்தான் முரளியுடன்
அவருக்கு பழக்கம் ஏற்பட்டது இந்நிலையில் தான் தொழில் செய்து நன்றாக இருப்பதாக அவர் தன் ஊருக்கு சென்றிருந்த பொழுது சொல்ல சரி உனக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க நாங்கள் ஆசைப்படுகிறோம் என்றும் எங்களுக்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வயதான காலகட்டத்தில் இறுதியாக நாங்கள் உன் திருமணத்தை பார்க்க ஆசைப்படுகிறோம் என்று அவரை வற்புறுத்த துவங்கினர் முருகேசனின் பெற்றோர்
மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்த நமது சொந்தத்திலேயே ஒரு பெண் தயாராக இருப்பதாகவும் முருகேசன் இடம் கூறினர் முருகேசனின் பெற்றோர்
முருகேசனோ இல்லை நான் வெளி ஊரிலேயே தற்பொழுது ஒரு நல்ல தொழில் செய்து செட்டில் ஆகிவிட்டேன் அதனால் இந்த ஊரில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து என்னால் இங்கு வாழ முடியாது எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை பிறகு பார்க்கலாம் என்று சொன்னார் ( அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள மலை கிராமங்களில் வாழும் மலைவாழ் இன மக்கள் தங்கள் ஊரை விட்டு வெளியே வரமாட்டோம் என்கின்ற பழக்கத்தை தற்போது வரை கடைபிடித்து வருகின்றனர் )
முருகேசன் இப்படி கூறியதால் அவர்கள் பெற்றோர் சரி அந்த ஊரிலேயே நீ நல்ல ஒரு பெண் தேடு நம் ஊருக்கு அழைத்து வா இங்கு திருமணம் செய்து கொண்டு அந்த ஊரில் போய் அங்கே வாழ் நாங்கள் எதுவும் சொல்லவில்லை நீ நன்றாக இரு எங்களுக்கு உன் திருமணத்தை கடைசி காலத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று கூறினர்
இதை கேட்ட முருகேசன் அப்படி எல்லாம் எனக்கு திருமணம் வேண்டாம் சரி நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஊரிலிருந்து கிளம்பி மீண்டும் முரளி ஊருக்கு வந்து விட்டார்
நந்தினிக்கு அதிர்ச்சி கொடுத்த முருகேசன்
முருகேசன் மீண்டும் நந்தினியை சந்தித்தபோது நடந்த விஷயத்தை எல்லாம் கூறினார் முருகேசன் மேலும் அடுத்த அடுத்த நாட்களில் அவரின் தாயார் மிகவும் உடல்நிலை சரியில்லை என்று ஊரில் இருந்து தகவல் வர உடனடியாக மீண்டும் தன் ஊருக்கு சென்று தன் அம்மாவை அங்கு பார்த்துவிட்டு மீண்டும் நந்தினியிடம் வந்து சேர்ந்தார் முருகேசன்
அம்மாவை பார்த்துவிட்டு வந்த முருகேசனிடம் நந்தினி உங்கள் அம்மா எப்படி இருக்கிறார் என்று கேட்க அவர் நன்றாக இருக்கிறாள் ஆனால் என்னை இன்னொரு திருமணம் செய்து கொள்ள சொல்கிறாள் என்னை நினைத்து கவலைப்படுகிறாள் எனக்கு திருமணம் ஆகவில்லை என்று இதனால் தான் உடம்பு சரியில்லாமல் போனது என்று சொன்னார்
அதற்கு நந்தினி முருகேசன் இடம் நீங்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டால் அதற்கு முருகேசன் என்ன நந்தினி இப்படி கேக்குற என் மனது முழுவதும் நீதான் என் உலகமே நீதான் எனக்கு வாழ்க்கை தந்ததே நீதான் உன்னை விட்டு என்னால் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது நிச்சயமாக அது நடக்காது என்னதான் நீ என் மனைவியா இல்லை என்றாலும் என் மனைவிக்கு மேல் நான் உன்னை நினைக்கிறேன் என்று சொல்ல நந்தினியும் சற்று கண்கலங்கி முருகேசனை கட்டி அணைத்துக் கொண்டாள்
கட்டி அணைத்துக் கொண்ட நந்தினியிடம் முருகேசன் நந்தினி எனக்காக நீ ஒரு உதவி செய்ய வேண்டும் நீ நினைத்தால் செய்யலாம் அதில் எந்த பிரச்சினையும் வராது என்று சொல்ல அதற்கு நந்தினி என்ன என்று கேட்கிறாள் நான் என் ஊருக்கு போகிறேன் நான் தற்போது இருக்கும் ஊரில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் அந்தப் பெண்ணும் தன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள் என்று சொல்லப் போகிறேன் என்று சொல்ல நந்தினி சரி என்று கேட்கிறாள் அந்த பெண் வேறு யாரும் இல்லை நீதான் என்று சொல்ல நந்தினி அதிர்ச்சி அடைந்து என்ன சொல்றீங்க என்று கேட்டாள் ஆமாம் நந்தினி எங்கள் ஊரில் ஒரு பழக்கம் உண்டு ஊரை விட்டு ஊர்காரர்கள் யாரும் வெளியில் வர மாட்டார்கள் நானும் ஒரு சிலர் மட்டுமே அதற்கு விதிவிலக்கு
எங்கள் ஊரில் தொலைபேசிக்கான நெட்வொர்க் எதுவும் கிடைக்காது அது இன்னும் எந்த ஒரு வசதியும் இல்லாத பின்தங்கி உள்ள ஒரு கிராமம் அதனால் நீ என் உடன் வா நாம் அங்கு போய் திருமணம் செய்து கொண்டு இரண்டு மூன்று நாட்கள் அங்கே தங்கி இருந்து மீண்டும் நாம் இங்கு வந்து விடலாம் நமக்கு திருமணமானது எனக்கும் உனக்கும் மட்டும் தான் தெரியும் வேறு யாருக்கும் தெரியாது இதில் எந்த ஒரு பிரச்சனையும் வராது இது அவர்களின் ஆசைக்காக செய்யபடும் ஒரு நாடகம் போல நினைத்துக் கொள் நான் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளக்கூடாது உன்னை விட்டும் சென்று விடக்கூடாது என்றால் அதற்கு இது ஒன்றுதான் நந்தினி வழி என்று கதறி அழுகிறார் முருகேசன் இதனால் நந்தினி அதிர்ச்சியில் திகைத்து போனால்