அதே சமயம் குப்தா ஒருவேளை தன் உடலை கேட்காமலேயே உதவ மாட்டானா என்ற நப்பாசையும் உண்டானது. மேலும் இவ்விஷயத்தை தீணாவிடம் பகிர்ந்து கொள்ளவும் அவள் விரும்பவில்லை. தீணாவிடம் ஏதும் வழி தெரிந்தால் சொல் என்று கூறி விடைபெற்று மாதவனின் டைரியிலிருந்து குப்தாவின் போன் நம்பரை குறித்துக் கொண்டு ஒரு பப்ளிக் பூத்திலிருந்து தொடர்பு கொண்டாள்.