அப்புறம் யார் அத பண்ணது என்றான் விக்கி .ம்ம் பேய் பண்ணி இருக்கும் ஏன் பாஸ் வீட்ல வேற யார் இருக்கா உங்கள தவிர அவங்க தான் பண்ணி இருக்கணும் என்றான் .ஒ அப்ப நீ பண்ணலையா என்றான் .சத்தியமா பன்னல எனக்கு அடுத்தவங்க பண்ணதுக்கு கிரடிட் வாங்க பிடிக்காது என்றான் .ஒ அப்ப அவ தான் பண்ணி இருக்கணும் அவ ஏன் அப்படி பண்ணா என்றான் அத நீங்க அவங்க கிட்ட தான் கேக்கணும் என்றான் .