வர்ற வீக் எண்ட்ல நானும் என் நண்பன் சிபியும் போட்ட பிளானை வொர்க் அவுட் பண்ண வீட்டில் சமயம் பார்த்து கொண்டிருந்தேன். தங்கை சுவேதா காலையிலிருந்தே வீட்டுக்குள் அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டு பிஸியாக இருந்தாள். அவள் ரிலாக்ஸா இருக்கும்போது ஆரம்பிக்க வேண்டும் என்கிற ஐடியாவில் நானும் நகத்தை கடித்து கொண்டு,
பொறுமை இழந்து தவித்து கொண்டிருந்தேன். நல்ல வேளை அன்று அப்பாவும், அம்மாவும் சீக்கிரமாக ஆபிஸூக்கு கிளம்பி சென்று விட்டார்கள்.சுவேதா கொஞ்சம் கூலாகி ஹாலுக்கு வந்து டிவியை ஆன்செய்து ரிமோட்டை திருகும்போதே,