எனது பெயர் விக்னேஷ். வயது 33, நான் மற்றும் என் மனைவி ஆகியோர் சேர்ந்து ஒரு தொழிற் சாலை நடத்தி கொண்டு இருக்கின்றோம். அதற்காக ஆர்டர் சேகரிக்க பல இடங்களுக்கு செல்வோம். ஆரம்பத்தில், எனக்கு ஆர்டர்கள் கிடைக்காமல் திணறினேன் .பின் எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு வெளிநாட்டு இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றை பிடித்து ஆர்டர் பெற்றோம்.
நாங்கள் அனுப்பிய சரக்குகள் தரமாக இருந்ததை அறிந்து, தொடர்ந்து ஆர்டர்கள் தர துவங்கினார். மெல்ல மெல்ல எங்கள் நிறுவனம் வளர துவங்கியது. நிறுவனம் ஆரம்பித்து சில வருடங்களுக்குள் நல்ல வளர்ச்சி கிட்டியது. எனக்கு நல்ல லாபம். பணம் கொட்டோ கொட்டு என கொட்டியது.