அன்றிரவு அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன் அல்லவா, அடுத்த நாள் காலையே சம்மதம் சொல்லிவிட்டால். அம்மாவுக்கு 4 அக்காள்கள். மூத்த அக்கா சாவித்திரி (ராகவியின் பாட்டி) எப்போதுமே என் அம்மாவிற்கு சப்போர்ட். அவள் உடனே ஓகே சொல்லிவிட்டால். கடைசி பெரியம்மாவும் ஓகே சொல்லிவிட்டால். மற்ற இரண்டு பெரியம்மாக்களுக்கும் இஷ்டம் இல்லை.
கல்யாணம் ரிஜிஸ்தர் ஆபீசில் நடந்தது. நெருங்கிய உறவினர்களுக்கும் அம்மாவின் அலுவலக நண்பர்கள், எங்கள் டிப்பார்ட்மெண்ட் ஸ்டாப் மட்டும் பங்கேற்ற சின்ன விருந்தும் நடந்தது. பொதுவாக எனக்கு அதிகம் நண்பர்கள் இல்லை. வீடு வரை வரும் நண்பன் யாரும் இல்லை.