பாக்யாவுக்கு பருவ வயது . அவள் பள்ளிவிட்டு வீடு போனபோது.. ஊரிலிருந்து ராசு வந்திருந்தான்.
ராசு என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம்..!
அதேபோல்தான் அவனுக்கும். ! ஆனால் ராசு சிறுவன் அல்ல.. இளைஞன்.! அவளது பாட்டியின் தங்கை மகன்.! அவளுக்கு மாமா முறை.!
ஆனாலும் அவனுக்கு அவள் மீது அலாதி பிரியம். !
அவனிடம் அவளுக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கும். ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித்தருவான்.