”என்ன சொல்ற..?”
”ஹக் பண்ணிக்கோங்கப்பா.. ம்ம்..!!” அவனோடு அணைந்து நின்றாள்.
”இருதயா….”
”ஏன்.. தப்பா ஏதாவது தோணுதா.. உங்களுக்கு..?”
”புரியல….”
”நா உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்..!!”
”அப்படின்னா..?”
”என்னை புடிச்சிருக்கா..?”
”இருதயா…..”
”ப்ளீஸ்.. சொல்லுங்க….”
” என்ன கேள்வி இது..?”
”எனக்கு உங்கள புடிச்சிருக்கு..” என்றாள்.
என்ன சொல்வதெனப் புரியாமல் அமைதியாக நின்றான் சசி.
அவன் தோளில் தலைசாய்த்து நின்றபோது அவளது தம்பி மேலே வந்துவிட்டான்.
”ஏய்.. வா.. மம்மி கூப்பிடுது..” என்றுவிட்டு அவன் உடனே திரும்பிப் போக..
” ஐ லவ் யூ..! நா போறேன்.. பை..!!” என்றாள் விலகி நின்று.
”பை..!!”
”அவ்ளோதானா..?”
”குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!” என்றான்.
சிரித்தவாறு ”குட்நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!” எனறுவிட்டு இறங்கிப் போனாள் இருதயா..!!
நீண்ட இடைவெளி தன் வீட்டுக்குப் போனான் சசி.
கவியின் வீட்டுக்கதவு திறந்திருந்தது. ஆனால் யாரும் தெண்படவில்லை.
அவன் சைக்கிள் நிறுத்தும் சத்தம் கேட்டு.. கதவருகே வந்து எட்டிப் பார்த்த கவிதாயினி மிடியில் இருந்தாள்.
”ஹாய்….” என்றாள் முகத்தில் புன்னகை மலர.
”ஹாய்..” மெலிதாகப் புன்னகைத்தான் சசி.
”எப்படி இருக்க. .?”
”ம்..ம்ம்..! இருக்கேன்..! நீ..?”
”செம்மயா இருக்கேன்..! அப்றம் எங்க இந்தப் பக்கம்..?” எனக் கேட்டுக்கொண்டே வெளியே வந்தாள்.
”ஓட்டாத.. நீ காலேஜ் போகல..?”
”லீவ்..!” அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சசியின் அம்மா வெளியே வந்து அவனைப் பார்த்துவிட்டு
”வா..” என்றாள்.
உள்ளே போனான்.
”வா கவி..”
அவன் பின்னாலேயே வந்தாள்.
”காலைல வந்துருக்க.. ?”
”ஏய்.. ஏன் வரக்கூடாதா..?”
”வரலாம்தான்.. ஆனா.. நீ வரதில்லயே மச்சி..?”
”கொஞ்சம் பிஸி..!” உட்கார்ந்தான். அம்மாவிடம கேட்டான் ”அப்பா..?”
”தோட்டத்துக்கு போய்ட்டாரு.. டிபன் தரட்டுமா..?”
”ம்..ம்ம். .! கவி நீ..சாப்பிட்டியா..?”
”இல்லடா .. நீ சாப்பிடு..!”
”உங்க வீட்ல என்ன டிபன்..?”
”தோசை..”
அம்மா அடுப்படிக்குப் போக.. சசியைப் பார்த்துக் கேட்டாள் கவி.
”ஏன் இப்படி டல்லாருக்க..?”
புன்னகைத்தான்.
”என்னடா பிராப்ளம்..?”
”நத்திங்.. கவி..”
”நா ஒன்னு கேள்விப்பட்டேனே..?”
”வாட்..?”
”உன் பிரெண்டு ராமுகூட சண்டை போட்டியா..?”
அவனது முகம் மாறியது.
”ப்ச்..!!” என உச் கொட்டினான்.
சட்டென உறைத்தது.
புவி மூலமாக அண்ணாச்சியம்மா மேட்டர் இவள்வரை வந்துருக்குமோ..?
எழுந்து டிவி ரிமோட்டை எடுத்து வால்யூமை அதிகப்படுத்தினான்.
உடனே அவனிடமிருந்து யிமோட்டைப் பிடுங்கி.. வால்யூமைக் குறைத்தாள் கவி.
”ஆன்ஸர் மீ.. மச்சி..?” என்றாள்.
டிவியைப் பார்த்தபடி..
”என்ன.. கவி..?” என்றான்.
”புவிகூடவும் சண்டை போட்டியா..?”
அமைதியாக இருந்தான்.
அவளே கேட்டாள்.
”அது உண்மையாடா மச்சி..?”
” எது..?” அவளைப் பார்த்தான்.
”நா கேள்விப்பட்டது..?” அவனை உற்றுப் பார்த்தாள்.
அவனது இதயத்துடிப்பு அதிகமானது.
”என்ன கேள்விப்பட்டே..?”
உதட்டில் மெலிதான புன்னகையுடன் சொன்னாள்.
” ‘பக்….’ கா மேட்டர்….! புவிதான் சொன்னா.. மிஸஸ்.. அண்ணாச்சினு….”
அவள் முடிக்கும்முன் சட்டென எழுந்து விட்டான் சசி….!!!!
”ஏய்..” சட்டென எழுந்து நின்ற சசியின் கையைப் பிடித்தாள் கவிதாயினி ”உக்காரு..டா..”
”இல்ல.. விடு நா.. போறேன்..” என்றான் முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டு.
”ஹேய்.. ஏன்டா..”
”ஸாரி..கவி.. விடு..”
”நா தப்பா ஏதாவது கேட்டுட்டனாடா..?”
”ஆமா..”
”ஸாரி..! அவதான் சொன்னா.. அப்படினு..” எனத் தயக்கத்துடன் சொன்னாள்.
”நம்பிட்ட இல்ல..?” முறைப்பாகக் கேட்டான்.
”இல்லடா.. சரி விடு.. அது உண்மை இல்லேன்னா..நீ ஏன் இவ்ளோ பீல் பண்ணிக்கனும்..? ஆள்கூட டல்லாகிட்ட.. அதான் புரியல..?” என அவள் புன்னகையுடன் சொல்ல..
சசியின் அம்மா சாப்பிடக்கொண்டு வந்தாள்.
அந்தப் பேச்சை அதோடு விட்டு.. விட்டு.. பொதுவாகப் பேசியவாறு.. சாப்பிட்டான் சசி.
கவிதாயினி கேட்டது அவனை வெகுவாக யோசிக்க வைத்தது. அது கவலை ரேகை படிந்த யோசணை.
அவனைப் பற்றின எல்லா விஷயங்களையும்.. ராமு மூலமாக புவிக்கும்.. அவள் மூலமாக கவிக்கும் தெரியவந்திருக்கலாம்.
கவியைப் பற்றி பயம் இல்லை.
ஆனால் இந்த புவி.. இவளோடு மட்டும்தான் நிறுத்தியிருப்பாளா..? இல்லை.. அவளது தோழிகளுக்கும் நிச்சயம் சொல்லியிருப்பாள்.
‘சே.. தேவடியாப் பெண்ணே உன்னை நேசித்த பாவத்திற்காக.. நான் எத்தனை வேதனைப் பட்டுவிட்டேன்.? இந்த வேதனை தேவைதான் எனக்கு..!’ என நினைத்துக் கொண்டான்.
‘நான் பொய்யானவனாக இருக்கலாம்.. ஆனால் என் காதல் பொய்யானது அல்ல. அது பொய்யானது இல்லை. பொய்யான காதலாக இருந்திருந்தால்.. அதன் தோல்வி என்னை இவ்வளவு பாதித்திருக்காது.. என்னை நிலைகுலைந்து போகச்செய்திருக்காது.. என் காதல் உண்மையானதுதான்.. ஆனால் நீதான் அதற்குத் தகுதியானவளாக இல்லை..’ என விரக்தியின் விளிம்பில்.. அவன் மனதை அவனே சமாதானம் செய்து கொண்டான்.
தன்னைவிட அவள் எந்தவகையிலும் தாழ்ந்தவள் இல்லை என்பதை அவனால் உணரமுடியவில்லை.
அதேசமயம்.. விருப்பும்.. வெறுப்பும்.. மாறி மாறி வரக்கூடிய இரண்டு நிலைகள்.. காலநிலையைப் பொருத்தவரை.. விருப்போ.. வெறுப்போ நிரந்தரமில்லை என்பதோ.. அவைகள் இரண்டும் எதிரெதிரானதுதானே திவிற.. வெவ்வேறானது அல்ல என்பதோ.. அப்போது தெரியவில்லை.. சசிக்கு..!!
அனேகமாக சசி நண்பர்கள் வட்டத்திலிருந்து..முற்றிலுமாக விலகிவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்போது அவனுக்கென்று குறிப்பிடும்படியான நண்பர்கள் கிடையாது.
எப்போதாவது சில சமயம்..சம்சுவையோ காத்துவையோ பார்த்தால்.. ஒருசில நிமிடங்கள் நின்று பேசுவான் அவ்வளவுதான்.
மற்றபடி அவர்களுடன் ஜாலியாக அரட்டையடிப்பதோ.. ஒன்றாகச் சேர்ந்து ஊர் சுற்றுவதோ.. அறவே இல்லை.
அதயெல்லாம் சுத்தமாக மறந்து போனான்.
அதேசமயம் அவனது சோகங்களெல்லாம் ஓரளவு குறைந்திருந்தது. கவலையில் தன்னை அவன் மிகவும் வருத்திக் கொள்வதில்லை.
ஆனாலும் அவ்வப்போது அவன் மனது சுணங்கிப் போவதையும்.. அடிமனதில் நிரந்தரமான ஒரு வெறுமையுணர்வு தங்கிவிட்டதையும்.. அவனால் தவிர்க்க முடியவில்லை.
ஒருசில சமயங்களில் அவன் மனது ஏனென்றே தெரியாமல் விர்க்தி அடைந்துவிடும். காரணமற்று கலங்கித் தவிக்கும். தனிமையை ஏற்க முடியாமல் துவண்டு போகும் அதுபோண்ற தருணங்களில் அவனுக்கு ஆறுதலாக இருப்பது இருதயா மட்டும்தான்
அவளது காதல் அவன் மனதுக்கு அருமருந்தாக அமைந்தது. அவன் விரும்பாவிட்டாலும்.. அவளாக வந்து.. அவனோடு நெருக்கம் காட்டுவாள்.
I love this story
Yeah…Everyone love it