கட்டிங் டேபிள் மீது துணியை விரித்து கோடு போட்டுக்கொண்டிருந்தான் ராமு.
சசியைப் பார்த்ததும் இயல்பாகப் புன்னகைத்தான்.
ஆனால் சசியால் அப்படி புன்னகைக்க முடியவில்லை. அவன் முகம் இருகி.. ரத்தம் சுண்டி வெளுத்துப் போயிருந்தது.
அவன் சுவாசம் சீராக இல்லை.
அவன் மனசு எரிமலைக்குழம்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
தோல்வி.. அவமானம்.. இயலாமை.. வேதனை எல்லாமாகச் சேர்ந்து.. அவனது இதயத்தைப் பிசைந்து கொண்டிருந்தது. விழுங்க முடியாத துக்கம் அவன் தொண்டையை இருக்கிப் பிடித்திருந்தது.
அவன் சிரிக்காமல் இருப்பதையும்..அவன் முகம் இருண்டு கிடப்பதையும் கண்டு ராமு கேட்டான்.
”ஏன்டா.. என்னாச்சு..? ஒரு மாதிரி இருக்க..?”
ராமுவின் முகத்தை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை சசி. அவன் முகத்தைப் பார்த்தாலே கொலை செய்து விடும் ஆத்திரம் வரும் போலிருந்தது..!
‘துரோகி.. வஞ்சகன்..’ என அவன் மனம் குமறியது.
மறுபடி ராமு ”உடம்பு சரியில்லையாடா..?” என்று கேட்டான்.
சட்டென வெடித்தான் சசி.
”நீ இவ்வளவு பெரிய துரோகியா இருப்பேனு நான் நெனக்கவே இல்லடா..”
திடுக்கிட்டான் ராமு.
”எ.. என்னடா.. சொல்ற..?”
”பேசாதடா..! கொன்றுவேன்.. நீயெல்லாம் ஒரே பிரெண்டா.. துரோகி.. சீ..”
அதிர்ந்துபோய் பார்த்தான் ராமு.
சசியின் கண்கள் கணன்று கொண்டிருந்தது. அவன் முகத்தில் கொப்பளித்த கோபமும்.. கண்களில் தெரிந்த அக்னி கணலும்..ராமுவை சுட்டெரித்தன.
அடிவயிறு கலங்கிப் போன ராமு வாயைத் திறந்தான் ஆனால் வார்த்தை வரவில்லை.
”அப்படி நான் என்னடா கொடுமை பண்ணிட்டேன் உனக்கு..? இப்படி என்னை அசிங்கப்படுத்திட்டியே.. நீயெல்லாம் ஒரு நண்பன்னு நம்பினேனே…” இயலாமையில் சசியின் குரல் அழகைக்கு மாறிவிடும் போலிருந்தது..!
ராமு மெல்ல.. ”நீ என்ன பேசறேனே புரியலடா..” என்றான்.
பற்றிக் கொண்டு வந்தது ஆத்திரம்..! வேதனை.. வெறுப்பு.. விரக்தி.. கோபம்.. வெறி என நொடிக்கு நொடி.. அவன் மனநிலை மாறி.. மாறிக் கொந்தளித்தது.
வெறுப்போடு கத்தினான் சசி.
”அண்ணாச்சியம்மா பத்தி அவகிட்ட சொன்னியா..?”
”எ..எவகிட்ட..?”
”அவதான்..அந்த வெங்காய காதலி..? அந்தக… யழகிகிட்ட.?”
ராமு அதிர்ச்சியடைந்தான். அவனுக்கு விசயம் புரிந்துவிட்டது. மிகவும் தடுமாறினான்.
”உன்ன நம்பினதுக்கு நல்ல பாடம் கத்துக்குடுத்துட்ட..டா.. ச்சே.. நீயெல்லாம் ஒரு மனுஷன்..” என வெறுப்போடு கத்திவிட்டு.. அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாக வெளியே போனான் சசி….!!!!
மிகவும் விரக்தியாக இருந்தான் சசி. இதற்கு முன் அமைதியாய்.. ஆனந்தமாய் போய்க்கொண்டிருந்த அவன் வாழ்வில் விழுந்த முதல் இடி இது.!
புவியாழினி மீது அவன் கொண்டிருந்த காதல்.. இந்தளவு அவனை பாதிக்கும் அவன் கொஞ்சம்கூட எதிர் பார்த்திருக்கவில்லை.
அவனது வாழ்வில் இது மிகப்பெரிய தோல்வி.! அவமானம்..! அசிங்கம்..! நம்பிக்கை துரோகம்..!
மிகவும் மனமுடைந்துபோன சசி..தனியாக பாருக்குப் போய் பீர் குடித்தான். போதையில்.. தன்னை அவமானப்படுத்தின புவியையும்..நம்பிக்கை துரோகம் செய்த ராமுவையும் கொலை செய்ய வேண்டும் எனக் கொந்தளித்தான்.
அன்றைய இரவுதான்.. முதன் முதலாகக் கண்ணீர்விட்டு அழுதான் சசி.
விபரம் தெரிந்த பிறகு அவன் விட்ட முதல் கண்ணீர்..!!
சுய பச்சாதாபம்.. கழிவிரக்கம்.. எல்லாம் அவனை வாட்டியது. புவியாழினி பேசிய பேச்சுக்களும்.. அவளிடம் அவன் பேச முடியாமல் கூணிக்குறுகிப் போய் நின்ற காட்சியும்.. அவன் இதயத்தைக் குத்திக் கிழித்து.. ரணப்படுத்தியது. அந்த அவமானம் தாங்காமல் தொடர்ச்சியாக.. தினமும் பீர் குடித்தான்..!!
சசியின் நட்பு வட்டத்தில் உயிர் நண்பன் என்றில்லாவிட்டாலும்.. மிக நெருக்கமாக இருந்த ராமு இப்போது சசியின் எதிரியாகிவிட்டான். சசியின் இயல்பான பேச்சு மாறியது.
வழக்கமான கலகலப்பு.. உற்சாகம் அவனிடம் இல்லை.
ஆனாலும் அவனது சோகத்தை அவன் வெளிக்காட்டவே இல்லை..!!
அதிகமாக தன் வீட்டுக்குப் போவதையே தவிர்த்தான் சசி. காலையில் கிளம்பி பழக்கடைக்குப் போனால்.. இரவுதான் வீடு திரும்புவான்.! மதிய உணவைக்கூட தவிர்த்து வந்தான்.!
குமுதா காரணம் கேட்டபோதும் அவன் எதுவும் சொல்லவில்லை.!
ராமுவின் கடைப்பக்கம் திரும்புவதுகூட இல்லை. அவனைப் பார்ப்பதும் இல்லை. எதேச்சையாகப் பார்த்தாலும்.. பேசுவதில்லை.!
ராமுவும் அவனோடு பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஒருமுறை காத்து கேட்டான்.
”என்னடா.. ராமுகூட பேசறதில்லையா..?”
சசி பதில் சொல்லவில்லை.
காத்து ”என்னடா பிரச்சினை..?” என்று கேட்டான்.
”அவனே சொல்லியிருப்பானே..?” என திருப்பிக் கேட்டான் சசி.
”ம்..ம்ம்..! சொன்னான்..!” என்றான் காத்து ”என்னருந்தாலும்.. அந்த மேட்டர்லாம் போயி.. ஒரு புள்ளகிட்ட சொல்லியிருக்கக்கூடாது.! சொல்லிட்டான்.. ஆனா அவ இப்படி மாறுவான்னு.. அவனே எதிர்பாக்லேங்கறான்..”
சசியின் முகம் இருகியது.
காத்து ”சரி விடுடா.. நடந்தது நடந்து போச்சு.. அவன நானும் நல்லா திட்டி விட்டேன்.! இப்ப அண்ணாச்சி ஊர்ல இல்ல போலருக்கு.. எப்ப வருவாங்க..?” என்று கேட்டான்.
சசி எதுவும் பேசும் நிலையில் இல்லை..! அதைப் பற்றி அவன் எதுவும்.. யாரோடும் பேசத் தயாராக இல்லை..!
அவன் பேசாதது கண்டு காத்துவே பேச்சை மாற்றினான்.!
அவனது மணவாழ்க்கை.. உறவினர்கள் பிரச்சினை என எல்லாம் ஒரு பாட்டம் ஒப்பித்தான்.!!
இரவு சசி வேலை முடிந்து வரும்போதே பீர் குடித்துவிட்டுத்தான் வந்தான். வழியில்.. அவனைப் பார்த்த மஞ்சு.. அவனைக் கூப்பிட்டாள்.
”ஹலோ.. சசி..”
அவளைப் பார்த்துவிட்டு சைக்கிளை ஓரம்கட்டினான் சசி.
ரோடு தாண்டி அவனிடம் வந்தாள் மஞ்சு.
” எப்படி இருக்கீங்க..?”
”ம்..! நீ..?” சுரத்தின்றி கேட்டான்.
”சூப்பரா இருக்கேன்..! ” சைக்கிள் ஹேண்ட் பாரைப் பிடித்தாள் ”அப்றம் பாக்கவே முடியறதில்ல..?”
”வேலை..”
”வேலைக்கு போக ஆரம்பிச்சதுலேர்ந்து பயங்கர பிஸிதான்..?” சிரித்தாள். சுடிதார்தான் போட்டிருந்தாள். ஆனால் மார்பைக் காட்டும்படி நெஞ்சை முன்தள்ளி நின்றிருந்தாள்.
”அப்படினு இல்ல….”
”வீட்டுப்பக்கமெல்லாம் வரதே இல்ல..? ஏன்.. எங்க நாபகமெல்லாம் வராதா உங்களுக்கு..?” என்று கேட்டாள்.
அவளோடு இப்போது ஜாலியாகப் பேசும் மனநிலையில் சசி இல்லை.
வெறுமனே சிரித்து வைத்தான்.
மஞ்சு ”மறுபடி எலக்ஷன் வந்தாத்தான் வருவீங்களா..?” என்று கேட்டாள்.
”அப்டி இல்ல..”
அவன் முகத்தை ஆர்வமாகப் பார்த்தாள்.
”உங்கள ஒன்னு கேக்கனும்..”
”என்ன..?”
சட்டென.”ட்ரிங்க்ஸ் அடிச்சிருக்கீங்களா..?” எனக் கேட்டாள்.
”ம்…!!” சிரித்தான்.
”ஸ்மெல் வருது..”
”சரி.. நா போகட்டுமா..?”
”உங்க மொபைல் நெம்பர் குடுங்க..” என்றாள்.
”ஏன் உன்கிட்ட இருந்துச்சு இல்ல..?”
”அது என்னோட பழைய சிம்முல இருந்துச்சு.. அது எங்கண்ணா புடுங்கி ஒடச்சுட்டான். இப்ப வேற சிம்..நெம்பர் குடுங்க…”
” எதுக்கு..?”
”பேசறதுக்கு…” குழைந்தாள் ”நா இப்ப ப்ரீ…”
”அப்படியா..? ஏன் இப்ப ஸ்கூல் போறதில்ல..?”
”ஹைய்யோ.. அதில்ல.. இது வேற ப்ரீ…”
”ஓ.. உள்ளார ஒன்னும் போடலியா..?”
”ச்சீ.. ” அவன் கையில் தட்டினாள் ”நெம்பர் குடுங்க சொல்றேன்..”
”போன் இப்ப கொஞ்சம் ரிப்பேர்” என பொய் சொன்னான் சசி ”அப்றம் தரேன்.. சரி நான் போகட்டுமா..?”
சைக்கிளை அழுத்திப் பிடித்தாள்.
”வெய்ட்.. நா ஒன்னு கேக்கனும்னு சொன்னேன் இல்ல..”
”அதான் கேட்ட இல்ல..?”
”நா.. என்ன கேட்டேன்..?”
”என் நெம்பர்..?”
”ஆ.. அதில்ல.. வெளையாடாதிங்க சசி..! நா வேற ஒன்னு கேக்கனும்..”
”சரி கேளு.?”
குரலைத் தழைத்து ”அண்ணாச்சி எங்க போனாங்க.. ஊருக்கா.?” என்று கேட்டாள்.
”ஆமா.. ஏன்..?”
” இல்ல.. நா ஒண்ணு கேள்விப்பட்டேன்.. உங்களுக்கும.. நம்ம அண்ணாச்சியம்மாவுக்கும்.. லிங்க்னு…”
அதிர்ந்து விட்டான் சசி.
”ஏய்.. என்ன பேசற..? யாரு.. யாரு சொன்னது இப்படி..?”
”உங்க பிரெண்டு ராமுதான் சொன்னாப்ல..” வாயெல்லாம் பல்லாகச் சிரித்தாள்.
சசியின் கோபம் சிணந்தது.
”ஏய்.. நீ பாட்டுக்கு கண்டவன் சொல்றதெல்லாம் லூசு மாதிரி நம்பிட்டிருக்காத.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல..! ஆமா நீ என்ன ஓவரா.. அவன்கூடல்லாம் டேட்டிங் போய்ட்டிருக்கியா..?”
Hi machi… comment storya paththunathu illa… if u remember…. intha web page create panrappo… online la irukkuravangaloda id’s visible irunthaa. nallaarukkum… avanga kooda chat panra option iruntha innum nallaarukkumnu sonnene… athukku ethaachum panniya machi…
Antha mathiri option illa nanum try pannen..best ethachum iruntha sollu