மனசுக்குள் நீ – பாகம் 42

அறைக்குள் இருந்து வெளியே வந்த மானசியை அனிதா பிடித்துக்கொண்டாள், “ ஏய் இவ்வளவு நேரமா என்னடி பேசினீங்க நீயும் அம்மாவும்,, ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று கேட்க…

அனிதாவை பார்த்ததும் ஏதோ இனம்புரியாத துயரம் வந்து இதயத்தை தாக்க, அய்யோ எவ்வளவு மென்மையானவள் இவள்,, இவளின் பிறப்பு ரகசியம் தெரிந்தால் தாங்குவாளா? மாமா சொன்னது போல எத்தனை காலம் ஆனாலும் இந்த உண்மை மண்ணோடு மடியவேண்டும்,, என்று நினைத்த மான்சி முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை உதட்டை கடித்து அடக்கியவாறு, தன் தோழியை அணைத்து “ அதெல்லாம் மாமியார் மருமகள் சீக்ரட், நீ மேரேஜ் ஆகி இன்னொருத்தர் வீட்டுக்கு போகப்போறவ தானே, அதனால உனக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை” என்றவள் அனிதாவை தள்ளி நிறுத்தி “ என்ன புரிஞ்சுதா?” என்றாள்தன் தோழியின் குறும்பை ரசித்த அனிதா “ அடிப்பாவி இன்னும் ஒரு அடிகூட எடுத்து வைக்கலை அதுக்குள்ள இவ்வளவு மிரட்டுறயே, இன்னும் கல்யாணம் ஆனபிறகு எங்களை என்ன பாடுபடுத்த போறியோ தெரியலையே?” என்று பொய்யான கவலையுடன் சோகமாக தடையில் கைவைத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள்

அவளருகில் அமர்ந்த மான்சி “ அதெல்லாம் அப்ப அப்போ எனக்கு என்ன தோனுதோ அதன்படி உத்தரவு போடுவேன், அதுக்கு கட்டுப்பட்டு எல்லா வேலையும் செய்யனும்” என்று ஒரு எஜமானி போல மிடுக்காக பேச..

அனிதா எழுந்து நின்று கைகட்டி வாய்பொத்தி “ உத்தரவு மகாராணி,, இப்போ நேரமாச்சு உணவை முடித்துக்கொண்டு தங்களின் அரண்மனைக்கு புறப்படலாமா?” என்று கேலி செய்தாள்

மான்சி சிரித்தபடி அனிதாவுடன் டைனிங் ஹாலுக்கு போக அங்கே வசு ஏற்கனவே அமர்ந்து உணவை ஒரு பிடிபிடித்துக் கொண்டு இருந்தாள்,

மான்சியை பார்த்ததும் அசடு வழிய “ ஸாரிக்கா பசி தாங்கமுடியலை அதான் உங்களை விட்டுட்டு சாப்பிட வந்துட்டேன்” என்றாள்

மான்சி அவள் பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து “ ம்ம், இந்த முறை மன்னிச்சு விடுறேன், இனிமே என்கிட்ட கேட்டுட்டு தான் சாப்பாட்டுல கை வைக்கனும்” என்று மிரட்டியவள் சட்டென்று ஒரு தாய்மை உணர்வுடன் வசுவின் தோளை அணைத்து “ நீ தான் என்னோட செல்லக் குட்டிம்மா ஆச்சே, நான் இதெல்லாம் போய் தப்பா நெனைப்பேனா?” என்று புதிதாய் பூத்திருந்த பூவைப்போன்ற வசுவின் கன்னத்தில் முத்தமிட்டாள்“ ஏன் மான்சி எனக்கு ஒரு சந்தேகம்,, வசு அப்படியே எங்க அண்ணன் ஜாடையில இருக்குறதால தானே நீ அடிக்கடி அவ கன்னத்துல முத்தம் குடுக்குற?” என்று அனிதா குறும்பாக கேட்க

See also  பொம்மலாட்டம் - பாகம் 02 - மான்சி கதைகள்

“ ஏய் ச்சீ அதெல்லாம் இல்லை” என்ற மான்சியின் முகம் பட்டென்று வெட்கத்தை பூசிக்கொண்டது

அப்போது அங்கே கிருபாவும் ரஞ்சனாவும் வந்தனர், அதன்பிறகு சிறிதுநேரம் அரட்டையும் சிரிப்புமாக அனைவரும் உணவை முடித்துக் கொண்டு ஹாலுக்கு வர,, கிருபா மான்சியை காரில் பாதுகாப்பாக அவளது அறைக்கு அனுப்பி வைத்தார்

அந்த வீட்டில் இருந்து கிளம்பியதுமே மான்சிக்கு சத்யனை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனை வந்து மனதில் உட்கார்ந்துகொண்டது,, எதைப்பற்றியும் கூறாமல் அவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்தாள்,,

அவளுக்கு எதுவுமே புரியவில்லை, அடுத்து எப்படி முன்னேறுவது என்று தெரியாமல் ஏதோ தடுப்பு சுவற்றில் முட்டுவது போல இருந்தது,, தனது அறைக்கு வந்து படுக்கையில் விழுந்தவள் என்ன செய்வது என்ற சிந்தனையிலேயே தூங்கிப்போனாள்

மறுநாள் மில்லுக்கு புறப்பட்டவள் சத்யனை பார்க்காமல் இன்னும் எத்தனை நாளைக்கு இருப்பது என்று எண்ணி ஏங்கினாள், நாளுக்கு நாள் அந்த ஏக்கமே சிறுகச்சிறுக பரவி பெரும் தீயாய் பரவ, இதற்க்கு மேல் தன்னால் அவனை காணாமல் இருக்க முடியாது என்று முடிவு செய்தாள்..இருவரும் பேசி கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் ஆன நிலையில் சத்யனுக்கும் தவிப்பு அதிகமானது,, ஏன்தான் என் மனசு புரியாம இப்படி பிடிவாதம் பண்ணி என்னை நோகடிக்கிறான்னு தெரியலையே, என்று மனதுக்குள் புலம்பியவன், அன்று பாட்டி கொடுத்தனுப்பிய உணவை சாப்பிடாமல் ப்யூனிடம் கொடுத்து விட்டு மான்சியை பார்க்கும் ஆவலில் கேன்டீன்க்கு போனான்

அவனுடன் வந்த கார்த்திக்கு சத்யன் எதற்காக கேன்டீன் வருகிறான் என்று புரிந்தாலும் எதுவும் கேட்கவில்லை, ‘சமூகத்தில் எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும் இந்த காதல் வந்துட்டா என்ன பாடு படுறாங்கப்பா” என்று மனசுக்குள் நினைத்து சிரித்தபடி சத்யனுடன் போனான்

இருவரும் உள்ளே சென்று ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டனர், சத்யன் தன் பார்வையை சுற்றிலும் ஓடவிட்டான், அதோ பார்த்துவிட்டான் அவன் தேவதையை, அவனையும் அறியாமல் முகம் மலர்ந்தது

பின்னலை முன்னால் போட்டு காதுகளில் இருந்த ஜிமிக்கிகள் ஆட ரொம்ப கவனமாக எதிரில் இருந்த பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தாள், ஆனால் தடாலடியாக இவனை திரும்பி நேர்பார்வை பார்த்தாள்..

அவள் பார்த்ததும் சத்யன் சட்டென்று திரும்பிக்கொண்டான், அப்படியானல் நான் வந்ததை மொதல்ல இருந்தே கவணிச்சிருக்கா, இல்லேன்னா இந்தமாதிரி கரெக்டா என் டேபிளை பார்க்கமுடியுமா? என்று எண்ணிய சத்யன் எதிரில் இருந்த உணவை அசிரத்தையாக பிசைய ஆரம்பித்தான்..

அவனையே கவனித்த கார்த்திக் “ பாஸ் நான் ஒன்னு சொல்லட்டுமா? ஏன் பாஸ் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு, எந்திரிச்சு போய் பக்கத்துல உட்கார்ந்து நேரடிய பேசுங்க பாஸ்” என்று கூற..

See also  புடிச்சு உருவு - பாகம் 06 இறுதி - அம்மா காமக்கதைகள்

சோற்றில் கவனமில்லாமல் பிசைந்த சத்யன் ” இல்ல கார்த்திக் அவளுக்கு கர்வம்டா,, நான் போய் அவ கால்ல விழனும்னு நெனைக்கிறா,, என்கிட்டயே எதுத்து பேசுறா” என்று உதட்டளவில் மான்சிப் பற்றி புகார் கூறினாலும் கண்கள் அவளை தேடியே ஓடியது ,“ ஆனா பாஸ் முதல்ல யார் சரண்டர் ஆவீங்களோ தெரியலை, ஏன்னா ரெண்டு பேரோட தவிப்பும் ஒரே மாதிரியா இருக்கு,, அவங்களும் நிமிஷத்துக்கு ஒருவாட்டி உங்களைத்தான் பார்க்கிறாங்க” என்று கூறிவிட்டு தன் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான் கார்த்திக்

சத்யனுக்கு ஒரு கவளம் கூட உள்ளே இறங்கவில்லை, ரொம்பவே தவிப்பாக இருந்தது, நிமிர்ந்து அவளைப்பார் என்று அதட்டிய மனதை அடக்கவே சிரமமாக இருந்தது, அவன் அவளை பார்த்தவரையில் அவள் வேண்டுமென்றே எதிரில் இருப்பவளிடம் சிரித்து சிரித்து பேசுவதுபோல் இருந்தது, என்னை வெறுப்பேத்துறா போலருக்கு, என்று கருவினான் சத்யன்

ஒருவழியாக பெண்கள் இருவரும் சாப்பிட்டு கைகழுவிவிட்டு வெளியே போக சத்யனும் அவசரமாக எழுந்து கைகழுவிவிட்டு பின்னால் போனான், மான்சியும் அந்த பெண்ணும் மில்லின் பின்புறமாக சென்றனர், சத்யன் அவர்கள் பின்னால் போனான்

Leave a Comment

error: read more !!