பின் அங்கிட்டும் இங்கிட்டும் கொஞ்ச நேரம் நடந்தான் .எப்படியும் தூங்குனா கனவுல இவ தான் வருவா அதுனால தூக்கம் வர வரைக்கும் ஹாலுக்கு போயி டிவி பாப்போம் என்று நினைத்து கொண்டு ஹாலுக்கு போனான் .
என்ன ஆச்சு இவனுக்கு உண்மைலே வொர்க் டென்சனா இல்ல நம்மள வேணும்னு avoid பண்றானா ஒன்னும் புரியலையே சரி நம்மள avoid பண்ணா நல்லது தான் அவன் உயிரோட நிம்மதியாவச்சும் இருப்பான் என்று சுவாதி நினைத்து கொண்டு இருக்கும் போது அவளுக்கு ஏதோ புகை வாடை வர என்னது ஏதோ கருகுற வாடை வருது என்று ரூமை ஒரு முறை சுற்றிலும் பார்த்தாள் .
எங்கிட்டும் கிச்சன்ல எதுவும் மறந்தாப்பல வச்சு இருக்கோமா அப்படின்னு நினைச்சு கிட்டு ரூம் கதவை திறந்து வெளியே வந்தாள் .
அங்கு விக்கி டிவி பார்த்து கொண்டு சிகரெட் பிடித்து கொண்டு இருந்தான் .சுவாதிக்கு கோபம் வந்தது .விக்கி என்று கத்தினாள் .
என்ன பண்ற என்றாள் .டிவி பாக்குறேன் ஏன் சவுண்டு ஏதும் அதிகமா வச்சுட்டேனா இல்லையே கம்மியாதான் வச்சு இருக்கேன் என்றான் .நான் அத சொல்லல கையில என்ன வச்சு இருக்க என்றாள் .
ஒ இதுவா சிகெரட் என்று சொல்லி விட்டு விக்கி யோசித்தான் .இதான் சமயம் ஒரு நல்லா பெரிய சண்ட போட்டு அவள வீட்ட விட்டே அனுப்பிடுவோம் என்று நினைத்து கொண்டு
இது சிகரெட் ஏன் உனக்கு கண்ணு தெரியலையா என் வீட்ல எனக்கு சிகரெட் குடிக்க கூட உரிமை இல்லையா நீ யாருடி என் பொண்டாட்டியா இல்ல லவ்வரா என்று விக்கி கத்த
ஆஹா கோப பட ஆரம்பிச்சுட்டான் இதாண்டா கண்ணா உன் கிட்டநான் எதிர் பாத்தேன் சரி சரி நம்மளும் எரியிற தீயில கொஞ்சம் எண்ணெய் இல்ல பெட்ரோலே உத்துவோம் அப்படின்னு சுவாதி நினைத்து கொண்டு நான் ஒன்னும் உன் பொண்டாட்டியும் இல லவ்வரும் இல்ல உனக்கு எல்லாம் ஏவ பொண்டாட்டியாவோ லவ்வராவோ இல்ல அப்படி இருந்தா அத விட பெரிய துருதிர்ஷ்டம் எனக்கு வேற இல்ல என்றாள் .
ஆஹா இவளும் நாம நினச்சா மாதிரியே ரியாக்ட் பண்றா இதான் சரியான சமயம் அவள இன்னும் கொஞ்சம் திட்டி வெளிய அனுப்பிடுவோம் என்று நினைத்து கொண்டு சரிடி நீ என் லவ்வரும் இல்ல என் பொண்டாட்டியும் இல்ல அப்புறம் ஏன் நான் சிகெரட் பிடிக்க கூடாதுன்னு கத்துன்ன என கேட்டான் விக்கி .
நல்ல கேள்வி நல்ல கேள்வி என்று சுவாதி திணற பதில சொல்லுடி என்றான் .என்ன சொல்ல என்று நினைத்து கொண்டு ஏன்னா என் வயித்துல உன் குழந்தை வளருதுடா அதுக்கு சிகெரட் புகை எப்படி ஒத்துக்கிரும் இன்னும் வெளியேவே வராத குழந்தைக்கு அதுக்கு அந்த புகை ஒத்துக்காம எதாச்சும் ஆச்சுன்னா என்ன பண்ண என்றாள் சுவாதி .
அது எப்படிடி என் குழந்தையாகும் அது நீ எவன் கூட படுத்து உண்டான குழந்தையோ நீ நல்லா அத என் குழந்தைன்னு சொல்லி எனக்கு மிளகா அரைக்க பாக்குற என்று சொல்வான் அதற்கும் மேலும் கெட்ட வார்த்தைல கூட திட்டுவான் அப்படின்னு தான் சுவாதி நினைச்சா ஆனா குழந்தைங்கிற வார்த்தைய கேட்டதும் அவனுக்கு கோபம் வர வில்லை .என்ன தான் விக்கிக்கு குழந்தை பிடிக்காவிட்டாலும்
டாக்டர் அவனிடம் சொன்னது ஞாபகம் வந்தது அவங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு அதுனால அவங்கள எந்த காரணம் கொண்டும் ஆப்செட் ஆக்கிடாதிங்க என்று டாக்டர் சொன்னது நினைவுக்கு வர சுவாதியை பார்த்தான் ,ஐ ஆம் சாரி சுவாதி நீ கர்ப்பமா இருக்கிறது தெரியாம நான் சிகெரட் அடிச்சுட்டேன் இனி மேல நான் வீட்ல சிகெரட் அடிக்கவே மாட்டேன் என்று சொல்லி சிகரட்டை அணைத்து அதை வெளியே தூக்கி போட போனான் .
என்ன இது இவன் அப்படியே உல்டா ஆகிட்டான் என்ன ஆச்சு இவனுக்கு என்று சுவாதி நினைத்து கொண்டு இருந்தாள் .பின் உள்ள வந்த விக்கி சுவாதி ஐ அம் வெறி வெரி சாரி ரெண்டு நாள் ட்ராவால் அப்புறம் மீட்டிங் அப்புறம் வொர்க் டென்சன் இதுனால உன்னையே கண்டபடி திட்டிட்டேன் ஐ அம் சாரி இனி மேல் நான் வீட்ல எப்பயும் சிகெரட் குடிக்க மாட்டேன் ஓகே வா என்றான் .
ஐயோ ரொம்ப நைஸ் பாயா மாறுரானே எதாச்சும் சொல்லி சண்ட போடு என்று மனதில் சுவாதி நினைக்க ஆனால் வெளியில் அவனை திட்ட வாய் வார்த்தைகள் வர வில்லை .ஓகே ஓகே பரவல நானும் கொஞ்சம் ஓவராத்தான் கத்திட்டேன் of course இது உன் வீடு நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம் எப்படி வேணும்னாலும் இருக்கலாம் .பட் கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்றாள் .சுயர் ஓகே குட் நைட் என்று மீண்டும் குனிந்தாவரே சொல்லி விட்டு ரூமிற்குள் போனான்
whats wrong with me என்று இருவரும் அவரவர் ரூமில் உக்காந்து கொண்டு அவர்களயே திட்டி கொண்டனர் .ஏன் விக்கி கோப பட மாட்டிங்குறான் ஒரு வேல டாக்டர் சொன்னத கேட்டு பயந்து போயி திட்டாம இருக்கானா இல்ல வழக்கம் போல பொண்ணுகள போட ஆரம்பிச்சுட்டான் .ஓகே என்ன பண்ணாலும் எங்கு இருந்தாலும் வாழ்க அவன் என்று நினைத்து கொண்டு தூங்கினால் .
விக்கி வழக்கம் போல பல குழப்பங்களுக்கு இடையில் தூங்கமால் அரை குறை தூக்கதை போட்டான் .
ஓரிரு நாள் கழித்து வார இறுதியில் டேவிட்டுக்கு ஓரளவு குணமான பின் இருவர் மட்டும் தனியாக ஒரு பாருக்கு போனார்கள் .அப்பா ரொம்ப மாசம் கழிச்சு இன்னைக்கு தாண்டா பாருக்கே வரேன் என்றான் டேவிட் .என்னடா சொல்ற என்றான் விக்கி .ஆமாடா உன் கூட சண்ட போட்டதுக்கு அப்புறம் நான் பாருக்கே வரல என்றான் டேவிட் .ஏண்டா என்ன ஆச்சு என்றான் விக்கி .முதல பார்ல குடிக்க ஒரு நல்ல கம்பினியன் கிடைக்கல என்றான் .