ஏன் அக்கா உங்களுக்கு எப்பாயச்சும் உங்க வீட்டுகாரார் உங்கள திட்டாம இருந்தா எப்படி இருக்கும் என சுவாதி கேட்டாள் .ஒ அந்த பீலிங்க கேட்குறியா அவங்க நம்மள கொஞ்சாம இருந்தா கூட ஒன்னும் தெரியாது
ஆனா ஒரு நாள் நம்மள திட்டாம அமைதியா இருந்தா அந்த நாளே ஏதோ ஒன்னு குறையுற மாதிரி இருக்கும் என்றாள் அஞ்சலி .உடனே சுவாதி ஆமாக்கா அதே தான் அக்கா அவன் இப்ப எல்லாம் என்னையே திட்டவே மாட்டிங்குறான் அது ஒரு மாதிரி இருக்கு
அட்லிஸ்ட் கோபம் ஆச்சும் படுவான் இப்ப அதுவும் பட மாட்டிங்குறான் எப்ப அவன் என்னைய திட்டுவான்னு ஏக்கமா இருக்கு என்றாள் சுவாதி .அப்புறம் என்ன பண்றான் என்று அவள் சொல்வதை ரசித்து கொண்டே கேட்டாள் அஞ்சலி .தெரியல திட்டவே மாட்டிங்குறான் ரொம்ப பிரண்ட்லியா பேசுறான் அண்ட் சில நேரத்துல என்னைய பாத்தா உடனே பேச மாட்டின்கிறான் அப்படியே கொஞ்ச நேரம் கம்முனு இருக்கான் என் முகத்தையே பாத்து கிட்டு இருக்கான் .எனக்கும் அவன பாத்தா என்னைய அறியாம என் வாய் சிரிக்குது சந்தோசத்துல ,
அதாவது உன்னையே பாத்து அவன் ஜொள்ளு வடிக்கிரான்னு அவன பாத்து நீ வழியிற சரி சொல்லு என்றாள் அஞ்சலி .அப்படியா அக்கா அவன் என்னைய பாத்து நிஜமாவே வழியிரனா என்றாள் மெல்ல ஒரு புன்னகையோடு சுவாதி கேட்க .அட ஆமாடி மேல சொல்லு என்றாள் அஞ்சலி .சொல்றதுக்கு என்ன இருக்கு இனி I think I am Love With VIKI என்று சொல்லி விட்டு அப்படியே ஒரு சின்ன வருத்ததோடு தலையை குனிந்தாள் .அது நல்ல விசயம் தாண்டி அத ஏன் வருத்ததோடு சொல்ற என்று கேட்டாள் அஞ்சலி .
அது வந்து நான் அவன முழுக்கவே லவ் பண்ணிருவநேனோ பயமா இருக்கு என்றாள் சுவாதி .ஏண்டி அதுல என்ன பயம் என்று அஞ்சலி கேட்க அது வந்து வந்து என்று சொல்ல முடியாமல் அஞ்சலியின் தோளில் சாய்ந்து அழுதாள் .ஏண்டி அழுகுர விக்கி பொம்பள பொறுக்கியா இருக்கிரதாலையா என கேட்டாள் ,இல்ல அக்கா அது ஒரு மேட்டரே இல்ல சொல்லபோனா விக்கி இப்ப ரொம்ப திருந்திட்டான் .எனக்கு தெரிஞ்சு அவன் இப்பகுள்ள எந்த பொன்னுகிட்டயும் போன மாதிரி தெரியல அப்படியே போயி இருந்தாலும் அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல .
அப்புறம் என்னதான்டி உன் கவலை என்றாள் அஞ்சலி .அதாவது விக்கிய நான் இழக்க விரும்பல அக்கா என்று சொல்லி மேலும் குலுங்கி குலுங்கி அழுதாள் .அப்புறம் என்னடி அவனுக்கும் உன்னையே பிடிச்சு இருக்கு உனக்கும் அவன பிடிச்சு இருக்கு அல்ரெடி ரெண்டு பேர் குழந்தையும் வளருது அப்புறம் என்ன குழந்தையோட சந்தோசமா கல்யாணம் பண்ணிகொங்க எந்த குழந்தைக்கும் கிடைக்காத பாக்கியம் அவங்க அப்பா அம்மா கல்யாண போட்டோல கூட இருக்க போற பாக்கியம் உன் குழந்தைக்கு கிடைக்க போகுது என்னடா மவனே பெரியம்மா சொல்றது சரிதானே என்று வயற்றை தொட்டு அஞ்சலி கேட்க
சுவாதி அதை கேட்டு மெல்ல சிரித்தாள் .சிரித்தும் அழுதும் கொண்டே சொன்னாள் கேட்க நினைச்சு பாக்க நல்லாத்தான் இருக்கு ஆனா இதலாம் நடக்குனுமே என்றாள் சுவாதி .முதல கண்ண தொடடடி முண்ட கண்ணி என்று அவள் கண்ணீரை அஞ்சலி துடைத்து விட்டு கேட்டாள் ஏன் நடக்காது உனக்கு சொல்ல பயமா இருந்தா சொல்லு நானே நீ விரும்புறத அவன் கிட்ட சொல்றேன் என்றாள் அஞ்சலி .
இல்லக்கா வேணாம் என்றாள் ,ஏண்டி வேணாம் என கேட்டாள் சுவாதி .இல்ல இது சரிபட்டு வராது என்றாள் சுவாதி .எதுக்குடி சரியா வராது என்றாள் அஞ்சலி .இல்லக்கா வேணாம் என்று மறுபடியும் சுவாதி சொல்ல அஞ்சலி கடுப்பாகி இப்ப என்ன தாண்டி சொல்ல வர என்றாள் அஞ்சலி .
ஏன்னா நான் ஒரு ராசி இல்லாதாவ என்று கத்தினாள் சுவாதி .அதை கேட்டு அஞ்சலி சிரித்தாள் அடீ போடி நான் கூட ஏதோ பெருசா சொல்ல போறேன்னு பயந்தா போயும் போயும் ராசிய போயி ஒரு காரணமா சொல்ற என்னைய கூடதான் இப்ப வரைக்கும் என் மாமியார் ராசி இல்லாதாவ விளங்காதவ அப்படின்னு சொல்றாங்க நான்லாம் அத இந்த காதுல வாங்கி அந்த காது வழியா விட்ருவேன் .போயும் போய் ராசிக்கு போயி பயப்புடிரியே நீ எல்லாம் என்ன மார்டன் காலத்து பொண்ணு என்று அஞ்சலி கிண்டல் அடித்து சிரிக்க
அக்கா நான் ஒரு கொலைகாரி என்றாள் சுவாதி .சிரித்து கொண்டு இருந்த அஞ்சலி சிரிப்பை நிப்பாட்டி விட்டு என்னது என்றாள் ,சுவாதி மெல்ல சொன்னாள் நான் ஒரு கொலைகாரி …..
நான் ஒரு கொலைகாரி என்று சுவாதி சொல்ல அஞ்சலி அதிர்ச்சி ஆனாள் .என்னடி சொல்ற யாரடி கொன்ன என்று அதிர்ச்சியோடு கேட்டாள் அஞ்சலி .அக்கா நான் ஒரு ராசி இல்லாதாவ சின்ன பிள்ளைல இருந்து நான் யார் மேலயாச்சும் பாசம் வச்சு நேசிச்சேனா அவங்க எல்லாம் என்னைய விட்டு பிரிஞ்சுருறாங்க
சின்ன வயுசல என் அப்பா அம்மா ரெண்டு பேரையும் பிடிக்கும் .அவங்க என்னைய விட்டு பிரிஞ்சுட்டாங்க அப்புறம் என் பாட்டி கூட போயி இருந்தேன் அவங்க என்னைய விட்டு மட்டும் இல்ல இந்த உலகத்த விட்டே போயிட்டாங்க
என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே ஒ இத தான் கொலை பண்ணேன்னு சொல்றியா உங்க பாட்டிக்கு வயசு ஆகிடுச்சு அதுனால போயி சேந்துட்டாங்க அது என்னமோ உன் ராசியல இறந்ததா சொல்ற நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சேன் என்றாள் அஞ்சலி .
இல்லக்கா நான் நிஜமாவே ஒரு கொலை பண்ணி இருக்கேன் என்றாள் .யாரடி கொலை பண்ண உங்க பாட்டியாவ என்றாள் அஞ்சலி . இல்ல இன்னும் சொல்ல போனா நான் ஒரு கொலை இல்ல ரெண்டு கொலை பண்ணி இருக்கேன் ரெண்டு உயிரை கொன்னு இருக்கேன் என்று சொல்லி கொண்டு அழுதாள் ,கதறி கதறி அழுதாள் .அஞ்சலி அவளை சமாதான படுத்தி என் கண்ணுல அழுகாம விசயத்த சொல்லு
அப்ப தான் அதுல இருந்து தப்பிக்க எதுவும் வழி இருக்கான்னு பாக்க முடியும் என்றாள் அஞ்சலி .அதுல இருந்து என்னைக்கும் தப்பிக்க முடியாது என்று மெல்ல சொன்னாள் .யே முதல நடந்தத சொல்லுமா யார்தான் கொல பண்ண என்று அஞ்சலி கேட்க
ஸ்டெல்லா என்றாள் சுவாதி .
அது யாருடி என்று அஞ்சலி கேட்டாள் .என் பிரண்டு என்றாள் சுவாதி .ஒ நாபகம் வந்துருச்சு எனக்கு முன்னாடி உன் பெஸ்ட் பிரண்ட் உன் காலேஜ் பிரண்ட் என்று அஞ்சலி சொல்ல இல்லக்கா அவன் என் ஸ்கூல் பிரண்டு என்றாள் சுவாதி .
சரி என்னதான் ஆச்சு என்றாள் அஞ்சலி .அவளும் நானும் க்ளோஸ் பிரண்ட்ஸ் ரெண்டு பேரும் ப்ளஸ் ஒன் படிக்கும் போது அவ சுரேஷ்ன்னு ஒரு பையன்ன லவ் பண்ணா ரெண்டு பெரும் நெருங்கி பழகுநதுல ஸ்டெல்லா கர்ப்ப்மாகிட்டா அத என் கிட்ட மட்டும் தான் சொன்னா முதல எங்க ரெண்டு பேருக்கும் என்ன பண்றதுன்னு தெரியல சுரேஷ் கிட்ட கேட்டதுக்கு கருவ கலைச்சுடுவோம் இல்லாட்டி நம்ம அப்பா அம்மா நம்மள கொன்னுடுவாங்கன்னு சொன்னான் ,