கேள்வியாக நிமிர்ந்த சத்யன் “என்ன சொல்லனும் ஆதி?” என கேட்க…. “அது வேற ஒன்னுமில்லை…. நீ வீட்டை விட்டுப் போகச் சொன்னதும் பவானி ஆன்ட்டி கோபத்தோட தன் மகளை கூட்டிக்கிட்டு இதுபோன்று இன்னும் பல குறைபாடுகள் உள்ள குழந்தைகளை பராமரிக்கும் ஒரு ஆசிரமத்தில் போய் சேர்ந்துட்டாங்க…. கேள்விப்பட்டு போய் நான் கூப்பிட்டதும் தனக்குப் பிறகு தன் மகளைப் பார்த்துக்க யாருமில்லாததால் தான் இந்த மடத்துல வந்து சேர்ந்தேன்னு சொல்லி வரமுடியாதுனு மறுத்துட்டாங்க…
நான் நிறையப் பேசி சமாதானம் பண்ணி, ‘சரி இனி மான்சிக்கு நான் இருக்கேன்’னு சொல்லி சட்டபூர்வமா மான்சியை நான் அடாப்ட் பண்ண முயற்சி செய்தேன்… கல்யாணம் ஆகாதவன்றதால் என்னால அடாப்ட் பண்ண முடியலை… அப்புறம் என் அப்பா அம்மாவை முன் வச்சு ஆறு மாச காலம் அவகாசம் வாங்கி மான்சியை அடாப்ட் பண்ணிருக்கேன்…
இப்போ அந்த அவகாசம் முடியறதுக்குள்ள நான் திருமணம் செய்தாகனும் சத்யா… இல்லேன்னா என்னோட அடாப்ட் செல்லாமல் போய்விடும்” என்று விளக்கமாக ஆதி கூறினான்… திகைத்துப் போய் அமர்ந்திருந்தான் சத்யன்…. இவ்வளவு சாதித்த ஆதி அந்த ஆதிமூலமாகவே தெரிந்தான்… என் மனைவியைக் காப்பாற்றி கவனித்துக் கொள்ள இத்தனை சிரமமெடுத்திருக்கானே… சத்யனுக்கு வார்த்தைகள் வரவில்லை… கண்கலங்க அப்படியே அமர்ந்திருந்தான்….
“இப்போ மான்சி என் வளர்ப்பு மகள்… பவானி ஆன்ட்டி இருக்கும் வரை மான்சியை பார்த்துக்கலாம்… அதுக்கப்புறம் நானும் என் மனைவியும் தான் பார்த்துக்கனும்…. பவானி ஆன்ட்டியோட சொத்துக்களை அவங்க என்னவேணாலும் செய்துக்கலாம்… ஆனா மான்சி சம்மந்தப்பட்ட அனைத்திலும் என் முடிவே இறுதியானது” என்று ஆதி கூற சத்யன் அமைதியாக இருந்தான்…. அமைதியாக இருந்தவனைத் திரும்பிப் பார்த்த ஆதி “தப்பா நினைக்காதே சத்யா….
உன்மேல் நம்பிக்கையில்லாம இப்படி செய்யலை…. என் உயிர் நண்பனாக இருந்தாலும் பல சமயங்களில் நீ ஒரு சராசரி மனிதன் தான் சத்யா… என்னைக்காவது மான்சியை நீ மறுக்கும் நிலை வந்தால்? வராது தான்… நீ மறுபடியும் அப்படி செய்ய மாட்ட தான்… ஆனாலும் மான்சியோட இறுதி காலம் வரைக்கும் அவளுக்கு ஒரு சப்போர்ட் இருக்கனும்னு தோனுச்சு… அதனால்தான் இப்படி செய்தேன்… ஒரு ஹஸ்பண்டாக அவள் மேல் உனக்கு சகல உரிமையும் உண்டுதான்… அதேபோல் ஒரு தகப்பனாக எனக்கும் அவள் மீது உன்னைவிட அதிகமாக சட்டபூர்வமான உரிமை உண்டு சத்யா” என்று சத்யனுக்கு அறிவுறுத்தினான்….
நிறையப் புரிந்தது… அன்று மான்சியை நிர்கதியாக வெளியே அனுப்பியதன் தாக்கம் தான் இது என தெளிவாகப் புரிந்தது.. நண்பன் மீது கோபப்பட முடியவில்லை… அவன் மனதில் ஏதோ ஒரு வகையில் தாம் சறுக்கிவிட்டோம் என்று தெளிவானது… மான்சியுடன் சேர்ந்து வாழ்ந்து தனது நம்பகத்தன்மையை உணர்த்தினால் மட்டுமே அந்த சறுக்கலைச் சரியாக்க முடியும் என்று எண்ணினான்…. “என்னைப் புரிஞ்சுக்கோ சத்யா… உனக்கு விரோதமா நான் எதையும் செய்யலை” என்று ஆதி மீண்டும் கூற.. சத்யன் அமைதியாக தலையசைத்து நண்பனின் கையைப் பற்றிக் கொண்டான்…..
ஆதிக்கு சந்தோஷமாக இருந்தது… “உன்னைப் பத்தி தெரியும் தான்… ஆனாலும் இதை நீ எப்படி எடுத்துக்குவியோன்னு மனசுக்குள்ள சின்ன பயம் இருந்தது சத்யா…. டாக்டர் செபாஸ்ட்டியனோட பலம் மட்டும் இல்லைன்னா என்னால இதை சாதிச்சிருக்கவே முடியாது….” என்றவன் அப்போது தான் ஞாபகம் வந்தவன் போல் “டாக்டர் இன்னைக்கு ஈவினிங் உன்னை பார்க்கனும்னு சொன்னார் சத்யா…. ஆபிஸ் முடிஞ்சதும் கால் பண்ணு… நாம ரெண்டு பேரும் போகலாம்” என்றான்…. சத்யன் சரியென்றதும் ஆதி தன் கடையில் இறங்கிக் கொள்ள இவன் தனது கம்பெனிக்குச் சென்றான்…. அன்று மாலை அலுவல் முடிந்ததும் வாசுகிக்கு கால் செய்து ஒரு க்ளையண்ட்டை மீட் பண்ண போவதாகவும்…
வர தாமதமாகும் என்று கூறிவிட்டு ஆதியின் கடைக்குச் சென்று அவனை அழைத்துக் கொண்டு செபாஸ்ட்டியன் க்ளீனிக்கிற்கு சென்றான்…. வெகுநேர காத்திருப்பிற்குப் பின் இருவரும் அழைக்கப்பட்டனர்… இவர்கள் உள்ளே நுழைந்ததுமே டாக்டர் எழுந்து வந்து சத்யனை அணைத்து வரவேற்றார்…. “ஆதி சொன்னார் சத்யன்… ரொம்ப சந்தோஷமாயிருக்கு” என்றார்….. “நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் டாக்டர்.. என் வாழ்க்கையையே திருப்பிக் கொடுத்திருக்கீங்க….” என்ற சத்யன் உண்ர்ச்சிப் பெருக்கோடு கைக்கூப்பினான்…. கூப்பிய அவனது கைகளைப் பற்றிய டாக்டர் “எல்லாம் ஆதியோட ஏற்பாடுகள் தான் சத்யன்… இந்த ஆறு மாசத்தில் மான்சிக்காக அவர் செலவு செய்த நேரங்கள் தான் அதிகம்” என்றார்…சங்கடமாகப் பார்த்த ஆதி “அப்படிலாம் எதுவுமில்லை…. சத்யனுக்கு நான் கடமைப்பட்டவன் டாக்டர்… அவனோட அம்மா அப்பா இருக்கும் போதும் சரி….
அதன்பிறகு அக்கா கூட இருக்கும் போதும் சரி… எனக்கும் சத்யனுக்கும் வித்தியாசம் இல்லாமல் தான் பார்த்தாங்க… அந்த பாசத்துக்கு முன்னாடி நான் செய்ததெல்லாம் ரொம்ப குறைவு டாக்டர்” என்றான்…. சத்யன் கண்ணீருடன் ஆதியை அணைத்துக் கொண்டான்…. உணர்ச்சிப்பூர்வமான சில நிமிடங்களுக்குப் பிறகு “ஓகே சத்யன்…. இப்போ மான்சி பத்தின உங்களோட முடிவுகளையும்…ஆதரவையும் தெரிஞ்சுக்க விரும்புறேன்” என்று டாக்டர் கேட்க….
“ம்… மான்சிக்கு ஒரு தாயாவும் இருந்திருக்கலாம்னு இப்போ நான் வேதனைப்படுகிறேன் சார்…. இனி அவளை ஒரு நிமிஷம் கூட பிரிய மாட்டேன்… அக்காவுக்கு அடுத்த மாசம் டெலிவரி டாக்டர்.. அதன் பிறகு என்னோட வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போய்டலாம்னு இருக்கேன்….” என்றான்… “குட் சத்யன்,,
மான்சியை எப்படிப் பார்த்துக்கனும்னு இனி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை… உங்களுக்கே சகலமுமே புரிஞ்சிருக்கும்… இப்போ நாம பேச வேண்டியது ஒரே விஷயம் தான்…. அதாவது இனி உங்க வாழ்க்கை முறை? ஐ மீன் செக்ஸ் லைப்?” என்று டாக்டர் கேட்க….. ஒப்புதலாய் தலையசைத்த சத்யன் “எனக்கு இப்போ செக்ஸ் ரெண்டாம்பட்சம் தான் டாக்டர்….
குழந்தையா இருக்கிற மான்சிக்கு ஒரு தாயாக இருந்துப் பார்த்துக்கிறதுன்னு முடிவு பண்ணிருக்கேன்” என்றான் சத்யன்… “நோ நோ…. இங்கதான் நீங்க தப்புப் பண்றீங்க சத்யன்…. மான்சி மனதளவில் தான் குழந்தை… உடலளவில் அவள் முழுமையான பெண்….
பல வருஷம் வளர்த்த தாய்க்கு கொடுத்த ஸ்தானத்தை ஒரு வாரமே வாழ்ந்த உங்களுக்குக் கொடுத்திருக்கான்னா? அவளுக்கு உங்களுடைய உறவு முறைப் பிடிச்சிருக்கு…. அதில் காதலை உணர்ந்திருக்கா சத்யன்… அவளால் அதை வெளிகாட்டத் தெரியலை அவ்வளவு தான்”…
ஸ