போனை பார்த்து கொண்டே சொன்னான் இவ ஏன் இப்ப போயி எனக்கு போன் போடுறா இவ இன்னும் கனடா போகலையா என்றான் . யாருடா எனக் கேட்டாள் வள்ளி .அதான் என் வாழ்கைய கெடுத்தவ என்றான் .யாருடா உன் வாழ்கைய கெடுத்தவ என்றாள் வள்ளி . அதான் சுவாதி என்றான் .
சரி எடுத்து பேசுடா என்றாள் வள்ளி .நான் பேசமாட்டேன் என்று போனை எடுக்காமல் இருந்தான் .அது அடித்து கொண்டே இருந்தது. டேய் போன எடுறா எத ஆச்சும் சிரியஸா இருக்க போகுது என்றாள் வள்ளி .அவன் நான் எடுக்கவே மாட்டேன் என்றான் . நீ சொன்ன கேக்க மாட்ட என்று அடித்து கொண்டு இருந்த போனை வள்ளி எடுத்து ஆன் செய்து காதில் வைத்தாள் . ஹலோ விக்னேஷ் விக்கி இருக்கியா என்று மறுமுனையில் சுவாதி பேசினாள் .இவன் பதில் எதுவும் சொல்லமால் ம்ம் என்றும் மட்டும் சொன்னான் .
விக்கி ப்ளிஸ் எனக்காக grs ஹாஸ்பிட்டல் வரைக்கும் வரியா ப்ளிஸ் கொஞ்சம் சிரியஸ் ப்ளிஸ் எனக்காக இந்த ஒரு வட்டம் மட்டும் ஹெல்ப் பண்ணு என்றாள் . இவன் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான் .பின் வள்ளியிடம் ஹாஸ்பிட்டல் இருக்கேன் ஏதோ சிரியஸ்ன்னு சொல்றா என்றான் . சீக்கிரம் போயி பாருடா என்றாள் .வள்ளி .அவன் சரி என்று சொல்லிவிட்டு காரை எடுத்து கொண்டு சுவாதி சொன்ன ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தான் .விக்கி சுவாதி சொன்ன ஆஸ்பத்திரிக்கு போனான் .
போன உடன் அவளை பார்த்து என்ன சிரியஸ் யாருக்கும் உனக்கு தெரிஞ்சவங்களுக்கு அடிபட்டுருச்சா என்றான் விக்கி . சுவாதி சிறிது அமைதியாக இருந்து விட்டு விக்கி கொஞ்சம் அங்கிட்டு போயி தனியா பேசுவோமா என்றாள் சுவாதி .இருவரும் தனியாக சென்றனர் .என்ன விஷயம் சுவாதி எதுவும் பணம் கிணம் வேணுமா என்றான் .விக்கி நான் சொல்ல போறத கவனமாக் கேளு எனக்கு கொஞ்ச நாளாவே நாள் தள்ளி போய் கிட்டு இருக்கு என்றாள் மெல்ல புரியல எனக்கு என்றான் விக்கி .
விக்கி நான் தெளிவாஉனக்கு புரியும் படி சொல்றேன் நான் கர்ப்பமா இருக்கேன்னு நினைக்கிறேன் அதுக்கு நீதான் காரணம்னு நினைக்கேறேன் . அதை கேட்டு விக்கி அதிர்ச்சி ஆனான் .ஒரு நிமிஷம் எனக்கும் ஒன்னும் புரியல நீ நிஜமாவே கர்ப்பமா இருக்கியா என்றான் .நிச்சயாமா தெரியல ஆனா நானா own testing ரெண்டு மூனு தடவ பண்ணி பாத்துட்டேன் .பாஸ்டிவ் மாதிரிதான் இருக்கு அதான் கன்பார்ம் பண்ண ஆஸ்பத்திரிக்கு வந்தேன் .ஆனா அவங்க என்னையே புருஷன் கூட வர சொன்னங்க அதான் உன்னையே கூப்புட்டென் .
எனக்கு சுத்தமா ஒன்னும் விளங்கல அப்படியே நீ கர்ப்பமா இருந்தாலும் அதுக்கு நான் எப்படி காரணம் ஆக முடியும் நீ டேவிட் கூடயும் தான் செக்ஸ் வச்சுருக்க ஒரு வேல அவன் காரணமா இருக்கலமல என்றான் . டேவிட் கூட நான் செக்ஸ் வச்சு ஒரு வருஷம் ஆச்சு ,இப்ப recent time த்துல நான் உன் கூட மட்டும் தான் செக்ஸ் வச்சுருக்கேன் .அதனால இதுக்கு நீதான் காரணமா இருக்க முடியும் என்றாள் .
இருவருமே அமைதியாக இருந்தார்கள் .பின் விக்கி கேட்டான் இப்ப என்னயே என்ன பண்ண சொல்ற உன் கர்ப்பத்துக்கு நான் காரணம் அதனால உன்னையே கல்யாணம் பண்ண சொல்றியா என்று வெறுப்போடு கேட்டான் . விக்கி நான் உன்ன கல்யாணம்லாம் பண்ண சொல்லி கேக்கல .ஒரு பத்து நிமிஷம் டாக்டர் கிட்ட வந்து என் புருஷன் மாதிரி நடி .எனக்கு முதல கன்பார்ம் இல்லையானு பாத்து கிட்டு நம்ம அப்புறம் பேசுவோம் என்றாள் சுவாதி .
வெயிட் வெயிட் என்னால உன் புருசனாலாம் நடிக்க முடியாது என்றான் .ஏன் என்றாள் சுவாதி .ஏன்னு கேட்டா ஒரு வேலை நீ இத சாக்கு வச்சு என்னையே கல்யாணம் பண்ணிகொன்னு சொன்னேனா நான் என்ன பண்ண என்றான் விக்கி . விக்கி ப்ளிஸ் உன்னயே என் புருசனா இருக்க சொல்லல என் புருசனா நடிக்கத்தான் சொல்றேன் .அப்புறம் இந்த கல்யாணம் கண்றாவி பத்தி எல்லாம் நாம அப்புறம் பேசுவோம் என்றாள் சுவாதி .
நீ என்ன சொன்னாலும் என்னால உன் புருசனா நடிக்க முடியாது என்றான் .ப்ளிஸ் விக்கி இந்த ஒரு தடவ என்று அவள் கெஞ்ச அவன் முடியாது என்று சொல்ல இருவரும் வாக்கு வாதத்தில் இடுபட்டனர் .அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது மிசஸ் சுவாதி உங்கள டாக்டர் கூப்புடுராங்க என்று நர்ஸ் அழைத்தாள் என்னது மிசஸ் சுவாதியா என்று அவன் கேக்க விக்கி இந்த ஒருவாட்டி மட்டும் ப்ளிஸ் என்றாள் .
அவனும் அவள் கெஞ்சுவதை பார்த்து புரிந்து கொண்டு சரி வா போகலாம் ஆனா இதுக்கு அப்புறம் என்னையே கூப்பிட கூடாது என்றான் .அவளும் சரி என்றாள் . இருவரும் டாக்டர் ரூமுக்குள் போனார்கள் .உக்காருங்க என்றார் டாக்டர்.விக்கியை பார்த்து நீங்கதான் இவங்களோட ஹஸ்பண்டா என்று கேட்டார்கள் .சுவாதி அவன் கையை பிடித்து கொண்டு கண்களால் கெஞ்சுவது போல இருந்தாள் .அதை புரிந்து கொண்ட விக்கி ஆமா மேடம் நாந்தான் என்று மட்டும் சொன்னான் . உங்க பேர் என்ன என்றார் டாக்டர் . விக்கி சாரி விக்னேஷ் மேடம் என்றான் .
போனவட்டம் ஏன் நீங்க உங்க வோயிப் கூட வரல எனக் கேட்டார் .விக்கி அவர்கள் பேசுவதை கவனிக்கமால் எங்கயோ பார்த்து கொண்டு இருந்தான் .ஹலோ மிஸ்டர் உங்களாதன் ஏன் வரல என்றார் டாக்டர். உடனே விக்கி தடுமாறி கொண்டு அது கொஞ்சம் பிஸியா இருந்தேன் மேடம் அதான் என்றான் .ம்ம் எல்லா புருசன்மார்களும் சொல்ற சாக்கு என்று அவர் ரிப்போர்ட்டை பார்த்து கொண்டே சொல்லி சிரித்தார் .
அப்புறம் ரிப்போர்ட்டை மேசையில் வைத்து விட்டு அப்புறம் மிஸ்டர் அண்ட் மிசஸ் விக்னேஷ் உங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் நீங்க ரெண்டு பேரும் பேரெண்ட்ஸ் ஆக போறீங்க என்று சொல்லி அவர்களை பார்த்து மகிழ்ச்சியோடு சிரித்தார் . இருவரும் பேரெண்ட்ஸ் என்ற வார்த்தையால் முழுமையாக புரியாமால் இருக்க அதை பார்த்து புரிந்து கொண்ட டாக்டர் ஐ மீன் சுவாதி நீ கன்சீவ் ஆகிருக்க என்றார் .
விக்கி அதிர்ச்சியில் அப்படியே உக்காந்து இருக்க சுவாதி ,மட்டும் ஏதோ பேருக்கு சிரித்தாள் .அவன் அப்படியே இருப்பதை பார்த்த டாக்டர் என்ன சுவாதி உன் ஹஸ்பண்ட் ஏன் இப்படி இருக்காரு .அவருக்கு இன்ப அதிர்ச்சி டாக்டர் என்று சொல்லி சமாளித்தாள் .