மான்சிக்காக – பாகம் 54 – மான்சி கதைகள்

img-20161101-wa0289இவர்களை ஆசையாகப் பார்த்தபடி அப்படியே அமர்ந்திருந்தனர் தேவனும் செல்வியும்… தேவன் செல்வியைப் பார்த்து என்ன நானும் ஊட்டிவிடவா என்பது போல் கண்ணால் ஜாடை செய்ய… செல்வி அளவுகடந்த வெட்கத்தில் தலைகுனிந்தாள்..

வெடாசாக பேசும் செல்வியைப் பார்த்தே பழகிய தேவனுக்கு இந்த வெக்கப்படும் செல்வி புதிதாக இருந்தாள்… ஆசையோடு அள்ளிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது தேவனுக்கு… எல்லோரும் சாப்பிட்டதும் “ நான் வெளியே வராண்டாவில் போய் படுத்துக்கிறேன் மாமா” என்று சொல்லிவிட்டு வெளியேப் போனான் வீரேன்..கட்டிலின் அந்த பக்கம் செல்வியும் இந்த பக்கம் சத்யனும் படுத்துக்கொள்ள.. தேவன் மற்றொரு கட்டிலில் படுத்துக்கொண்டான்… சற்றுநேரத்தில் மான்சி “ மாமா தூங்கிட்டயா?” என்று கேட்ட மறுவிநாடி எழுந்து அவளருகே போய்… “ என்ன வேனும் மான்சி?” என்றான்.. “ சும்மா தான் மாமா… நான் தூங்குற வரைக்கும் என்கூடவே இரு மாமா?” என்றாள் மான்சி …

அவள் குரல் சத்யன் இதயத்தை கசிய வைத்தது “ நீ தூங்கிட்டேன்னு நெனைச்சேன்டா” என்றபடி ஒரு சேரை இழுத்து அவளருகில் போட்டு கட்டிலில் கவிழ்ந்து அவள் முகத்தோடு தன் முகத்தை இழைத்து.. கையைப்பற்றி கன்னத்தில் வைத்துக்கொண்டான்… இருவரின் கண்களும் நேருக்குநேர் இமைக்காமல் பார்த்துக்கொண்டது… சத்யனின் விரல்கள் மான்சியின் நெற்றியை இதமாக வருடியது..

தன் கணவனின் முகத்தைப் பார்த்துக்கொண்டே விழிகளை மூடினாள் மான்சி… அவள் தூங்கியப் பிறகும் கூட சத்யனுக்கு அங்கிருந் எழுந்திருக்க மன ம்வரவில்லை… உறங்கிய பின்னும் அவள் நெற்றியை வருடிக்கொண்டே இருந்தான்… குழந்தையாய் உறங்கும் மனைவியைப் பார்த்தபடியே அவனும் கண்மூடினான்… லேசாக தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த தேவன்.. இவர்களைப் பார்த்துவிட்டு செல்வி ஏன் அழுதாள் என்று புரிந்தது..

அவனுக்குமே இப்போது கண்கலங்கியது.. இவர்களைப் போலவே செல்வியுடன் வாழவேண்டும் என்று நினைத்தான்… வெளியே சென்ற வீரேன் நேராக ஐசியூவுக்குத் தான் போனான்… அங்கிருந்த நர்ஸ்க்கு வீரேன் ஜோயலுடன் விடிய விடிய பேசியது ஞாபகம் வர புன்னகையுடன் அவனை அனுமதித்தாள்… வீரேன் நேராக ஜோயலின் கேபினுக்குத் தான் போனான்..அப்போதுதான் ரவுண்ட்ஸ் முடித்து வந்து அமர்ந்து நோயாளிகளின் ரிப்போர்ட்டை எழுதிக்கொண்டிருந்தாள் ஜோயல்…. கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவள் வீரேனைப் பார்த்ததும் மலர்ந்த முகத்தை மறுபடியும் ரிப்போர்ட்டை படிப்பது போல் கவிழ்த்துக்கொண்டு

“ என்ன வேனும்?” என்றாள்.. அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே நுழைந்த வீரேன்.. நீதான் வேனும் என்று வாய்வரை வந்த வார்த்தையை விழுங்கிவிட்டு “ தூக்கம் வரலை அதான் உங்ககூட பேசிகிட்டு இருக்கலாம்னு வந்தேன்” என்றான் ஜோயல் ரிப்போர்ட்டை படிக்கும் அதே பாவனையில் “ உங்களுக்கும் எனக்கும் பேசுறதுக்கு என்ன இருக்கு?” என்றாள்..

See also  பொம்மலாட்டம் - பாகம் 14 - மான்சி தொடர் கதைகள்

“ அப்போ நேத்து மட்டும் என்ன இருந்துச்சு?” வீரேன் அவளை கூர்மையுடன் பார்த்துக் கேட்டான்… இதற்கு ஜோயலிடம் பதில் இல்லை… வீரேன் அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு “ நெத்திக் காயம் ரொம்ப வலிக்குது… இன்னிக்கு தலைக்கு குளிச்சேன்.. அதுல தண்ணிப்பட்டு சீல் பிடிச்சிருக்கோமோ?” என்று கூறிய அடுத்த நொடி சட்டென்று நிமிர்ந்த ஜோயல்…“ உங்களுக்கென்ன புத்தி மாறிப்போச்சா? நெற்றியில் காயம் இருக்கும் போது யாராவது தலைக்கு குளிப்பாங்களா?” என்று உரிமையுடன் கண்டித்தபடி எழுந்து அவனருகே வந்து நெற்றி காயத்தை அழுத்திப் பார்த்துவிட்டு வெளியேப் போனாள்.சற்றுநேரத்தில் காயத்தை சுத்தப்படுத்தும் மருந்துகளோடு வந்து மேசையில் வைத்துவிட்டு அவன் முகத்தை நிமிர்த்த…

வீரேன் ஒளிவுமறைவின்றி நேரடியாக அவள் கண்களை எதிர்கொண்டான்.. ஜோயலால் ஒரு மருத்துவராய் செயல்பட முடியாமல் தடுமாற வைத்தது அவன் பார்வை.. அவன் கண்களை தவிர்த்து… காயத்தை மட்டும் பார்த்தாள்.. பழைய பிளாஸ்டரைப் பிய்த்தபோது… வீரேன் வலியால் “ ஸ்ஸ்ஸ்ஸ் அம்மா…” என்று முனங்க… அவன் முகத்தை தன் மார்போடு அணைத்துக்கொள்ள வேண்டும் என்று எழுந்த உணர்வை வெகு சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள் ஜோயல்..

பிளாஸ்ட்ரை எடுத்துவிட்டு தையலை அழுத்தினாள்.. லேசாக நீர் கசிந்தது.. “ என்ன இப்படி பண்ணி வச்சிருக்கீங்க?.. இன்னும் ஒரு நாள் விட்டால் செப்டிக் ஆகியிருக்கும்” என்று மெல்லிய குரலில் கடிந்தபடி மருந்தை தடவினாள் குனிந்து மருந்திட்ட அவள் முகத்துக்கும் அண்ணாந்து அவளுக்கு நெற்றியை காட்டிய வீரேன் முகத்துக்கும் சில அங்குல இடைவெளியே இருக்க… லஜ்ஜையின்றி அவள் முகத்தைப் பார்த்து ரசித்த வீரேன் “ என் தரப்பில் இருந்து யோசிச்சுப்பாருங்க என் நிலைமைப் புரியும்…எனக்கு கிடைச்ச தகவல்கள் எல்லாமே என் மாமாவுக்கு எதிரா இருந்தது.. என் தங்கச்சியை அவர் ஒதுக்கி வைக்கிறார் என்று எண்ணத்துல நான் அப்படி நடந்துக்கிட்டேன்… நான் பண்ணது தப்புதான்… அதுக்காக எல்லார் கால்லயும் விழுந்து மன்னிப்பு கேட்டுட்டேன்… தப்பு செய்தவன் மனசறிஞ்சு மன்னிப்பு கேட்கிறேன்… எனக்கு மன்னிப்பு கிடையாதா?” என்று உருக்கமாக வேண்டினான்..

பிளாஸ்டரை நெற்றியில் ஒட்டியபடி “ உங்களை மன்னிக்க நான் யாருங்க?” என்றவள் எல்லாவற்றையும் எடுத்து குப்பைகூடையில் போட்டுவிட்டு கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தாள்… அவள் மருந்திட்ட இடத்தை விரலால் வருடியபடி… “ உங்க ஆஸ்பிட்டல்க்கு வர்றவங்க எல்லார் கிட்டயும் இப்படித்தான் மொத்த குடும்பத்தையும் பத்தி விசாரிப்பீங்களா? அதுவும் விடிய விடிய? என் பிரச்சனையை கேட்ட உரிமையிருக்குன்னா…என்னை மன்னிக்கவும் உரிமையிருக்கு…. என் அப்பாக்கூட என்கிட்ட பேசலை.. அவர்கிட்ட கெஞ்சனும்னு எனக்கு தோனலை.. ஆனா உங்ககிட்ட மன்னிப்பை வேண்டி நிற்க்கிறேன்.. என்னை மன்னிக்க மாட்டீங்களா?” வீரேனின் குரல் ரொம்பவே இறங்கியிருந்தது…

See also  பொம்மலாட்டம் - பாகம் 24 - மான்சி தொடர் கதைகள்

மன்னிபாயா…!!!

உன் மனமிரங்கி

நீ ஒரு மேதை

நான் ஒரு பேதை

நீ தரும் சோதனை

நான் படும் வேதனை

போதும் போதும்

மன்னிப்பாயா…!!!

உன்மனமிரங்கி

Leave a Comment

error: read more !!