மான்சிக்காக – பாகம் 16 – மான்சி கதைகள்

mamjஇந்த ஒன்றரை மாதமாக ஜெயிலில் நான்கு சுவர்களுக்குள் கொசுக்கடியில் தூக்கம் வராமல் தவித்தவனுக்கு.. இயற்கை காற்றுடன் தனது கட்டிலில்ப் படுத்ததும் நிம்மதியான உறக்கம் வந்து அவன் கண்களை தழுவியது மறுநாள் காலை ராமைய்யா எழுப்பியதும் தான் எழுந்தான் சத்யன்…

எழுந்தவன் நன்றாக விடிந்துவிட்டதை அறிந்து “ இவ்வளவு நேரமா தூங்கினேன்” என்றபடி எழுந்தவன் காம்பவுண்ட் சுவற்றை ஒட்டி வேப்பமரத்தில் ஒரு குச்சியை ஒடித்து பற்களால் மென்றபடி தோட்டத்திற்கு போனான்… தோட்டத்தில் கிடந்த கல்லில் அமர்ந்து காலாட்டியபடி பிரஷ்ஷால் பல் தேய்த்துக்கொண்டிருந்த மான்சி சத்யனைப் பார்த்ததும் அதிர்ந்து போய் எழுந்துவிட்டாள்,



தாடிக்குள் ஒழிந்திருந்த தன் மாமன் முகத்தைப் பார்த்து கண்கள் குளமானது, ‘ ஜெயிலுக்குப் போனா இப்படியா ஆயிடுவாங்க?’ அய்யோ மாமா… நானே உன்னைய இப்படி ஆக்கிட்டேனே ’ என்று இதயம் கசிந்தது.. சத்யன் மான்சியை நேராக ஒரு பார்வை பார்த்தான். அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரின் அர்த்தம் புரியவில்லை அவனுக்கு.

“ என்னை இப்படி நாசம் பண்ணிட்டயே பாவி’ என்று கண்ணீர் விடுகிறாளா? மவுனமாக கிணற்றடிக்கு போனான்.. தோட்டத்து கோட்டை அடுப்பில் வெண்ணீர் கொதிக்க.. ஊர் நாவிதனை அழைத்து வந்தார் ராமைய்யா.. சத்யனுக்கு முடிவெட்டி முகச்சவரம் செய்யப்பட்டது… பஞ்சவர்ணம் மூன்று எண்ணை கூட்டி கலந்து எடுத்துவர செவலமுத்து வந்து சத்யனுக்கு குளிரக் குளிர எண்ணைத் தேய்த்து விட்டான்…

கல்லில் அமர்ந்திருந்த மான்சி எழுந்து உள்ளே போகவேயில்லை, வைத்துகண் எடுக்காமல் சத்யனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்,, சத்யன் அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்ததால், அவளைப் பார்க்கவில்லை, அவனின் பரந்த முதுகில் எண்ணையை வழிய விட்டு செவலையன் தேய்க்க.. அந்த எண்ணையில் தன் கன்னத்தை வைத்துத் தேய்த்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் மான்சியின் மனதில் ஓடியது, சத்யனின் கைலியை சுருட்டி தொடையிடுக்கில் வைத்துவிட்டு அவன் கால்களை மடக்கி வைத்து அதில் எண்ணையை ஊற்றி தூணுக்கு தடவுவது போல் செவலையன் தேய்க்க…



தேக்கு மரம் போன்ற சத்யன் காலில் இருந்த சுருள் சுருளான முடிகள் எண்ணையில் மின்னியது.. ‘ டேய் மாமா என்னை திரும்பி பாருடா?’ என்ற மான்சியின் கொதிப்பு அதிகமானது சத்யனின் இரண்டு கையையும் மடித்து குறுக்காக பின்னி கழுத்தை கட்டிக்கொள்ள வைத்துவிட்டு.. அவனுக்குப் பின்னால் வந்து தனது வலதுகால் முட்டியை சத்யனின் முதுகுத்தண்டிலன் நடுவே முட்டுக்கொடுத்து, பின்னியிருந்த கைகளை பற்றிக்கொண்டு தன் வலு மொத்தத்தையும் தேக்கி சத்யனை பின்புறமாக செவலையன் மடக்க..

சத்யனின் இரு தோள்களிலும் மொல மொலவென சொடக்கு விழுந்தது,, பிறகு சத்யனின் கையைப் பிரித்து கையை மேலே தூக்கிய செவலையன் நின்றபடி உருவி விட… “ இந்த ராஸ்கல் வேற எப்படி தேய்க்கிறான் பாரு?’ திடீரென்று செவலையன் மான்சிக்கு பரம விரோதியாகிப் போனான் “ பின்னாடி இருந்தவ என்னப் பண்றான்னு… திரும்பி பார்க்குதாப் பாரு பிசாசு’ என்மேல ஆசை இருந்தா தான பார்க்கும்?

See also  மான்சிக்காக - பாகம் 39 - மான்சி கதைகள்

நீ வாடா மாமா உனக்கு நான் வேடிக்கை காட்டுறேன்? என்று கொந்தளித்தது மான்சிக்கு அதன்பின் தோட்டத்துப் பாத்ரூமில் வெண்ணீரில் தலைமுழுகி விட்டு சத்யன் வந்தபோதும் மான்சி அங்கேயே அமர்ந்திருந்தாள்…



இவ ஏன் குளிக்கப் போகாம இங்கயே இருக்கா என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் அதை அவளிடம் கேட்காமலேயே உள்ளே போனான் சத்யன் ..

மான்சிக்கு ஆத்திரமாக வந்தது.. ‘ நான் உனக்காக இங்க உட்கார்ந்திருக்கேன் என்னைப் பார்க்காமலேயே போறியா? இவ்வளவு கர்வமா உனக்கு? ஆத்திரத்துடன் எழுந்து கை காலை உதறியபடி பக்கத்தில் இருந்த மரத்தில் கையால் குத்தினாள் “ அய்யோ அய்யோ வயித்துப்புளளக்காரி இப்படி கை கால உதறலாமா?” என்று அலறியபடியே ஓடி வந்த சின்னம்மாள் மான்சியின் கையைப்பற்றி “என்னா கண்ணு இம்பூட்டு கோபம்? ” கேட்க.

“ ஏன்? கைகால உதறுனா என்ன? வயித்துல இருக்குற புள்ள வெளிய வந்து குதிச்சிடுமா என்ன? வெளிய வந்து விழுந்தா விழட்டும் எனக்கென்ன ? நான் அப்படித்தான் பண்ணுவேன்… நீ உன் வேலையைப் பாரு? ” என்று குதித்தபடி கத்தியவளை கவலையுடன்ப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் போனாள் சின்னம்மாள் தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த சத்யனின் காதுகளில் “வெளிய வந்து விழுந்தா விழட்டும் எனக்கென்ன?” என்ற மான்சியின் வார்த்தைகள் நெஞ்சில் விஷம் தடவிய அம்புகளாய் இறங்கியது…



சுவற்றில் சாய்ந்துகொண்டு கண்மூடி சிறிதுநேரம் நின்றான்.. வீட்டுக்குள் வந்தவன் காலை உணவை முடித்துக்கொண்டு, வெளி வராண்டாவில் வந்து அமர்ந்து ராமைய்யாவிடம் தொழில் நிலவரம் பற்றிப் பேசிவிட்டு “ சரிண்ணே நீங்க போய் வயக்காட்டுல வேலையை கவனிங்க.. மதிய சாப்பாடு செல்விக்கிட்ட குடுத்தனுப்ப சொல்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போனான் கொஞ்சநேரத்தில் கூடத்தில் தர்மனும் மீனாவும் வந்திருந்தனர்.. அக்காவைப் பார்த்ததும் சத்யன் தலைகுனிய.. தம்பியின் மெலிந்த தோற்றம் மீனாவின் இதயத்தை உலுக்கியது, எதுவுமே சொல்லாமல் முந்தானையால் வாயைப்பொத்திக் கொண்டு அழுதாள்.. நல்லவேளையா…

இவ தம்பிய நேத்து நைட்டு இருந்த கோலத்தைப் பார்த்திருந்தா உயிரையே விட்டுருப்பா..என்று மனதிற்குள் எண்ணிய தர்மன் “ எல்லாம் தான் தீர்ந்து போச்சே இப்ப ஏன் அழுது எல்லாரையும் சங்கடப்படுத்துற ” என்று மனைவியை அதட்டியவர் வெள்ளை புடவையின் முந்தானையை தோளோடு மூடியபடி தூணோரமாக நின்றிருந்த மாமியாரைப் பார்த்து “ கோயில் பூசாரியைப் பார்த்து நல்லநாள் குறிச்சுக் குடுக்க சொன்னேன்.. வர்ற புதன் கிழமை நாள் நல்லாருக்காம், அன்னிக்கே நம்ம குலதெய்வம் கோயில்ல கல்யாணத்தை முடிச்சிப்புடலாம்னு இருக்கேன்… நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார்..

See also  மான்சிக்காக - பாகம் 54 - மான்சி கதைகள்



மருமகன் முகத்தை பார்க்காமல் தலைகுனிந்தபடி “ உங்க சவுகரியப்படி செய்யுங்கய்யா, இதுல நான் சொல்ல என்ன இருக்கு ” என்றார் பஞ்சவர்ணம் அப்போது தோட்டத்தில் இருந்து வந்த மான்சி தர்மன் அமர்ந்திருந்த சோபாவின் கைப்பிடியில் அமர்ந்து அவர்மீது ஒயிலாக சாய்ந்து சத்யனை முறைத்தபடி “ அப்பா அண்ணனுங்க ஏன் வரலை?” என்று கேட்க… “ கூப்பிட்டுப் பார்த்தேன் வரலைன்னு சொல்லிட்டானுங்க… சரிதான் போங்கடான்னு வந்துட்டேன்” என்று சொன்ன தர்மன்

“ ஆமா நீ ஏன் இன்னும் குளிக்காம உட்கார்ந்திருக்கடா?” என்று மகளிடம் கேட்டார்.. “ எங்கருந்து குளிக்குறது.. ரூமுக்குள்ள இருக்குற பாத்ரூம்ல ஷவர் இல்ல… சரி தோட்டத்துல போய் குளிக்கலாம்னு வந்தா ஒரு இளவரசனை உட்காரவச்சு சுத்தி சுத்தி வந்து என்னைத் தேய்ச்சு குளிக்க வச்சு.. யப்பப்பா என்னா பில்டப்பு குடுக்குறாங்கப்பா..



என்னவோ போருக்குப் போய் ஜெயிச்சுட்டு வந்த மாதிரி.. போனது ஜெயிலுல கம்பி எண்ணுறதுக்கு… இதுல இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. தாங்க முடியலைடா சாமி.. இன்னும் என்ன என்ன கூத்தெல்லாம் பாக்கனுமோ தெரியலை ” என்று நக்கல் என்ற பெயரில் சத்யனின் மனதை மேலும் ரணமாக்கியபடி தன் நெற்றியில் வலிக்காமல் தட்டிக்கொண்டாள்

நன்றி :சத்யன்

Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks