”பாப்பாவா பாத்தா.. நம்ம சசி சாயல் தெரியுதில்லேனு.?”
போனில் கேட்டபோதும்.. உள்ளுக்குள் அவனுக்குப் பதறியது.
”ஆ… அப்றம்.?”
”ஆனா.. அவரு இதை குத்தலா கேக்கல.. சாதாரணமாதான் கேட்டார்.! நானும் ஆமா.. னு
சொல்லிருவேன். !
ஆனா அதுக்காக அவரு என்னைவோ.. குழந்தைவோ வெறுத்துடல..! இப்ப
ரொம்ப பிரியமாத்தான் இருக்காரு.!!” என்றாள்.
சசி பேச முடியாமல் வாயடைத்துப் போய்.. அமைதியானான்.
”ஏய்.. பைய்யா..” என்றாள் அண்ணாச்சியம்மா.
” சொல்லுங்க….”
”என்னடா.. சைலன்டாகிட்ட..?”
”இல்ல.. இவ்வளவு நாள்.. கழிச்சு.. இப்படி ஒரு குண்டை தூக்கி.. என் தலைல
போடுவீங்கனு நான் எதிர் பாக்கவே இல்ல…”
மறுபக்கத்தில் சிரித்தாள்.
”சொல்லனும்னு நான்.. நெனச்சிருக்கேன்.. ஆனா.. உனக்கு ஏன்.. வீண் மன
உளைச்சல்னுதான்.. சொல்லாம விட்டுட்டேன்.! ஸாரி.. டா..!!”
”ம்.. ம்ம்..! அது பரவால்ல.. ஆனா.. இத நீங்க.. எப்படி…?”
”அவரு ரொம்ப நல்ல மனுஷன் பைய்யா.! உனக்கு இது ஆச்சரியமா இருக்கலாம்.. ஆனா
சத்தியமான உண்மை.! நம்ம மேட்டர் ஆரம்பத்துலருந்தே அவருக்கு தெரிஞ்சுருக்கு..
ஆனா இப்பவரை.. என்னை ஒரு வார்த்தை குறை சொல்லல..’ ஏன் ‘ னு ஒரு வார்த்தை
கேக்கலை.! ஒரு தடவ என்ன சொன்னாரு தெரியுமா.?
‘உன் வாழ்க்கைய நான் பாலைவனமாக்கிட்டு போயிருவேனோனு ரொம்ப கவலை பட்டுட்டு
இருந்தேன்..! ஆனா அப்படி நடக்கல.. உன் வாழ்க்கைக்கு நீயே ஒரு அழக சேத்துட்ட..
இப்பதான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.! என்னால உன் வாழ்க்கை நாசமாகிடல..
உன்னோட பெண்மைக்கும் ஒரு அங்கீகாரம் கெடைச்சுருச்சு.. எனக்கு இது போதும்..
யாரு என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்ல னு சொன்னார்.!” என்றாள்.
”ஓ…!!” என்றான் வியப்பு மேலிட..
” எத்தனை வித்தியாசமான மனுஷன் இவர்னு.. நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன்
தெரியுமா.? இப்ப அவரை பாத்து.. ஆண்மை இல்லாத மனுஷன்னு என்னால நினைக்க முடியாது
சசி.! அவரு ஒரு குழந்தைய பெத்துக்க தகுதி இல்லாதவரா இருக்கலாம்.. ஆனா.. ரொம்ப
நல்ல மனசு இருக்கு பையா..!!”
”ம்..ம்ம்..!!”
”சத்தியமா.. இப்பல்லாம் அவரை நான் ரொம்ப உயர்வா நினைக்கறேன் தெரியுமா பையா.?
ஒரு குறையிருக்கற மனுஷனா அவர பாக்க முடியல பையா.. என்னால.! இப்ப.. அவரு
என்கிட்டயும் குழந்தைகிட்டயும் காட்ற பாசத்தை பாக்கறப்ப.. என் மனசுலதான்
சின்னதா.. என்னவோ ஒன்னு உறுத்தது.! இவருக்கு துரோகம் பண்ணிட்டோம்னு..! நான்
வருத்தப்படல பையா.. அவரும் அப்படி நெனைக்கல.. ஆனாலும் என் மனசுலதான் ஒரு
உறுத்தல்..!” என்றவள் தொடர்ந்து சொன்னாள் ” எந்த ஒரு ஆம்பளையும் தன்
பொண்டாட்டி தனக்கு துரோகம் பண்ணிட்டானு தெரிஞ்சவுடனே அருவாள எடுக்கறதுதான்..
நம்ம மண்ணோட வழக்கம்.. அவன்தான் ஆம்பளை.. அதுதான் ஆண்மைனுதான் நானும்
நம்பிட்டிருந்தேன்..! ஆனா வீண் ஜம்பமும்.. வரட்டு கவுரவுமும் மட்டுமே ஆண்மை
இல்லேன்னு.. எனக்கு இப்ப தோணுது..! ஒரு பெண்ணை தாயாக்கறது மட்டும்தான் ஆண்மைனு
என்னால நம்ப முடியல.!”
அண்ணாச்சியம்மாவின் உணர்ச்சி மிகுந்த குரலைக் கேட்டுக்கொண்டு அமைதியாக
இருந்தான் சசி.
அவள் குரலில் ஒரு நெகிழ்ச்சி தெரிந்தது.
”எது எப்படியோ.. இப்ப சத்தியமா நான் ஒன்னு சொல்றேன் பைய்யா.! இப்ப அவரும்
என்னை ரொம்ப நேசிக்கறாரு.. நானும் அவரை அதே அளவுக்கு மதிக்கறேன். இதுவரை
இல்லாத ஒரு அன்பு.. இப்ப அவருகிட்ட எனக்கு வந்துருக்கு.. இப்ப நெஜமாவே அவரை
நான் விரும்பறேன் பைய்யா..! அவரை நான் எத்தனையோ முறை மோசமான வகைல… மனசார
திட்டியிருக்கேன்.. அதுக்காக இப்ப நான் உண்மையாவே வருத்தப்படறேன்.! இனி நான்
ஒரு தடவகூட வாய் தவறி அவரை குறை சொல்லவோ.. திட்டவோ மாட்டேன். .!”
இந்தப் பக்கம் சசி நீண்ட பெருமூச்செறிந்தான்.
அண்ணாச்சியம்மா சிறுது இடைவெளி விட்டு மறுபடியும் தன் மனதில் உள்ளதை.. அவனிடம்
கொட்டினாள்.
”அதேமாதிரி உன்ன.. என்னால மறக்க முடியாது பையா.! உன்னை தவற இன்னொரு ஆம்பளைய
நான் மனசாலகூட நெனைக்க மாட்டேன்.! அதாவது உடம்பு விசயத்துல.! அண்ணாச்சி
எப்படி எனக்கு ஒரு புருஷனோ.. அதுமாதிரி நீ கூட என் காதலன்தான். இத
சொல்றதுக்காக நான் வெக்கப்படல..! என்னை பொருத்தவரை எனக்கு நீங்க ரெண்டு பேரும்
ஒன்னுதான்..! சந்தர்ப்பம் கெடைச்சா.. நீ எப்ப வேனா.. உரிமையா என்கூட
படுக்கலாம்.. இதுக்கு மேல நான் சொல்ல ஒன்னும் இல்ல.. உனக்கு மட்டும் இந்த
உண்மை தெரிஞ்சா போதும்..!!”என உருக்கமாகச் சொன்னாள் அண்ணாச்சியம்மா…..!!
வாயடைத்துப் போனவனாக நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தான் சசி……!!!!!!
அண்ணாச்சியம்மா ஏற்படுத்திய தாக்கம்.. சசியை மிக மோசமாக பாதித்தது.!
அவனது ஆழ் மனதில் அமிழ்ந்து கிடந்த.. காலத்தால் அழிக்க முடியாத.. அவனது நினைவடுக்கு.. கிளறப்பட்டது.!
அதன் விளைவு..
அன்றைய இரவு.. சசிக்கு உறக்கமற்ற இரவாக முடிந்தது.!
உறக்கமற்ற இரவைக்கூட அவன் சுலபமாகக் கழித்து விடுவான்.. ஆனால் இரக்கமற்று.. மீண்டும்.. மீண்டும் வந்து உயிரை வதைக்கும்.. உள்ளத்து உணர்வுகளின் அவஸ்தை..
ஒரு இரவு முழுவதும் அவன் இதயத்தில் ரத்தம் கசிய வைத்தது..!!
அதனால்….
அடுத்த நாள் காலையில் குமுதா எழுப்பிய போதும் எழாமல்.. அல்லது எழ முடியாமல்.. தூங்கினான். !!
அவன் சுய உணர்வு பெற்று.. உறக்கம் கலைந்தபோது காலை பத்து மணி. !
அப்போதுகூட அவனாக எழவில்லை.
அவன் கண்விழித்தபோது.. குமுதாவின் பெண்.. மது.. அவன் வயிற்றின் மேல்.. இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்து.. அசைந்தாடிக்கொண்டிருந்தாள்.!
அவளது முத்துச்சிப்பி வாய்.. உணவை அசை போட்டுக்கொண்டிருந்தது.
அவள் பக்கத்தில் குமுதா உணவுத் தட்டைக் கையில் பிடித்தவாறு நின்றிருந்தாள்.!
அவன் வயிற்றின்மேல் உட்கார்ந்திருந்த மதுவைக் கையில் பிடித்தவாறு..
”என்னடா செல்லம்.. பண்ற..?” எனக் கேட்டான் சசி.
” ச்சாப்பிடர..” என வாயசைவுடன் அவன் வயிற்றின்மீதே படுத்தாள்.
குமுதாவைப் பார்த்தான்.
”நீதான் மேல ஏத்தி விட்டியா..?”
சிரித்தாள் குமுதா.
”மாமாவ எழுப்புனு சொன்னேன்.. நேரா வந்து உன் வயித்து மேல ஏறி உக்காந்துட்டா..! அவ உக்காந்து எத்தனை நேரம் ஆச்சு தெரியுமா..? நீ இப்பதான் முழிச்சிருக்க..? நானும் ரெண்டு மூணு தடவை எழுப்பி பாத்து.. முடியாம.. விட்டுட்டேன்.. அப்படி என்னடா தூக்கம்.. உனக்கு..? நைட்டெல்லாம் தூங்கலையா..?”
மதுவை கீழே நகர்த்தி உட்கார வைத்துவிட்டு.. எரிச்சல் எடுத்த.. கண்களைக் கசக்கிக்கொண்டே மெதுவாக எழுந்தான்.
”ம்..ம்ம்..”
”ஏன்டா… என்னாச்சு.. திடீர்னு..?”
”ப்ச்… ஒன்னுல்ல..” என பாத்ரூம் போனான்.
முகத்தில் தண்ணீரை அடித்து அடித்து கழுவினான்.! குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதில்.. கண் எரிச்சல் சற்று குறைவானது.!
வெளியே போனான்.!
”காபி குடிக்கறியா.?” அவனை உற்றுப் பார்த்துக்கொண்டு கேட்டாள் குமுதா.
”ம்..ம்ம்..! குடு..!” சோபாவில் உட்கார்ந்தான்.
மது ஓடிவந்து அவன் மடியில் ஏறி உட்கார்ந்தாள்.
கையில் இருந்த உணவுத் தட்டைக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள் குமுதா.
”சரியா சாப்பிடவே மாட்டேங்கறா.. இனி இவளுக்கு என்னாச்சுனு தெரியல.. இந்தா.. ஒரு ரெண்டு வாய் ஊட்டிவிடு.. உன்கிட்டன்னா சாப்பிட்டுக்குவா..!”
சசிக்கு கடுப்பாகிவிட்டது.
”ஏய்.. லூசு.. போடி எடுத்துட்டு..! ஆளையும்.. அவளையும் பாரு..!!” என்று திட்டினான்.
”ஏன்டா..?” லேசான திகைப்புடன் அவனைப் பார்த்தாள் குமுதா.
”அவ சாப்பிடலேன்னா பேசாம விடு.. என்னாலல்லாம் இப்ப ஊட்ட முடியாது. .” என எரிச்சலோடு சொன்னான்.
”முடியாதுனா.. முடியாதுனு சொல்றதுதான..? அதுக்கு ஏன் இப்படி எரிஞ்சு விழற..?” என்றாள்.
அவளை முறைத்துப் பார்த்தான்.
”முதல்ல காபி வெய்.. போ..!!”
”தரேன்.. அதுக்கும் எரிஞ்சு விழாத.. இவளையாவது மடில வெச்சிருக்கியா இல்ல… எறக்கிரட்டுமா..?” என அவள் சீரியஸாகக் கேடக…
சிரித்துவிட்டான் சசி.
”இருக்கட்டும் போ..!”
”ம்ம்.. நைட்டெல்லாம் தூஙகாம.. முழிச்சிட்டு கெடக்கறது.. அப்பறம் காலைல அரையும் கொறையுமா தூங்கி எந்திரிச்சு… இப்படி வள்.. வள்ளுனு நம்மகிட்ட விழவேண்டியது.! ஒரு கல்யாணத்தை பண்ணி தொலைனா.. கேக்கறதில்ல…” என அவள் பாட்டுக்கு புலம்பிக்கொண்டே.. கிச்சனுக்குப் போனாள் குமுதா. !