நான் என்னோட நீலமலை எஸ்டேட் பங்களாவிலிருந்து புறப்படும்போது மணி ஏழாகிவிட்டது. முன்பனிக்கால மானதால் சீக்கிரமே இருட்டுக்கட்டி கொண்டுவிட்டது. டிரைவர் வேறு இன்னிக்குன்னுபாத்து லீவு போட்டுட்டான். வேற வழியில்லாம நானே காரை ஓட்டிக்கிட்டு கிளம்பினேன். எனக்கு அவசரமா பக்கத்து டவுனில் ஒரு முக்கியமான வேலையிருந்தது.