மெர்லினிடம் இங்க என்ன நடக்குது எனக் கேட்டான். அவள் பரத்திடம் அப்புறம் என்பதை போல கண் காட்டினாள். இவதான் உன் ரூம் மேட்டா எனக்கேட்க ஆமா என தலையை அசைத்தாள் மெர்லின்.
ரோலிங் நாற்காலியை நகர்த்தி மெர்லின் அருகில் உட்கார்ந்து என்ன நடக்குது சொல்லு என பரத் கேட்க, விசயத்தை சொன்னாள். நான் ஹாஸ்டல்ல இருக்கும்போது உங்ககிட்ட போன்ல பேசுறது அவளுக்கு தெரியும். என் ஆளுகிட்ட பேசும்போது அடிக்கடி தனியா உட்கார்ந்து ரகசியமா பேசுற மாதிரி சத்தம் கேட்காம பேசுவேன். ஆனா உங்க கூட பேசும்போது ஜாலியா யார் இருந்தாலும் கண்டுக்காம சத்தமா பேசுவேன்.
ஓகே…
சில நேரம் காது வலிக்க போகுது ஸ்பீக்கர்ல போடுன்னு கிண்டல் பண்ணுவா. உனக்கு என்ன பேசுறோம்னு தெரியணும் அதானன்னு நானும் ஸ்பீக்கர்ல போட்டு பேசுவேன். அப்படி ஒருநாள் ஸ்பீக்கர்ல போட்டு பேசும்போது ஹாஸ்டல்ல உள்ள ஒரு அக்கா, இவ பேசுறத பார்த்தா பாய் பிரண்ட் மாதிரி இல்லை. பேசுறது எல்லாம் வெஜ், ஆனா புதுசா கல்யாணம் ஆன ஜோடி மாதிரி எப்ப பார்த்தாலும் பேசிப்பேசி சிரிக்கிறான்னு சொன்னாங்க. அதுல இருந்து இவ உங்களை ஒர்க் ஹஸ்பண்ட்னு சொல்லுவா.
இங்கயும் எல்லார்கிட்டேயும் சொல்லி சிரிப்பா. நான் ஆபீஸ்ல கொஞ்சம் டல்லா இருந்தாலும் ஒர்க் ஹஸ்பண்ட் திட்டுனாரான்னு கேட்பா. மொத்தமா சொன்னா ஆபீஸ்ல என்ன ரியாக்ஷன் குடுத்தாலும், ஒர்க் ஹஸ்பண்ட் அது இதுன்னு எதாவது சொல்லுவா. நீங்க இன்னைக்கு இங்க வருவீங்கன்னு தெரியும். நான் நேரே இங்க வந்தேன். ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தவ, நீங்க இன்னும் வரலன்னு நினைச்சு உங்களுக்கு கேக்குற மாதிரி சத்தமா கேட்டுட்டா.
ஹா. ஹா. இவ்ளோ தானா. என்னை வச்சி காமெடி பண்றீங்க…
உங்களுக்கு எங்க ஹாஸ்டல்ல நிறைய பேன்ஸ் இருக்காங்க ப்ரோ என்றாள் மெர்லினின் தோழி..
ஓஹ்! நான் அவ்ளோ பாப்புலர் ஆயிட்டேனா?
ஆமா. பேசாம இவள கல்யாணம் பண்ணுங்க எல்லாரும் கல்யாணத்துக்கு வருவாங்க…
நான் ரெடி, ஆனா அவளுக்கு அடுத்த மாசம் அவ ஆளு கூட கல்யாணம். நான் இப்ப என்ன பண்ண. என பரத் சிரித்தான். .
நீங்க கூப்பிட்டா உங்க கூட வந்துருவா, வேணும்னா கூப்பிட்டு பாருங்க..
அப்படியா மெர்லின். என்கூட வர்றியா? என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?
உனக்கு ஓகேன்னா எனக்கு ஓகேடா என்றாள் மெர்லின்.
பரத்தும் மெர்லினும் வாய் விட்டு சத்தமாக சிரிக்க, அந்த ரூம் மேட் சிரிக்கவில்லை, இருவரையும் பார்த்து முறைத்தாள். தன்னுடைய சிஸ்டம் பார்த்து வேலை செய்ய ஆரம்பித்தாள்..
பரத்தின் வேலை 3 மணிக்கு முடிந்தது. நான் 3:30 க்கு கிளம்ப வேண்டும் போறேன் என மெர்லினிடம் சொல்லி எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தான். அந்த பெண்…
நீங்க கிளம்ப போறீங்களா?
ஆமா…
அவள் மெர்லின் காதில் ஏதோ சொல்ல, பிரேக் போலாமா எனக் கேட்டாள் மெர்லின்.
பரத் பிரேக் முடிந்து அப்படியே கிளம்பலாம் என்ற எண்ணத்தில் லேப்டாப் பேக் எடுக்க, இங்க வந்து எடுத்துட்டுப் போ என மெர்லின் சொல்ல, அந்த பெண்ணோ எனக்கு வேலை இருக்கு நான் வரல நீங்க போங்க என்றாள்.
மெர்லின் அண்ட் பரத் இருவர் மட்டும் பிரேக் போக, பிரட் ஆம்லெட் ஆர்டர் செய்து அது வரும் வரை சும்மா பேசிக்கொண்டு இருந்தார்கள்,
ஷிப்ட் முடியற வரை இருடா.
கடுப்பா இருக்கா? கம்பெனி குடுக்கனுமா?
அப்படியில்லை, ஷிப்ட் முடிஞ்சு என்னை உன்கூட கூட்டிட்டு போ..
சரி..
பிரேக் முடிந்த பிறகு மெர்லின் வேலை பார்க்க அவன் தூங்கினான். அவனுடைய பெரியம்மா வீட்டிலுள்ள பைக்கில் ஆபீஸ் வந்திருந்தான். பரத்தின் பெரியம்மா வெளிநாட்டில் இருக்கும் தன் மகளின் வீட்டை பரத் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தாள்.
ஷிப்ட் முடிந்து, இருவரும் பைக்கில் கிளம்பி அவள் ஹாஸ்டல் அருகே செல்லும் போது..
இங்க வேண்டாம், உன் வீட்டுக்குப் போடா..
என்னடி சொல்ற?
எனக்கு உன்கூட கொஞ்ச நேரம் இருக்கணும்.
என்ன பேசணும்?
ரொம்ப திங்க் பண்ணாத, அந்த மாதிரி இல்லை..
என்னவோ சொல்ற
டேய், சும்மா கேள்வி கேட்காம போடா..
அவளுக்கு ஃபோன்கால் வந்தது. அவள் பேசி முடிக்கும் வரை வண்டி நகரவில்லை. அவன் காதில் விழுந்தவை…
சொல்லுடி
..
இங்க தான் இருக்கோம்.
…
8 மணிக்கு வருவேன்.
…
இல்லை சொல்லல..
..
தெரியலை…
…
சரி..
…
பை…
போடா… போலாம் போ…
வீடு போய் சேரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. போய் சேர்ந்த பின்னும் கொஞ்ச நேரம் அமைதி.
தண்ணி குடுடா…
தண்ணீரை வாங்கி குடித்தாள்.
ஏண்டா பேச மாட்டேங்குற?
நீ இங்க வரேன்னு சொன்னது ஒரு மாதிரி இருக்கு…
ஏண்டா?
நீ எதுக்கு வரேன்னு சொன்னன்னு யோசிக்க யோசிக்க குழப்பமா இருக்கு…
ரொம்ப கன்ஃபியூஸ் ஆகாத..
பிரேக் போயிட்டு வந்த பிறகு, அவ எதோ கேட்டா நீ இல்லைன்னு தலை ஆட்டுன, அதுக்கு பிறகு இருந்தே நீயும் டல்லா இருக்க…
ஹம்..
எனக்கு உன்ன இப்படி பார்க்க பிடிக்கல. ஜாலியான மெர்லின் தான் எனக்கு பிடிக்கும்.
சிரித்துக் கொண்டே எழுந்து கட்டிப்பிடித்தாள். என்ன நடக்குது என நினைக்கும் முன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்…
மன்னிச்சுக்கடா, எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்..
ஹம்..
அவளுக்கு அது தெரியும். எங்க வீட்ல பார்த்த பய்யன் எனக்கு சரியில்லை, நீங்கதான் சரின்னு 3-4 மாசமா உங்ககிட்ட கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேளுன்னு சொல்லிட்டு இருந்தா..
ஓஹ்!!
அதான் அவ என் பக்கத்துல இருக்கும்போது அடிக்கடி “கழட்டி விடுறேன் கட்டிக்குறியான்னு” கேட்பேன்.
ஒரு மாசத்துக்கு முன்னால எனக்கும் அவனுக்கும் சண்டை, அழுதுட்டு இருந்தேன். அன்னைக்கு ரொம்ப அட்வைஸ் பண்ணுனா. நான் எங்க வீட்டுல ரொம்ப நம்பி இருக்காங்க, அவங்களை என்னால ஏமாற்ற முடியாதுன்னு சொன்னேன். எனக்கு திரும்பவும் நிறைய அட்வைஸ் பண்ணுனா. அப்புறம் உங்கிட்ட பேச கால் பண்ணுனா, நீ வெளிய போய்ருந்த, திரும்ப உடனே கூப்பிடல.
இன்னைக்கு பிரேக்ல உன்கிட்ட கல்யாணம் பண்ண சொல்லி கேளுன்னு சொல்லி அனுப்புனா, அதான் அவ நம்ம கூட வரலை. நான் உன்கிட்ட சொல்லலைன்னு கோபம்..
இப்படி லாஸ்ட் மினிட்ல சொல்ற…
என்னால வீட்ல உள்ளவங்க நம்பிக்கையை குலைக்க முடியாது..
அப்ப எதுக்கு சொன்ன?
எனக்கு உன்கிட்ட சொல்லணும், சொல்லாம மண்டை வெடிக்கற மாதிரி இருந்தது..
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை மெர்லின்.
சாரிடா, உன்னை கஷ்ட படுத்திட்டேன்..
இட்ஸ் ஓகே மா..
கொஞ்ச நேரம் அமைதி…
ஏண்டா அப்படி பாக்குற?
எதுக்கு இங்க கூட்டிட்டு வர சொன்ன..
ஏன்னு தெரியாதா?
ஐடியா இருக்கு… பட்..
என்ன பட்? எடுத்துக்க..