”எனக்கு டீ கெடையாதா..?” எனக் கேட்டாள்.
”எங்கம்மாவ கேளு..”என்றான்.
”ஏன்.. நீங்க குடுத்தா.. என்னவாம்..?” அவள் கண்களில் இயல்பான ஒரு குறும்பு தெரிந்தது.
”எனக்கு.. அவ்ளோ.. தாராள மனசு இல்ல..” டீயை உறிஞ்சினான்.
”மோசம்ம்பா.. நீங்க..! ஒரு பேச்சுக்காகவாவது…”
”அப்படி எந்த அவசியமும் இல்ல..”
”ம்..ம்ம்..!” சேரை எடுத்துப் போட்டு உட்கார்ந்தாள்.
அவனைப் பார்த்து.. ஒரு பெருமூச்சு விட்டாள்.
உள்ளே வேலையாக இருந்த.. சசியின் அம்மா.. புவியைக் கேட்டாள்.
”டீ வேனுமா புவி..?”
”வேண்டாம்..” என சத்தமாகச் சொன்னாள் ”நான் குடிச்சிட்டேன்..”
சசி டிவியை கவனிக்க…
மெதுவாகச் சொன்னாள்.
”இப்பெல்லாம் நீங்க ரொம்ப மாறிட்டிங்க..?”
”அப்படியா..?”
”ம்..ம்ம்..! முன்ன மாதிரி இல்ல..”
”முன்ன மாதிரின்னா.. என்ன..?”
குரலைத் தழைத்துக் கொண்டு சொன்னாள்.
”முன்னெல்லாம்.. ஏ ஜோக்.. டபுள் மீனிங்.. வசனம்னு.. பட்டையை கெளப்புவிங்க..! ஆனா.. இப்ப அந்த வாசமே இல்ல..!”
சசி அமைதியாக இருந்தான்.
”என்னாச்சு..?” எனக் கேட்டாள்.
”என்ன..?” அவளைப் பார்த்தான்.
”எப்படி இந்த மாற்றம்..?”
பெருமூச்சு விட்டான்.
”காலம் யாரையும் மாத்தும்..”
”ஓ..! சரிதான்..!” என உள்ளே திரும்பி பார்த்துவிட்டு மெல்லிய குரலில் சொன்னாள் ”இல்லேன்னா.. எனக்கு உங்க மேல.. லவ் வருமா..?”
திகைத்தான்.
”என்னது..?”
அவனை நேராகப் பார்த்துச் சொன்னாள்.
”ஐ மிஸ் யூ..”
எதுவும் பேசாமல்.. அவளையே வெறித்தான்.
”நா பொய் சொல்லல..! பிரமிஸா..! இத.. உங்ககிட்ட எப்படி சொல்றதுனுதான் பயந்துட்டிருந்தேன். இப்ப சொல்லிட்டேன்.! என்மேல கோபமிருக்கும் உங்களுக்கு.. அதுக்காக என்னை மன்னிச்சிருங்க..! ஆனா.. நான் இப்ப.. உங்கள விரும்பறது.. பொய் இல்ல..”
அவனால் நம்ப முடியவில்லை. அவள் இப்படி.. திடுதிப்பென.. லவ் பண்ணுவதாகச் சொல்லுவாள் என.. அவன் எதிர்பார்க்கவும் இல்லை. !
உதட்டில் ஒரு குறுநகை தவழக் கேட்டான்.
”என்னது.. திடீர்னு..?”
”திடீர்னு இல்ல..! சின்ன வயசுல இருந்தே.. உங்கள எனக்கு புடிக்கும்..! நான் மொத மொத.. லவ் பண்ணதும் உங்களத்தான்.! என்ன.. அத நான் உங்ககிட்ட சொல்லல.! சொல்லிருப்பேன்.. ஆனா.. அன்னிக்கு நீங்களும்.. கவியும்.. ஏடாகூடமா இருந்தீங்களே.. அத பாத்தப்பறம்தான்.. எனக்கு உங்க மேல.. அப்படி ஒரு கோபம் வந்துருச்சு. .! அந்த கோபத்துலதான்.. உங்கள ரொம்ப மோசமாவெல்லாம் பேசிட்டேன்.! ஐம் ஸாரி…!!”
எவ்வளவு அழகாகத் தன் பக்கம் நியாயம் கோர்க்கிறாள் என லேசாக வியந்தான்.
அம்மா இருப்பதால்.. சரளமாகப் பேச முடியாது என.. எழுந்து வெளியே போய் நின்றான் சசி.
புவியும் அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.
”உங்கள நான் புரிஞ்சுககாம போனதுக்காக.. இப்ப ரொம்ப பீல் பண்றேன்..! உங்கள ரொம்பமே அவாய்ட் பண்ணியிருக்கேன்.. அதெல்லாம் நெனைச்சா.. எனக்கே.. என்மேல கோபம் வருது..” என்றாள்.
அவன் பேசவில்லை.
”இப்ப நான்.. உங்கள ரொம்ப ஆழமா நேசிக்கறேன்.” என்றாள் புவி.
”நேசம்..” மெலிதாகப் புன்னகைத்தான் சசி ”நீ என்னை நேசிக்கற..?”
”சத்தியமா..! உங்க அருமை.. இப்பதான் புரியுது எனக்கு..!”
”ஓ.. இதை நான் நம்பனும்..?”
”உங்க கோபம் நியாயமானதுதான்.. ஆனா…..” வார்த்தைக்குத் திணறினாள்.
அவள் பக்கம் திரும்பி.. மிகவும் அமைதியான குரலில் சொன்னான் சசி.
”வேற ஆள் பாத்துக்கோ.. புவி..!! அதான் உனக்கு நல்லது..!!”
மாலை நேரக்காற்று.. மிதமாக வீசிக்கொண்டிருந்தது. அந்தக் காற்றிலும்.. புவியாழினியின் முன் நெற்றி முடிகள்.. கொஞ்சமாகக் கலைந்து.. அவள் கன்னத்தில் விழுந்து.. ஊசலாடிக் கொண்டிருந்தது.!
பக்கவாட்டுத் தோற்றத்தில் அவளைப் பார்த்த.. சசியின் உள்ளம்.. அவளுக்காக.. உள்ளே.. உருகவே செய்தது.!
‘இப்போதும் அவள் அழகுதான்.. கொஞ்சும் இளமை வனப்புடன்.. அட்டகாசமாகத்தானா இருக்கிறாள்.!
முன்பு துடுக்குத் தனமாக இருந்தவள்.. இப்போது அடிபட்டு.. அடங்கிக் காணப்படுகிறாள்… அவ்வளவே… மற்றபடி.. அவளது அழகில் எந்தக் குறைச்சலும் இல்லை..!
”என் வீட்டுக்கு போலாமா..?” என மெல்லிய குரலில் கேட்டாள் புவி.
”எதுக்கு..?”
”அங்க.. யாருமில்ல..! ப்ரீயா பேசலாம்.! உங்ககிட்ட நான் மனசு விட்டு நெறைய பேசனும்..!” என்றாள்.
அவன் ஒன்றும் பதில் தரவில்லை. சிறிது நேரம்.. மௌனம் நிலவியது.
ஒரு பெருமூச்சு விட்டு..
”உண்மைலயே.. நீங்க நல்லவங்கதான்..! அத நான்தான்.. சரியா புரிஞ்சுக்கல..!” என மெல்லிய குரலில் சொன்னாள்.
அவன் அப்போதும் பேசவில்லை.
அவளே பேசினாள்.
”இப்ப.. நான்.. உங்கள ரொம்ப விரும்பறேன்..! உங்க அன்புக்கு.. நானும் ஏங்கறேன்.!! ஐ லவ் யூ..!!”
வெளியில் சாதாரணமாகக் காட்டிக்கொண்டாலும்.. சசியின் மனதில் புயல் அடித்தது.
கண்களை அழுத்தமாக மூடி.. மூச்சை ஆழமாக இழுத்து விட்டான்.
”இது காதல் இல்ல.. உன் மனசோட ஏமாற்றுக்கு மாற்று வழி.! நீ காதலிச்சவன்.. உன்னை ஏமாத்திட்டனதுனாலதான்..! இப்ப என் பக்கம்.. உன் கவனம் திரும்பியிருக்கு..! இப்ப உன்ன சுத்திவரதுக்கு.. புகழறதுக்கு.. கொஞ்சறதுக்கு.. ஆள் இல்ல..! அதான் ஆள் தேடற..! ஆனா.. என் மனசுல இப்ப நீ இல்ல..! என்னை லவ் பண்ணவும் நான் தயாரில்ல..! என்னை விட்று..! ஐ ஹேட் யூ..!”
”உங்கள.. நா.. ரொம்பவுமே அவமானப்படுத்திட்டேன். அதுக்கெல்லாம் சேத்து.. இப்ப உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.! என்னை மன்னிச்சிருங்க..! இப்ப நான் பழைய மாதிரி இல்ல..! நீங்க என்ன சொன்னாலும் கேப்பேன்..!” என கரகரக் குரலில் சொன்னாள்.
”அப்பனனா.. இங்கருந்து போ.. என் நிம்மதிய கெடுக்காத..” என அமைதியாகச் சொன்னான் சசி.