திண்டுக்கல் பக்கத்து கிராமம் சொந்த ஊர்.ஊரிலேயே பெரிய குடும்பம் எங்கள் குடும்பம்தான்.பெரிய விவசாயத்தோடு வியாபாரமும் அதிகம் உள்ள குடும்பம்.திண்டுக்கல் -திருச்சி சாலையில் பெரிய தென்னந்தோப்பு எங்களுக்கு இருந்தது.
அந்த தென்னத்தோப்பில் காவல் குடும்பம் கருப்பையாவின் குடும்பம் ,பெயர்தான் கருப்பாக இருக்கிறதே தவிற அங்கு எல்லோரும் நல்ல கலராக இருப்பார்கள். கருப்பையாவுக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் முத்தரசி…இளையவள் பானுமதி.மூத்த மகளை வெளியூரில் கட்டி கொடுத்துவிட்டு இளைய மகளை மட்டும் தன் கூட வைத்திருந்தார்.அவளை தன் சொந்த தங்கை மகனுக்கு கொடுக்க பேசி வைத்திருந்தார்.