நான் பிரியா, நான் பத்தாம் வகுப்பில் நன்றாகப் படித்து நல்ல மார்க்கு வாங்கி பாசானேன். மேற்கொண்டு படித்து ஒரு டீச்சர் ஆக வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் நடந்தது என்ன? என் மாமாவின் நண்பரின் பையனுக்கு என்னைத் திருமணம் செய்து கொடுப்பதாக அவருக்கு வாக்களித்துவிட்டு என் திருமணத்தையும் நடத்தி வைத்தார்.