“நீங்க சொல்றது புரியுது சார்… ஆனா அவ தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷ்னும் இல்லாம… அவளோட திருப்தியை உணர முடியாத ஒரு உறவு? நான் சொல்ல வர்றது புரியும்னு நினைக்கிறேன் சார்” என்று சங்கடமாக சத்யன் கூறவும்…
சிரித்த டாக்டர் “நிச்சயம் புரியுது சத்யன்… ஆனா அவளோட திருப்தியை காட்டவில்லைனு சொல்லாதீங்க… அதை நீங்க உணரலைனு வேணா சொல்லுங்க” என்றார்… “அப்படின்னா?” “யெஸ் சத்யன்… மான்சி முழு திருப்தி அடைந்ததன் விளைவு தான் இந்த ‘சத்யன் அத்தான்’ மட்டுமே அவ வாழ்க்கையானது….
அந்த ஒரு வார வாழ்க்கைல அதை உங்களால் உணரமுடியாமல் போயிருக்கலாம்…. மற்றப்படி மான்சியின் மாற்றத்துக்கு முழுக்காரணம் அவளது ஹார்மோன்ஸ் சரியாக வேலை செய்து திருப்தியுற்றதால் தான்” என்று உறுதியாகக் கூறினார்…. சத்யனின் முகத்திலும் வெளிச்சம்….
மனம் திறந்து பேச நினைத்தவனாக “அதை நான் எப்படித் தெரிஞ்சுக்கிறது டாக்டர்?” என்று கேட்டான்…. புன்னகையுடன் ஆதியை ஏறிட்ட டாக்டர் “ஆதி கேன்டீன்ல இந்த டைம் சுட சுட வெங்காய பஜ்ஜி போடுவாங்க… மை பேவரிட்…. எனக்காக கொஞ்சம் போய் வாங்கிட்டு வரமுடியுமா?” என்று கேட்க… ஆதிக்குப் புரிந்தது… சிரிப்புடன் எழுந்து “நிச்சயமா டாக்டர்” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்…..
ஆதி சென்றதும் சத்யன் பக்கமாக திரும்பிய டாக்டர் “இப்போ முடியாவிட்டாலும் போகப் போக உங்களால் உணர முடியும் சத்யன்…. உறவின் போது மான்சியிடம் தெரியும் சிறு மாற்றங்களைக் கூட உன்னிப்பாகக் கவனியுங்கள்…. இதைப் பற்றி இன்னும் விரிவாகச் சொல்லனும்னா பெண்களுக்கு செக்ஸில் உச்சம் என்பது பல வகை உண்டு.. சிலப் பெண்களுக்கு வாய்ப் புணர்ச்சியில் தான் உச்சம் வரும்….
சிலப் பெண்களுக்கு பெரிய ஆணுறுப்பை விட கை விரல்களைப் பயண்படுத்தினால் தான் உச்சம் காணமுடியும்… இன்னும் சிலவகைப் பெண்களுக்கு ஆண் கீழே பெண் மேல என்பது போன்ற உறவில் தான் உச்சம் காணுவார்கள்….. மோஸ்ட்லி உச்சம் காணும் அத்தனைப் பெண்களும் அந்த நிமிடத்தில் தனது உணர்ச்சிகளை வெளிபடையாகக் காட்டிவிடுவார்கள்….
மான்சியைப் பொருத்தவரை அவளது உச்சம் எதிலென்று நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்….” என்று சத்யனுக்குத் தெளிவுப்படுத்தினார்…”அப்படி நான் கண்டுப்பிடிக்கும் பட்ச்சத்தில் மான்சியோட உணர்வு வெளிப்பாடு எப்படியிருக்கும் டாக்டர்?” என சத்யன் கேட்க…
“அதை நாம் இப்போது சொல்ல முடியாது சத்யன்… ஆனால் அவளது உணர்ச்சி வெளிப்பாடு நார்மல் பெண்களைப் போல் நிச்சயம் இருக்காது…. உச்சத்தைத் தாங்க முடியாமல் முழுமூச்சாக உங்களைத் தாக்கக் கூடும்… அடிப்பது நகத்தால் கீறுவது என அவளது வெளிப்பாடுகள் வித்தியாசமாக இருக்க வாய்ப்புண்டு…. ஒரு முறை நீங்கள் கண்டுகொண்டால் மறுமுறை அவளை சாந்தப்படுத்தும் விதமும் உங்களுக்குப் பிடிபட்டுவிடும் சத்யன்” என்றார்….
தனது தாம்பத்தியத்தைப் பற்றி சத்யனுக்குள் மிகப் பெரிய தெளிவு வந்திருந்தது…. நிமிர்ந்து அமர்ந்து “இது போதும் சார்… நீங்க சொன்னது மாதிரி நான் மான்சியைக் கண்டுபிடிப்பேன்” என்றவன் அவரை சற்று சங்கடமாக ஏறிட்டு “இப்போ மான்சி இருக்கிற நிலைமையில்……..?” என்று பாதியில் நிறுத்தினான்…
புன்னகைத்த டாக்டர் “வேகமில்லாத விவேகமான உடலுறவு சுக பிரசவத்திற்கு வழி வகுக்கும் சத்யன்…. பயப்பட வேண்டாம்… உங்களுடைய திருப்திக்காக மான்சியைக் கவனிக்கும் பெண் மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம்” என்றார்…. கதவைத் தட்டி விட்டு ஆதி உள்ளே வர… கூட வெங்காய பஜ்ஜியின் மணமும்….
“தாங்க்ஸ் ஆதி” என்றார் டாக்டர்… இருவரும் டாக்டருக்கு நன்றி கூறி விடைபெற்று வெளியே வந்தனர்…. பௌர்ணமி நிலவின் ஏகாந்தத்தில் வானம் வெளிச்சமாக இருந்தது…. நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில் மிதந்த இன்றைய குளிர் நிலவு நாளைய விடியலின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது….. நிலவின் குளிர்ச்சி மனதை நிறைக்க நண்பனுடன் கிளம்பினான் சத்யன்….
” நீ கண்களை சிமிட்டினாலே..
” நான் கைதாகிப் போகிறேனே…
” வெட்கமாக எனது கைத் தொட்டு….
” உனது காதலைச் சொன்னால்…..
” அடிப் பெண்ணே……
” மிஞ்சுமா எனதுயிர்..?
அதன் பிறகு சத்யனின் வாழ்க்கை அட்டவணையில் மான்சியுடைய நேரமே அதிகமாகப் பதிவானது…. முடிந்த வரை கம்பெனி வேலைகளைச் சுருக்கிக் கொண்டு அவளுக்குத் தேவையான நேரத்தில் அவளுடன் இருந்தான்…. டாக்டர் செபாஸ்டியன் கூறியது போல் மான்சியை நிறையவே கண்டு கொண்டான்…
அவளது அசைவுகளின் அர்த்தம் புரிந்தது…. உறவின் போது அவளது தேவைகள் புரிந்தது…. அந்த சமயத்தில் அவளது உணர்ச்சி வெளிப்பாடுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது…. முதன் முறையாக உணர்ச்சிவசத்தை காட்ட அவள் இவனை மூர்க்கமாகத் தாக்கியபோது அதை மனம் நிறைந்த சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்டான்…. அந்த நிமிடம் அவன் வாழ்க்கை வண்ணமயமானது….
எதையோ ஜெயித்து விட்ட உணர்வு…. மான்சியைக் கவனிப்பதிலும் காப்பதிலும் ஒருவித நிறைவைக் கண்டான்…. சராசரி கணவனாக இல்லாமல் தன்னை ஒரு சாதனையாளனாக மாற்றிய மனைவியிடத்தில் கடலளவு காதலைக் காட்டினான்…. வெளியூர் செல்வதாக அக்காவுக்குச் சொல்லிவிட்டு சில நாட்கள் மான்சியுடன் தங்கினான்… அந்த இரவுகளில் பவானியின் அறிவுரையும் பதிவுரையும் இல்லாமல் தன்னிடம் வந்த மான்சியுடன் கழித்தான்…..
தற்சமயம் கர்பிணி என்பதாலும் முன்பு போலவே ஒருநாள் தவறுதலாக படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டவளை முகம் சுழிக்காமல் சுத்தப்படுத்தி பவானிக்குத் தெரியப்படுத்தாமல் இவனே படுக்கையை அலசி காய வைத்தான்….. மான்சியாலும் இவன் காதலைப் புரிந்து கொள்ள முடிந்தது….
வார்த்தைகளால் காதலை வெளிப்படுத்தத் தெரியாமல் நிறைய நெருக்கம் காட்டினாள்…. இதையும் சத்யனால் கண்டுகொள்ள முடிந்தது…. சத்யனுக்கு சர்வமும் மான்சியாக…. மான்சிக்கு சகலமும் சத்யனான்….
நன்றி :- சத்யன்