பொம்மலாட்டம் – பாகம் 23 – மான்சி தொடர் கதைகள்

‘உணர்வுகள் உண்டு அதை வெளிப்படுத்தத் தெரியாது என்று டாக்டர் சொன்னார்? அப்படியானால் மான்சிக்கு பிள்ளை வலியினை வெளிப்படுத்தத் தெரியாதா?’ படுக்கையிலிருந்து பதறியெழுந்தான் சத்யன்…

வலியைக் கூட வெளிப்படுத்தத் தெரியாதவளுக்கு இதை எப்படி அனுமதித்தார்கள் என்று பவானியின் மீது கோபம் கூட வந்தது… உடனடியாக மான்சியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது…. பவானியின் அனுமதி கிடைக்காது தான்… ‘என்ன செய்யலாம்?’ யோசித்தவனின் மூளையில் மின்னடித்தது…



ஆபத்வாந்தனாக ஆதி மனக்கண்ணில் வந்தான்…. ஆதிக்கு கால் செய்து வரச் சொல்லலாமா என்று நினைத்தவன் பிறகு வேண்டாம் என்று முடிவு செய்தான்… அவன் இடத்தில் சென்று பேசுவதுதான் சரியென்று தோன்றியது…

விருட்டென்று எழுந்து குளியலறை சென்று குளித்து உடை மாற்றிக் கொண்டு கீழே வரவும் வாசுகியும் மதியும் வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது…. பள்ளியில் முயல் வேடமிட்டு நடித்திருந்ததால் அதே உடையோடு ஓடி வந்து கால்களைக் கட்டிக்கொண்ட அம்முவைத் தூக்கி முத்தமிட்டவன் “என் செல்லக்குட்டி எப்போ முயல் குட்டியா மாறிச்சு?” என்று கேட்க… “அது வந்து…. ஸ்கூல்ல இந்த டிரஸ் போட்டு டான்ஸ் ஆடினேன்… நீதான் மாமா வரவேயில்லை” என்ற குழந்தைக்கு மீண்டும் ஒரு முத்தம் கொடுத்து

“ஸாரிடா செல்லம்… நெக்ஸ்ட் இயர் நிச்சயம் மாமா வருவேன்” என்றான்… வாசுகி கூறியதன் பேரில் வேலைக்காரப் பெண் வந்து அம்மூவை வாங்கிச் செல்ல…. அக்காவின் அருகே வந்த சத்யன் “ரிப்போர்ட் எல்லாம் படிச்சிட்டேன்க்கா.. எல்லாம் ஓகே… ஆனா ஹெல்த் மட்டும் கொஞ்சம் வீக்கா இருக்கிறதா டாக்டர் சொன்னாங்க…. டெலிவரி நாள் நெருங்குதுக்கா.. கொஞ்சம் கவனமா இருங்க” அக்கறையுடன் கூறினான்….



“நான் நல்லாத்தான்டா இருக்கேன்….” என்ற வாசுகி தம்பியின் அருகே வந்து முகத்தை உற்றுப் பார்த்து “ரொம்ப நாள் கழிச்சி உன் முகத்துல சின்னதா மாற்றம் தெரியுதே அப்பு?” என கேட்க… சட்டென்று சுதாரித்த சத்யன் “இல்லக்கா அம்மூவை முயல் வேஷத்துல பார்த்ததும் சந்தோஷமாகிட்டேன்” என்று சமாளித்தவன் மதியிடம் திரும்பி

“மாமா,, அக்காவோட பீரோல மெடிக்கல் ரிப்போர்ட் வச்சிருக்கேன் நான் கொஞ்சம் வெளியேப் போய்ட்டு வர்றேன்” என்றான்…வாசுகியும் மதியும் எங்கே என்று கேட்கவில்லை…. சில மாதங்களாக வெளியிடங்களுக்குச் செல்வதை அறவே வெறுத்து கம்பெனியும் வீடுமே கதியென்று கிடந்தவன் இப்போது வெளியே சென்று வருவதாகக் கூறியது இருவருமே சந்தோஷம் தான்…. வீட்டிலிருந்துப் புறப்பட்டவன் காரை பாதி வழியிலேயே நிறுத்தி ஆதிக்கு கால் செய்தான்….

எதிர்முனையில் ஆதி எடுத்ததும் “நீ எங்க மச்சி இருக்க? உன்னைப் பார்க்கனுமே?” என்றான்… இவனது போனுக்காகக் காத்திருந்தவன் போல் “ம் என்னோட ஷாப்ல தான் இருக்கேன்… வா வெயிட் பண்றேன்” என்றான் ஆதி… “ம் ஓகே மச்சி” என்று போன் கால் கட் செய்து விட்டு ஆதியின் மெடிக்கல் ஸ்டோர் இருக்கும் பகுதிக்குக் காரைச் செலுத்தினான்….



கீழ்த் தளத்தில் மருத்துவ உபகரணங்களும்.. மேல்த் தளத்தில் மருத்துவம் சம்மந்தமான புத்தகங்களுமாக இரண்டு அடுக்குகள் கொண்ட கடையில் அன்று அதிக கூட்டமில்லை…. இருந்தவர்களை கவனித்துக்கொள்ளச் சொல்லி ஊழியர்களிடம் சொல்லிவிட்டு சத்யனுடன் தனது கேபினுக்கு வந்தான் ஆதி… சத்யனுக்காக ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு விட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தவன் மேசையிலிருந்த தண்ணீர் க்ளாஸை சத்யனை நோக்கி நகர்த்தி விட்டு

See also  மனசுக்குள் நீ - பாகம் 04 - மான்சி தொடர் கதைகள்

“ம் சொல்லு மச்சி…. என்ன விஷயம் கடை வரை தேடி வந்திருக்க?” என்று நிதானமாகக் கேட்டான்…. எப்படித் தொடங்குவது என்று புரியாமல் கைகளைப் பிசைந்தவன் பிறகு தண்ணீரை எடுத்து அருந்திவிட்டு “இன்னைக்கு அக்காவோட மெடிக்கல் ரிப்போர்ட் வாங்க மீனாட்சி நர்சிங்ஹோம் போனேன்… அங்க மான்சியையும் அவளோட அம்மாவையும் பார்த்தேன்” என்றான்… ஆதியின் முகத்தில் ஆச்சர்யத்திற்கான அறிகுறி எதுவுமில்லை…. “ம் சரி…. அதுக்கென்ன இப்போ?” என்றான்….

நண்பனின் அலட்சியப் போக்கு சத்யனுக்கு துளிக் கோபத்தைத் தூண்டிவிட்டது…. “என்னடா இப்புடி கேட்குற? ஷீ இஸ் பிரங்னட் மச்சி…. எப்படியும் சிக்ஸ் மந்த் இருக்கும்…. பார்த்ததும் எனக்குப் பயங்கர ஷாக்…. என்ன செய்றதுனு புரியலை…. அதோட மான்சியோட அம்மா….. அவங்களும் ரொம்ப கோபமா பேசினாங்க…. என்னால அந்த இடத்தில் வேற எதுவுமே மூவ் பண்ண முடியாத நிலை… அதான் உன்கிட்ட சொல்ல வந்தேன்” என்றான் ஓரளவுக்கு விளக்கமாக…



“ம் ம் ஓகே… மான்சியைப் பார்த்த விஷயத்தை உன் வீட்டுல சொன்னியா? ஐ மீன் மான்சி பிரங்னட் அப்படின்ற விஷயத்தை?” என ஆதி கேட்க… “இல்ல ஆதி…. இப்போதைக்கு எதுவும் சொல்ல வேணாம்னு தோனுச்சு… அதான் சொல்லலை….” “சரிதான் சத்யா… ஆனா என்னை எதுக்குப் பார்க்க வந்திருக்க?” என்று ஆதி கேட்டதும்…. அத்தனை நேரமாக நிமிர்ந்துப் பேசியவன் சட்டென்று பார்வையை வேறு புறமாகத் திருப்பி “எனக்கு மான்சியைப் பார்க்கனும்….

அதுக்கு பவானி ஆன்ட்டி அனுமதிக்க மாட்டாங்கப் போலருக்கு…. அதுக்காகத்தான் உன்னைப் பார்க்க வந்தேன் ” என்றான் சத்யன். சற்றுநேரம் அமைதியாக இருந்த ஆதி நண்பனை மேலும் சோதிக்க விரும்பாமல் “நீ ஆஸ்பிட்டல்ல மான்சியைப் பார்த்துட்டேன்ற விஷயத்தை பவானி ஆன்ட்டி கால் பண்ணி சொல்லிட்டாங்க….” என்றவன் “உடனே நீ வருவேன்னு கெஸ் பண்ணேன்” என்றான்…

“ஓ……….” என்ற ஒற்றை வார்த்தையுடன் அமைதியானான் சத்யன்…. மீண்டும் பல நிமிட அமைதி கடந்து செல்ல “சத்யா,, மான்சியைப் பார்க்கறதுக்கு முன்னாடி நீ டாக்டர் செபாஸ்ட்டியனைப் பார்க்கனும்” ஆதி கூறியதும் புரியாமல் பார்த்த சத்யன் “செபாஸ்ட்டியன்?” என்று கூறிவிட்டு யோசித்தான்…. அவர் யாரென்று புரிந்து விட “ஓ…. யெஸ்…. மான்சியை பர்ஸ்ட் செக்கப்க்குக் கூட்டிப் போன டாக்டர் தானே செபாஸ்ட்டியன்?



இப்போ அவரை எதுக்குப் பார்க்கனும்?” சத்யன் குழப்பமாகக் கேட்டான்….. “இப்போ அவர் கிட்டதான் மான்சி ட்ரீட்மெண்ட்ல இருக்கா” என்றான் ஆதி… “ஓ…… உன் ஏற்பாடா?” என சத்யன் கேட்க… “ஆமா சத்யா” என்ற ஆதி தனது மொபைலை எடுத்து டாக்டர் செபாஸ்ட்டியனுக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தான்… அவர் எடுத்தவுடன் “வணக்கம் சார்… உங்களைப் பார்க்க அப்பாய்மெண்ட் வேணும்… எப்போ ப்ரீயா இருப்பீங்க?” என்று கேட்டான்… “……………….. ”

See also  மான்சிக்காக - பாகம் 18 - மான்சி கதைகள்

“ம் சரி…. நான் வந்துடுறேன் டாக்டர்” என்று கூறி மொபைலை அனைத்து வைத்தவன் சத்யனிடம் திரும்பி ” இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு மேல டாக்டர் ப்ரீ தானாம்… அதோட நாளை காலை பத்து மணிக்கு வரச் சொல்றார்… உனக்கு எந்த டைம் வசதிப்படும் சத்யா?” என்றுக் கேட்டான்… சத்யனைப் பொருத்தவரை இப்போதே என்றாலும் பரவாயில்லை தான்… அவனுக்கு மான்சியைப் பற்றித் தெரிந்தாக வேண்டும்…. “நைட்டே போகலாம் ஆதி” என்றான் பட்டென்று…

“ம் சரி” என்றவன் தனது வீட்டிற்கு கால் செய்து “அப்பா நீங்க வந்து கடையைப் பார்த்துக்கங்க… நான் சத்யன் கூட கொஞ்சம் வெளியப் போய்ட்டு வரவேண்டியிருக்கு” என்றவன் அப்பாவின் சம்மதம் கிடைத்ததும் அவருக்கு நன்றி கூறி போனை வைத்தான்… ” டாக்டரைப் பார்க்க இன்னும் நேரமிருக்கு சத்யா…. அதுவரைக்கும் வெளியே எங்கயாவது போய் பேசிக்கிட்டு இருக்கலாம்” என்று சத்யனிடம் கூறினான்…..



“ம் சரி ஆதி” என்றுவிட்டு நண்பனின் அப்பா வரும் வரை அவனுடன் காத்திருந்தான்…. அவர் வந்ததும் சம்பிரதாய நலன் விசாரிப்புகளுக்குப் பிறகு இருவரும் கிளம்பி வெளியே வந்தனர்… சத்யனின் காரிலேயே புறப்பட்டு மருத்துவமனைக்கு அருகில் இருந்த லயன்ஸ் க்ளப்பிற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு வந்தனர்….

ஆங்காங்கே ஒருசிலர் மாலை நேர உடற்பயிற்சியில் இருக்க ஒருபுறம் நடுவே வலையைக் கட்டி இருவர் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்…. அறிமுகமான மனிதர்களுக்கு நட்புடன் ஓரிரு வார்த்தைகளைக் கொடுத்துவிட்டு ஒதுக்குப்புறமாய் கிடந்த ஒரு இருக்கையில் அமர்ந்தனர்…. விளையாடுபவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்…

“நாமளும் கொஞ்சநேரம் டென்னிஸ் விளையாடலாமா மச்சி?” ஆதி கேட்க…… “இல்ல ஆதி… விளையாடும் மனநிலை எனக்கில்லை…. எனக்கு மான்சிப் பத்தித் தெரியனும்” என்று தனது மனதைத் திறந்தான் சத்யன்…

Leave a Comment

error: read more !!