மான்சிக்காக – பாகம் 12 – மான்சி கதைகள்

rosep-1பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தவர்களை பார்க்க வந்த சத்யனின் கோலத்தைக் கண்டு அவன் மகள் கதறிவிட்டாள்… சிமியின் மாமனார் தன் தங்கை கணவனின் நிலையை கண்டு கலங்கி போனார்… சத்யன் மகளின் முகத்தைக்கூட பார்க்க கூசி தலை குனிந்து நின்றான்

சத்யனின் கையைபிடித்து “ அப்பா உங்களைப் பத்தி எனக்கு தெரியும்பா… நீங்க என்னை பார்க்க கூச வேணாம்,, எப்பவும்போல தலைநிமிர்ந்து நில்லுங்கப்பா” என்று மகள் கூறியதும் சத்யன் தாங்கமுடியாமல் அவள் கையிலேயே முகத்தை பதித்துக்கொண்டு கதறினான்…



“ அப்பா அழாதீங்கப்பா… நான் எப்பவுமே உங்களை தவறா நெனைக்க மாட்டேன்… அம்மா கூட நீங்க எப்படி வாழ்ந்தீங்க அம்மா இறந்த பிறகு எப்படியிருந்தீங்கன்னு எங்களுக்கு தெரியும்பா… ஏதோ கெட்டநேரம் தவறிட்டீங்க.. இந்த ஒரு தவறுக்காக நீங்க இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கை பொய்யாயிடுமா என்ன? அம்மா போனப் பிறகு உங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணியிருந்தா ஏன் இவ்வளவு பிரச்சனை.. நீங்கதான் வேனாம்னு சொலலிட்டீங்க, ” என்று சிமி இன்னும் குழந்தையாய் நிலவரம் புரியாது தன் அப்பாவுக்கு ஆறுதல் சொல்ல…

அவள் மாமனார் வந்து சத்யன் கைகளைப் பற்றி “ மாப்ளே தப்பு எங்க மேலயும் இருக்கு,, நீங்க சின்ன வயசுகாரர்னு தெரிஞ்சும் உங்களுக்கு மறு கல்யாணம் பண்ணாம விட்டது எங்க தப்பு… அதனால வந்த வினைதான் இவ்வளவும்… நான் நேத்து தர்மலிங்கத்துக்கு போன் பண்ணி கேஸை வாபஸ் வாங்கச் சொன்னேன்… அதுக்கு அவர் ‘ எல்லாம் கையை மீறி போயிருச்சு, எதுவும் என் கையில இல்லை எல்லாம் என் பிள்ளைகளோட ஏற்பாடு இதுல நான் தலையிட முடியாதுன்னு சொல்லிட்டாரு,, சரி எனக்கு தெரிஞ்ச ஆளுகளை பிடிச்சு உங்களை வெளிய எடுக்கலாம்னு பார்த்தா.. நீங்க வரவே முடியாதுன்னு சொல்றீகளாம்,, அப்படியென்ன மாப்ளே வைராக்கியம்” என்று வேதனையுடன் கூறினார்

சத்யன் யாருக்கும் எந்த பதிலும் சொல்லவில்லை, அவன் மனதில் இருந்ததெல்லாம் ‘ நான் இங்க இருக்குறதுதான் அவளுக்கு சந்தோஷம்’ என்பதுதான்..

பதினைந்து நாள் ரிமாண்ட் முடிந்து, மறுவிசாரணைக்காக சத்யனின் ரிமாண்டை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தார்கள்,

அவனை பார்க்க வந்த ராமைய்யா.. சவரம் செய்யப்படாத முகமும், அவனது அடர்த்தியான கிராப் எண்ணையின்றி கலைந்து காற்றில் அலைய, உடல் எடை குறைந்து துரும்பாய் இருந்தவனைப் பார்த்ததும் நெஞ்சு குலுங்க கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தார்..

பஞ்சவர்ணத்தம்மாள் மகனை அந்த கோலத்தில் பார்த்தால் உயிரை விட்டுவிடுவார் என்று ராமைய்யா அழைத்து போகவில்லை

சத்யன் சிறைக்கு சென்ற நாற்பதாவது நாள் பஞ்சவர்ணம் தோட்டத்தில் வேலையாக இருக்க மீனாள் வீட்டு வேலைக்காரப்பெண் மல்லிகா பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தாள்

See also  மான்சிக்காக - பாகம் 34 - மான்சி கதைகள்



“ என்ன மல்லிகா இம்பூட்டு வேகமா வர்ற” என்ற சின்னம்மாவை விலக்கி தள்ளிவிட்டு “ ஆத்தா கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றபடி பஞ்சவர்ணத்தை நெருங்கியவள் அவர் காதில் மூச்சிரைக்க மூச்சிரைக்க எதையோ சொல்ல… அதைகேட்ட பஞ்சவர்ணம் முகம் அதிர்ந்தது ..

“ என்னடி மல்லிகா நெசமாத்தான் சொல்றியா? ” என்றவரைப் பார்த்து “ ஆத்தா என் மூனு புள்ளைக மேல சத்தியமா சொல்றேன் நான் என் காதால கேட்டேன்… நீ உடனே அங்க போ ஆத்தா.. இல்லேன்னா அவுகலை தடுக்க முடியாது” என்று அந்தப் பெண் கலவரத்துடன் பஞ்சவர்ணத்தின் கையைப்பிடித்து இழுத்தாள்..

“ இரு மல்லிகா வர்றேன்” என்று அந்த பெண்ணுடன் தன் வயதை மறந்து ஓடினார் மகளின் வீட்டுக்கு…

வெகுநாட்கள் கழித்து மகளின் வீட்டு கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தவரை அந்த ஊரே வேடிக்கைப் பார்த்தது… ரெண்டு குடும்பத்துக்கும் இம்புட்டு பகை இருக்கும்போது இந்த கெழவி ஏன் இங்க வந்தது என்ற கேள்வி எல்லோர் பார்வையிலும் தொக்கி நின்றது …

பாதங்கள் கூச கதவை திறந்து உள்ளே போனவர் முதலில் கண்டது வாசற்படியில் இறங்கிக்கொண்டிருந்த மீனாவும் அவள் தோளில் சாய்ந்து கிடந்த மான்சியையும் தான்,,

தன் தாயைப் பார்த்தும் அதிர்ச்சியுடன் அப்படியே நின்றாள் மீனாள்… அவளுக்குப் பின்னால் கையில் கார் சாவியுடன் வந்த தருமன் மாமியாரை பார்த்துவிட்டு திகைப்புடன் நிற்க்க…

பஞ்சவர்ணம் வேகமாக வாசற்படியை நெருங்கினார்.. அவர்கள் அனைவரும் மேல்படியில் நின்றார்கள், பஞ்சவர்ணம் கீழே நின்று தனது மருமகன் முகத்தையே உற்றுப்பார்த்தார்



பிறகு இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை எடுத்து இரண்டு கையிலும் விரித்துப் பிடித்து… என்றுமே பேசியறியாத மருமகனிடம் ” அய்யா சாமி … என் குலதெய்வமே … நான் உங்ககிட்ட மடிப்பிச்சை கேட்குறேன்னய்யா,, என் குலம் விளங்கனும் என் குடி தழைக்கனும்..என் மவனுக்கு பொறவு ஆண் வாரிசு இல்லாமப் போன என் குடும்பத்துக்கு ஆண்டவனாப் பார்த்து ஒரு வாரிசை கொடுத்துக்கான் …அதை அழிச்சுப்புடாதீக சாமி,, உங்க கால்ல விழுந்து கேட்கிறேன் ” என்று கண்ணீருடன் கதறியவர் அந்த முந்தானையை தரையில் போட்டு அதில் நெடுஞ்சான் கிடையாக விழுந்தார்..

மேல்படியில் நின்றிருந்த தர்மன் மீனா. மான்சி ஆகிய மூவர் காலிலும் கீழ் படியில் விழுந்து யாசகம் கேட்டார் அந்த முதியவள்…

தன் மாமியாரின் முகத்தைப் பார்த்துகூட பேச தயங்கும் தர்மன் தன் காலில் விழுந்த மாமியாரைப் பார்த்து அதிர்ச்சியுடன் அதே படியில் அமர்ந்தார்

See also  மனசுக்குள் நீ - பாகம் 31 - மான்சி தொடர் கதைகள்

வெளியே கூடியிருந்த ஊர் மக்கள் கண்களிலும் கண்ணீர்… மீனா தன் தோளில் கிடந்த மகளை உதறிவிட்டு கீழே வந்து தாயைத் தூக்கி தன் தோளில் சாய்த்துக் ” அய்யோ அம்மா ஏன்மா கால்ல விழுந்த” என்று கலங்கினாள் …



தன் பாட்டியின் நிலையை கண்டு மான்சியின் விழிகளும் குளமானது.. ” அம்மாச்சி” என்று அழுதபடி இறங்கி வந்து தன் பாட்டியை மறுபக்கம் அணைத்துக்கொண்டாள்

அந்த மூன்று பெண்களின் கண்ணீரும் தர்மலிங்கத்தை கலங்க வைத்தது

” என் வேதனைகள் எல்லாம்…

” உன் விலகலால் தான்…

” முரட்டுத்தனமாய் நேசிக்கிறேன்…

” உன் முட்டாள்தனத்தையும் சேர்த்து!



Leave a Comment

error: read more !!
Enable Notifications OK No thanks